Monday, October 13, 2025

காலத்தால் அழியாத கானம் - "அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும் "


"அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும் 
ஆயுசுக்கும் நெனைச்சதெல்லாம் நடக்கணும் 
உன் மனசும் என் மனசும் ஒன்னு போல இருக்கணும் " - கவிஞர் மாயவநாதன் -

'காவல் தெய்வம்' ஜெயகாந்தனின் குறுநாவல். கைவிலங்கு என்னும் பெயரில் கல்கி சஞ்சிகையில் வெளியானது.  நடிகர் எஸ்.வி.சுப்பையாவின்  தயாரிப்பில் , கே.விஜயனின் இயக்கத்தில் வெளியான திரைப்படம். இசை - ஜி.தேவராஜ்.  பாடகர்கள் - தாராபுரம் சுந்தராஜன் & பி.சுசீலா. பாடல்களை எழுதியிருப்பவர் கவிஞர் மாயவநாதன்.  இவரது புகழ்பெற்ற பாடல்களில் நித்தம் நித்தம் மாறுவது எத்தனையோ,  தண்ணிலவு தேனிறைக்க, கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு,  சித்திரப்பூவிழி வாசலிலே ஆகியவை முக்கியமானவை.

இப்பாடலின் சிறப்பு - நட்சத்திர நடிகர்களின் ஆதிக்கம் மிகுந்த  திரையுலகில், முதிய நடிகரும், இளம் நடிகையும் ஆடிப்பாடும் சூழலில், இளம் நடிகர்களின் காதல் காட்சிகள் பசுமையாக, இயல்பாக, இனிய இளங்காலைப்பொழுதைப்போல் மகிழ்ச்சியைத் தருகின்றன. இளம் சிவகுமாரும், லட்சுமியும் தம் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் இப்பாடலின் ஒளிப்பதிவும் என்னைக் கவர்ந்தது. ஒவ்வொரு சட்டமும் நினைவில் நிற்கும் வகையில் எடுக்கப்பட்டதாக இப்பாடலைப் பார்க்கையில் உணர்ந்தேன். நீங்களும் உணர்வீர்கள். ஒளிப்பதிவாளர்  விஜயன். 

காவல் தெய்வம் படத்தின் இன்னுமொரு சிறப்பு - நடிகர் திலகம் கெளரவ் வேடத்தில் , ஆனால் நினைவில் நிற்கும் பாத்திரத்தில் கொலைக்குற்றவாளியான 'சாமுண்டி'யாக நடித்திருப்பார்.  ராணிமுத்து பிரசுரங்களின் தொடக்கக் காலத்தில் காவல் தெய்வம் என்னும் பெயரில் வெளியானது. 

https://www.youtube.com/watch?v=5-Z-s46dNB0&list=RD5-Z-s46dNB0&start_radio=1

டிஜிட்டல் ஓவியத்  தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி; VNG

No comments:

புகழ்பெற்ற நர்த்தகி குமாரி கமலாவும் மறைந்தார். ஆழ்ந்த இரங்கல்.

பாவை விளக்'கில் குமாரி கமலா: 'நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ?': நான் முதன் முதலாக குமாரி கமலாவை அறிந்துகொண்டது என் அப்பா, அம்மா ...

பிரபலமான பதிவுகள்