Friday, July 26, 2024

ஆழ் மனக்குதிரையை அடக்கு நண்பா.. - வ.ந.கிரிதரன் -

- இசை & குரல்: AI SUNO -- 

வயலின், மிருதங்கம், புல்லாங்குழல் ஒரு குறிப்பிட்ட தென்னிந்திய  இராகம் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த இராகம் என்பதை உங்கள் எதிர்வினையில் எடுத்துரையுங்கள்.

- யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=2tx9Umyqfos -

நான் எண்ணங்களை நம்புபவன்.நண்பா.
நான் எண்ணங்களின் வலிமையினை நம்புபவன்.

தறி கெட்டலையும் ஆழ்மனக் குதிரை.
தறி கெட்டலையும் குதிரையை
அடக்க நீ கற்றுக்கொள் நண்பா.
அடக்க நீ கற்றுக்கொள் நண்பா.

நான் எண்ணங்களை நம்புபவன்.நண்பா.
நான் எண்ணங்களின் வலிமையினை நம்புபவன்.

ஆழ் மனக்குதிரையை அடக்க முயன்றால்
அது அடங்க மறுக்கும்,. முரண்டு பிடிக்கும்.
எது நீ செய்து அடக்க நினைத்தாலும்
அது எதிர்த்து நிற்கும். முரண்டு பிடிக்கும்.

நான் இயற்கையின் குழந்தை. - வ.ந.கிரிதரன் -




          - இசை & குரல்: AI SUNO

- யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=FeE8oTHqEhY

 

நான் இயற்கையின் குழந்தை. - வ.ந.கிரிதரன் -

நான் இயற்கையின் குழந்தை.
நான் இயற்கையின் குழந்தை.

இயற்கையை எப்போதும் இரசிப்பவள்
நான்.
 
இரவுவானை, அதில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை
எத்தனை முறை இரசித்தாலும் உள்ளம் அடங்குவதில்லை.
இரவு முழுவதும் இரசித்துக் கொண்டிருக்கவும் முடியும்.
விடியும் வரை இரசித்துக் கொண்டிருந்ததும் உண்டு.

சுயமரியாதை இழக்காதே தோழா! - வ.ந.கிரிதரன்


- இசை & குரல்: AI SUNO  -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=7sTQsfrXv-o&feature=youtu.be

சுயமரியாதை இழக்காதே  - வ.ந.கிரிதரன் -

காலப்பெருங்கடலில் சிறு துளி
ஞாலத்தில் நம் இருப்பு.

சுயமரியாதை இழக்காதே  ஒருபோதும் தோழா.
சுயமரியாதை இழக்காதே ஒருபோதும்  தோழா!
சுய மரியாதை இழக்காதே. ஒரு போதும்
சுய மரியாதை இழக்காதே. ஒரு போதும்
தோழா. ஒரு போதும்.

உனது நோக்கில் தெளிவிருந்தால்
உனது நோக்கில் உண்மையிருந்தால்
ஊர் கூடி எதிர்த்தாலும்
உருக்குலைந்து போகாதே.
உறுதியுடன் எதிர்த்து நில். தோழா!
எதிர்த்து நில்.
எதிர்த்து நின்றால் உன்
எதிர்காலம் ஒளிமயமாகும்.
ஆம். தோழா!
எதிர்காலம் ஒளிமயமாகும்.

Thursday, July 25, 2024

கல்லுண்டாய்ப் பயணங்கள்! - வ.ந.கிரிதரன் -




- இசை & குரல் : AI SUNO -


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=vMKKhohyGt0

கல்லுண்டாய்ப் பயணங்கள்!  - வ.ந.கிரிதரன் -

கல்லுண்டாய் வீதியில்
காலையும் மாலையும்
பயணிப்பேன்.சைக்கிளில்
களிப்பூட்டும் பயணங்கள்
என்
கல்லுண்டாய்ப் பயணங்கள்.

காற்று வீசும்.
கீழ் வானின் கதிர் உதிக்கும்.
குருவிகள் காலையை வரவேற்கும்,
வாழ்த்துப்பா இசைக்கும் பொழுது

நான் பயணத்தைத் தொடங்குவேன்.
நகர் நோக்கிய பயணம்
 யாழ்ப்பாண
நகர் நோக்கிய பயணம்.

Wednesday, July 24, 2024

மேப்பிள் மண்ணின் மைந்தர்கள்! - வ.ந.கிரிதரன் -



இசை & குரல்: AI SUNO -

இக்கவிதை எனது முதலாவது கவிதைத்தொகுப்பான , மங்கை பதிப்பக வெளியீடாக கனடாவில் வெளியான 'எழுக அதிமானுடா' தொகுப்பில் உள்ளது.
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=DgKD70RyBW0

 
மேப்பிள் மண்ணின் மைந்தர்கள்! - வ.ந.கிரிதரன் -
 
பனிமழை பொழிந்து,
பாதையெல்லாம் ஒரே சறுக்கல்.
ளிரோ உடலைக்
குற்றியபடி ஒரே
குதியாட்டம்.

Toronto' மாநகரின்
அழகானதோர் அவென்யு
யூனிவர்சிட்டி அவென்யு.
அகன்ற சாலை,
அதன் நடுவே
அழகான் சிலைகள்,
நீரூற்றுகள், மரங்கள்..

காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்! - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

எனது இக்கவிதை பதிவுகள், திண்ணை இணைய  இதழ்களில் வெளியானது. யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=KQHxnAmKGsQ
 
காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்!  - வ.ந.கிரிதரன் -
 
விண்ணில் புள்!
மண்ணில் புள்!
வனத்தில் புள்!
மனத்தில் புள்!

புள்ளினம் பறந்து செல்லும்.
உள்ளமோ சிறகடிக்கும்.

அவற்றை
அவதானிப்பதில்
அளப்பரிய இன்பம்.
புல்லரிப்பில் களிக்குமென்
உள்ளம்.

இறகசைப்பின் விரிவு கண்டு
ஒரே பிரமிப்பு!
அழுத்த வேறுபாடுகளை 
அவை கையாளும் இலாவகம்!

எத்துணை அறிவு!

புள்ளினம் தந்திரம் மிக்கவை.
சிறகசைத்தலற்று விண்ணோக்கி
அல்லது மண் நோக்கி விரைதலில்
அவை பாவிக்கும் அறிவின் ஆழம்..
பிரயோகிக்கும் அறிவியலின் புரிதல்…
இவை கண்டு வியக்காமல் ஒருவரால்
எவ்விதம் இருக்க முடியும்?

கவிதை; காலவெளிச்சித்தனின் மடலொன்று! - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=_IO-N784Mf0


கவிதை; காலவெளிச்சித்தனின் மடலொன்று!  - வ.ந.கிரிதரன் -
 
ஒளிக்கூம்புக்குள்
விரிந்து ,
சுருங்கி,
மீண்டும் விரிந்து
கிடக்குமென் அண்டம்.

அடியே! அண்டத்தில்
நீ இங்கெங்கு சென்றிடினும்
உன்னால் ஒருபோதுமே என்னிடமிருந்து
மறைந்துவிடவே முடியாதடி.

ஏனென்று கேட்கின்றாயா?
நீயே அறிந்துகொள்
நீயே புரிந்துகொள்
என்று நானுனக்குக்கூறிடப் போவதில்லை.
உன் சிந்திக்குமறிவுக்கும் வேலை
வைக்கப்போவதில்லை.

புத்தாக்கம் செய்வோம்! பாதிப்புகளைக் குறைப்போம்! இணைந்து வாழ்வோம்!

  காலத்துக்குக் காலம் புதுப் புதுத்  தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும் தருணங்களில் சமூக, ஊடகங்களில் புதிய சூழலியற் போராளிகள் உருவாகிவிடுகின்றனர...