Sunday, December 10, 2023

(பதிவுகள்.காம்) அண்மையில் வெளியான வ.ந.கிரிதரனின் நூல்களைப் பற்றியதொரு சிறு குறிப்பு! - பரம்சோதி தயாநிதி -

 

- அண்மையில் வெளியான வ.ந.கிரிதரனின் நூல்களைப் பற்றிய தன் எண்ணங்களை அனுப்பி வைத்துள்ளார் கலை, இலக்கிய ஆர்வலரும், பொறியியலாளருமான  பரம்சோதி  தயாநிதி. -

நான் இலக்கியம் வாசிப்பது குறைவு. கிரிதரனின் புத்தக வெளியீட்டில் வாங்கிய புத்தகங்களின் பகுதிகளை சென்ற இரவுதான் வாசிக்க முடிந்தது. எனது மனதில் எழுந்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் ”ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்” என்னும் புத்தகத்தில் உள்ள 9 கவிதைகளை வாசித்தேன். அப்பொழுதுதான் முதன் முதலாக கிரிதரனுக்குள்ளே இருக்கும் கவிஞனைக்கண்டேன். பலர் கவிதை என்ற பெயரில் எவையெல்லாமோ எழுதும்போது இக் கவிதைகள் தரம் மிகுந்தவையாகக் காணப்பட்டன.

எனினும் வாசித்த இரு கவிதைகள் எனக்கு விளங்கவில்லை. “குதிரைத் திருடர்களே …… “ என்ற கவிதையில் குதிரைகள் என்பது எதன் அடையாளம் (symbol) என்பது விளங்கவில்லை. ”ஆனை பார்த்தவர்” என்ற கவிதை குழப்பத்தை ஏற்படுத்தியது. “கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்” என்பதைத் தான் இக் கவிதையில் குழப்பமாகக் கூறுகிறாரா என்று சந்தேகம் வந்தது.

'டைம்' சஞ்சிகையின் நூற்றிலொருவர் எம்.சஞ்சயன்!


முனவைர் எம்.சஞ்சயன் (M. Sanjayan) 'சர்வதேசப் பேணுப்படுதல்' (Conservation International) என்னும் அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி. அமெரிக்காவில் வசிப்பவர்.  'பேணப்படுதல்' துறையில் அறிவியல் அறிஞரான இவர் எழுத்தாளரும் கூட. தொலைக்காட்சிகளில் இத்துறையில் செயற்படும் இவர் இயற்கையைப் பேணுவதன் மூலம் மானுடரின் வாழ்வை வளப்படுத்த வேண்டுமென்று செயற்படுபவர். இவரது கட்டுரைகள்  Science, Nature & Conservation Biology போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன.  இவரது இயற்கையைப் பேணுதல் பற்றிய செயற்பாடுகளுக்காகவும், எழுத்துகளுக்காகவும் சர்வதேச ஊடகங்கள் பலவற்றின் கவனத்தை ஈர்த்திருப்பவர். 'சூழலியல் மற்றும் பரிணாம உயிரியல்' துறையில் . கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் ஓர் இலங்கைத் தமிழர்.  

அஞ்சலி: ரிவாட் அலாரீர் (Refaat Alareer)


பாலஸ்தீனக் கவிஞரும், காசாவிலுள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ரிவாட் அலாரீர் (Refaat Alareer) கடந்த புதன் இஸ்ரேல் காசா மீது நடத்திய குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து அவரது குடும்பத்தவர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இஸ்ரேலின் பலத்த குண்டுத்தாக்குதல்களுக்கு மத்தியிலும் கவிஞர் ரிவாட் அலாரீர் காசாவை விட்டு நீங்காமல் அங்கேயே தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த இரங்கல்.

Saturday, December 2, 2023

ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவலில் ஒரு காட்சி! - வ.ந.கிரிதரன் -


ஜெயகாந்தனின் மிகச்சிறந்த நாவல் 'ஒரு மனிதன்! ஒரு வீடு! ஒரு உலகம்!'. அதில் வரும் ஹென்றி மறக்க முடியாத மனிதன். மகத்தான மனிதன்.  விகடனின் 'ஒரு மனிதன், ஒரு வீடு , ஒரு உலகம்' தொடராக வெளிவந்த காலத்திலேயே விரும்பி வாசித்திருக்கின்றேன். அதனால் இவ்வோவியமொரு காலக்கப்பல். என்னை என் பால்ய பருவத்திற்கே காவிச்செல்லும் காலக்கப்பல்.

ஜெயகாந்தனின் நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் இதுதான். இதில்வரும் ஹென்றி பாத்திரம் தி.ஜானகிராமனின் 'மோகமுள்' பாபு, யமுனா' போல் மனத்தை ஈர்த்த பாத்திரம். நாவலில் தகப்பனின் கிராமத்துக்கு வரும் ஹென்றியின் அனுபவங்கள் மறக்க முடியாதவை. தந்தையுடன் 'பப்பா என்றழைத்து நடத்தும் உரையாடல்களை என்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை. அவ்வுரையாடல்களை வாசிக்கையில் என் பால்ய காலத்தில் வீட்டு முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அப்பாவின் சாறத்தில் படுத்திருந்தபடி , அண்ணாந்து விண்ணைப்பார்த்தபடி  ,  எதிரே விரிந்திருக்கும் விண்ணில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களைப்பற்றி, கோடிழுக்கும் எரிநட்சத்திரங்களைப் பற்றி, அவ்வப்போது விரையும் செயற்கைக்கோள்களைப் பற்றி உரையாடிய தருணங்களை என் மனம் அசை மீட்டிப் பார்க்கும்.  ஒரு நாவலின் வெற்றி இது போன்ற வாசக அனுபவங்களில்தாம் உள்ளது.

Saturday, November 25, 2023

வ.ந.கிரிதரனின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா! - குரு அரவிந்தன் -

சென்ற ஞாயிறு கனடாவில் நடைபெற்ற எனது மூன்று நூல்கள் வெளியீடு பற்றி எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய நிகழ்வுக் குறிப்பினை ஈழநாடு வாரமலர் தனது நவம்பர் 26, 2023 பதிப்பில் வெளியிட்டுள்ளது. குரு அரவிந்தனுக்கும், ஈழநாடு நிறுவனத்துக்கும் எனது நன்றி.
 

 
 
 

(பதிவுகள்.காம்) முதலாவது சந்திப்பு 50: உலகெங்கும் வாழும் இலக்கியவாதிகளை இணைக்கும் ‘ பதிவுகள் ‘ கிரிதரன் ! - முருகபூபதி -


- எழுத்தாளர் முருகபூபதி , யாழ் மாவட்டத்திலிருந்து  வெளியாகும் 'தீம்புனல்' வாரப் பத்திரிகையின் நவம்பர் 20, 2023 பதிப்பில் 'முதலாவது சந்திப்பு' தொடரில் 'உலகெங்கும் வாழும் இலக்கியவாதிகளை இணைக்கும் பதிவுகள்  கிரிதரன்' என்னும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை. பதிவுகள் இணைய இதழ் பற்றியும் என்னைப்பற்றியும்  எழுதியிருக்கின்றார். அவருக்கு என் நன்றி.

எழுத்துலகம் விசித்திரமானது. ஒரு எழுத்தாளரை மற்றும் ஒரு எழுத்தாளர் எளிதில் அங்கீகரித்துவிடமாட்டார். புராணத்தில் வரும் சிவனுக்கும் அரசவைப் புலவர் நக்கீரனுக்குமிடையே நிகழ்ந்த வாதம் பற்றி அறிவீர்கள்.

“ ஒரு பெண்ணின் கூந்தலின் மணம் எவ்வாறிருந்தால்தான் என்ன..? அதற்காக வாதப்பிரதிவாதமா..? அதற்காக நெற்றிக்கண்ணால் சுட்டு பொசுக்க வேண்டுமா..? இதுவும் வன்முறைதானே ! “ என்று இன்றைய எமது குழந்தைகள் வினா தொடுக்கிறார்கள். அடுத்துவந்த, கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் மத்தியில் நிகழ்ந்த வாதங்களும் பேசப்பட்டுள்ளன. மொத்தத்தில் எழுத்துலகம் விமர்சனம், அவதூறு, மோதல், எதிர்வினை, தாக்குதல் எனத்தொடருகின்றது. முகநூல் அறிமுகமானதன் பின்னர், நிலைமை மேலும் மோசமாகியிருக்கிறது. இந்தப்பின்னணிகளுடன்தான், கனடாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் பதிவுகள் இணைய இதழை தங்கு தடையின்றி நடத்திவரும் வ. ந. கிரிதரன் அவர்களை அவதானிக்கின்றேன்.

Friday, November 24, 2023

வ.ந.கிரிதரனின் 'நவீன விக்கிரமாதித்தன்' நாவலை முன் வைத்து.... - சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) -


- அண்மையில் நிகழ்ந்த வ.ந.கிரிதரனின் மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வில் சமூக, அரசியற் செயற்பாட்டாளர் சிவா முருகுப்பிள்ளை  (ஈஸ்வரமூர்த்தி) ஆற்றிய உரையிது. -


மூன்று விதமான அறிமுகங்களாக  என் பேச்சை ஆற்றலாம் என்றுள்ளேன்.  புத்தக வெளியீட்டின் அழைப்பிதழில் அறிமுகம் என்றாக சொல்லப்பட்டிருப்பதால் அறிமுகம் என்ற விடயத்திற்குள் அதிகம் எனது பேச்சைச்  சுருக்க விரும்புகின்றேன். ஆனால் இதற்குள் சிறிய அளவில் புத்தகம் பற்றிய எனது பார்வையை எனது வாசிப்பின் அடிப்படையில் இணைக்கின்றேன். முதலில்  அது என் அறிமுகம் , புத்தக ஆசிரியர் வந கிரிதரன் பற்றிய அறிமுகம் , இறுதியாக புத்தகம் பற்றிய அறிமுகமாக இருக்கும்.

முதலாவதாக என்னைப் பற்றிய அறிமுகம்.  இலக்கியம் என்பதற்கு எனக்கு வரவிலக்கணம் தெரியாது.  கபொத சாதாரண தர  வரையில் தமிழை ஒருபாடமாக கற்று இறுதிப் பரிட்சையில் மிகக்குறைந்த சாதாரண சித்தியை மட்டும் பெற்றவன். மக்களே என் ஆசான்கள் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை அனுபவங்களே எனக்கான வழிகாட்டி. இவற்றின் அடிப்படையில் எனது தாய் மொழில் எழுதுகின்றேன் மேடைகளில் பேசுகின்றேன் கலந்துரையாடல்களில் ஈடுபடுகின்றேன். மக்களிடம் இருந்து கற்றவையை செழுமைப்படுத்தி மக்களின் மன்னேற்றத்திற்காக அவர்களிடமே அதனை சமர்பிக்கின்றேன் . நான் கற்றலுக்குத் தயாராக இருக்கும் மாணவன்தான்.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...