Sunday, January 11, 2026

வ.ந.கிரிதரன் பாடல் - ஊர் திரும்புதல்!


[வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1 -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.   பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி] 

வ.ந.கிரிதரன் பாடல் - ஊர் திரும்புதல்!

இசை & குரல் : AI SUNO  | ஓவியம்: AI

யுத்தம் முடிந்தது. ஊருக்குத் திரும்பினேன்.
எத்தனையோ கனவுகள் நிறைந்த மனத்துடன்.

மண்ணை விட்டுப் பிரிந்த போது
எண்ணத்தில் பதிந்த நினைவுகள் விரிய
மீண்டும் மண்ணைப் பார்க்கும் ஆவலில்
எண்ணப் பறவைகள் சிறகடித்துப்  பறந்தன.

யுத்தம் முடிந்தது. ஊருக்குத் திரும்பினேன்.
எத்தனையோ கனவுகள் நிறைந்த மனத்துடன்.

என்னுடன் படித்த , என்னுடன் திரிந்த
என்னினிய நண்பர்கள் எங்கே. எங்கே.
என்னுடன் திரிந்த நண்பர் எவரும்
எங்குமற்ற மண்ணைக் கண்டேன்.

Saturday, January 10, 2026

வ.ந.கிரிதரன் பாடல்: நல்ல நாள்!


வ.ந.கிரிதரன் பாடல்: நல்ல நாள்! 


இசை & குரல் : AI SUNO  | ஓவியம்: AI

பொழுது புலர்ந்தது. பூரித்தேன்.
எழுந்தேன் புதுநாளை வரவேற்று.

ஒவ்வொரு காலையும் புதுக்காலையே.
இவ்விதம் எண்ணி எழுந்தால்
நல்லநாள் எனவே விடியும்.
எல்லா இடரும் உலர்ந்துபோகும்.

பொழுது புலர்ந்தது. பூரித்தேன்.
எழுந்தேன் புதுநாளை வரவேற்று.


நடந்தவற்றை ஒதுக்கிக் கடப்போம்.
நடப்பவற்றை துதித்து ஏற்போம்.
நடப்பவை எல்லாமே இனிதாய்
நடக்கும் என்பதை அறிவோம்.

வ.ந.கிரிதரன் பாடல்; பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.


வ.ந.கிரிதரன் பாடல்; பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.

இசை & குரல் - Suno AI  ஓவியம் - AI

பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்.

மூடத்தனம் நிறைந்த உலகம் இது.
மூர்க்கம் நிறைந்த உலகம் இது.
போர்கள் நிறைந்த உலகம்  இது.
பிரிவுகள் மலிந்த உலகம் இது.

பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்.

வாயுக் குமிழ் போன்றது  நம் வாழ்வு.
ஓயும் வரையும் உணராமல் ஓடுகின்றோம்.
சாயும் வரையில் சரிபிழை தெரிவதில்லை.
மாயும் வரையில் சிந்திக்காமல் வாழுகின்றோம்.

பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்.

மண்ணைப் பங்கு  போட ஆசை.
பொன்னைப் பெருக்கப் பேர் ஆசை.
ஆசைகளை பூர்த்தி செய்ய ஆடுகின்றோம்.
அல்லும் பகலும் ஓயாது பறக்கின்றோம்.

பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்.

சமத்துவம் அற்ற உலகம் இது.
சமநீதி அற்ற உலகம் இது.
பகுத்து அறிவோம் மேலும் உயர்வோம்
வகுத்து வைப்போம் நல்லதோர் அமைப்பை.

பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்


*********************************************************
வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1 -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.   பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி. 

V.N. Giritharan Songs - https://www.youtube.com/@girinav1 - My songs with music and vocals by Artificial Intelligence. Listen and enjoy. Share your thoughts. If you like the songs, please don't forget to subscribe to the 'V.N. Giritharan Songs' channel. Your support will greatly help in the growth of this channel. Thank you.
***********************************************************

பெரியார், திராவிடம், தமிழ்மொழி பற்றி செயற்கை நுண்ணறிவுடன் விரிவான நேர்காணல். நேர்காணல் கண்டவர் : வ.ந.கி




நான்: 


பெரியார் ஆரியர் தமிழ் மொழியைத் தம் மொழியைக் கலந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பிரித்து விட்டதாகக் கருதுகின்றாரே?

செயற்கை நுண்ணறிவு AI:


ஆம், பெரியார் ஈ.வெ.ரா. ஆரியர்கள் தமிழ் மொழியைக் கலந்து, மற்ற திராவிட மொழிகளைப் பிரித்து விட்டதாகக் கருதினார் என்பது உண்மை. இது திராவிட இயக்கம் முன்வைத்த ஒரு முக்கியமான கோட்பாடு மற்றும் பெரியாரின் தமிழ் மொழி குறித்த பார்வையின் ஒரு முக்கிய அம்சமாகும்.

பெரியாரின் வாதம் சுருக்கமாக:

பெரியார் மற்றும் திராவிட இயக்கத்தினர் முன்வைத்த வாதத்தின் சாரம் இதுதான்:

    தமிழ் தான் மூல மொழி: திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ் தான் மிகவும் தொன்மையானதும், தனித்துவமானதுமான மூல மொழி என்று பெரியார் கருதினார். மற்ற திராவிட மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை தமிழிலிருந்து பிரிந்தவை என்றும், அல்லது தமிழின் கிளை மொழிகள் என்றும் நம்பினார்.

Thursday, January 8, 2026

வ.ந.கிரிதரனின் பாடல் -கல்லுண்டாய் நினைவுகள்!


வ.ந.கிரிதரனின் பாடல்  -கல்லுண்டாய் நினைவுகள்!
இசை & பாடல் - SUNO AI   ஓவியம் - Google AI


அதிகாலைகளில் , அந்திவேளைகளில் 
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.

நகருக்குப் படையெடுப்பர் தொழிலாளர்.
நானும் கூடவே சைக்கிளில் செல்வேன்.
அராலி வடக்கில் நான் வசித்தேன்.
அக்கால நினைவுகள் விரிகின்றன.

அதிகாலைகளில் , அந்திவேளைகளில் 
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.

அராலிப் பாலத்தில் இறால் பிடிப்பர்
அதிகாலையில் தொழில் செய்யும் தொழிலாளர்.
அங்குதான் வழுக்கியாறு கடலுடன் சங்கமிக்கும்.
அதுவோர் அகத்தின் இனிய நினைவு.;

அதிகாலைகளில் , அந்திவேளைகளில் 
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.

தொலைவில் நவாலி ம்ணற் குன்றுகள்.
தவமியற்றும் துறவிகள் போலிருக்கும்.
காற்றிலாடும் பசும் வயல்கள்.
கிளிகளும் கூட்டமாகப் பறக்கும்.

அதிகாலைகளில் , அந்திவேளைகளில் 
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.

தந்தை பெரியாரின் பார்வையில் தமிழரும், திராவிடரும், தென்னிந்தியரும்!


திராவிடம் என்னும் சொல் தமிழம் த்ரமிளம், த்ரவிடம், திரவிடம்,  திராவிடம் என்னும் வட சொல்லாக மீண்டும் தமிழுக்கு வந்த சொல்.இந்தியாவின் பூர்வ குடிகள் தமிழர். ஆரியர் தமிழரைத் திராவிடர் என்றழைத்தனர். வடக்கில் திராவிடரிடமிருந்து ஆதிக்கத்தைப் பெற்றதும் தமிழர்கள் (திராவிடர்) தென்னிந்தியாவில் ஒடுங்கினர். 
 
அவ்விதம் ஒடுங்கிய தமிழர் பேசும் மொழி இருக்கும் பிரதேசங்களுக்கேற்ப வேறுபாட்டுடன் விளங்கியது. இன்று கூட கோவை, மதுரை, தஞ்சாவூர்த் தமிழ் வித்தியாசமாக் இருக்குதல்லவா., அதுபோல். இவ்வேறுபாட்டைப் பாவித்து வடக்கில் திராவிடரை அடக்கிய ஆரியர் , தெற்கிலும் தம் மொழி, சமயம் இவற்றைப்பாவித்துத் தமிழைக் கன்னடம், தெலுங்கு, மலையாளமாக மேலும் பிரித்தனர், இது ஆரியர் தமிழைப்பலவீனப்படுத்தச் செய்தது. 

Wednesday, January 7, 2026

நூல் அறிமுகம் - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரின் 'திரவிடத்தாய்'


நூல் அறிமுகம் - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரின் 'திரவிடத்தாய்'


தமிழம் -> திரவிடம் -> திராவிடம்!

மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய நூல் 'திரவிடத்தாய்'. இதன் பதிப்பாசிரியர் புலவர் அ.நக்கீரன். திராவிடம் என்னும் சொல் தமிழம் என்னும் சொல்லிலிருந்து உருவான சொல் என்பது தேவநேயப் பாவாணரின் கருத்து,. இதனை வலியுறுத்தும் இந்நூல் முக்கியமானது.  

திராவிடம் என்று வடக்கு நாட்டவர்  தமிழை அழைத்தனர். அதனால்தான் கால்ட்வெல் தமிழிலிருந்து வந்த மொழிகளைத் திராவிட மொழிகள் என்றழைத்தார்.  அதாவது தமிழ் மொழிகல், தமிழை அடியாகக் கொண்ட  மொழிகள். முனைவர் அரியேந்திரன் மொழியியல் அறிஞர் தமிழ் வேர்ச்சொல்லிலிருந்து வடமொழி உட்படப் ஐரோப்பிய மொழிச் சொற்கள் பல தோன்றின என்பதையிட்டு ஆய்வுகள் பல செய்தவர். அவர்  பாவாணரின் வழி வந்தவர். 

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...