Monday, August 5, 2024

கனவில் வந்தாய்! (பெண் குரல்) - வ.ந.கிரிதரன் -


                                                           - இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=HMvwPQdqfiA

கனவில் வந்தாய்!  - வ.ந.கிரிதரன் -

கனவில் வந்தாய் அன்பே என் அதிகாலைக்
கனவில் வந்தாய்

உன்னைக் காணாமல் உருகும் நெஞ்சுக்கு
உன் வருகையால் ஒத்தடம் தந்தாய்.
என்னை மறக்க வைத்தாய்
உன்னை நினைக்க வைத்தாய்.

கனவில் வந்தாய் அன்பே.  என் அதிகாலைக்
கனவில் வந்தாய்

நிச்சயம் உன் ஆழ் நினைப்போ
அச்சமயம் கனவைத் தந்ததோ நானறியேன்.
உண்மை அன்பு நினைக்க வைக்கும்
நினைப்பவரை நினைக்க வைக்கும் என்பாய் நீ.

Sunday, August 4, 2024

எண்ணம் நிறைவேறும் - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

இது ஒரு காதல் பாடல். காதலர்கள் உரையாடுவது போன்று அமைந்த பாடல். ஆண், பெண் குரலை வேறு படுத்திக் காட்டுவதில் SUNO சிரமம் தருகின்றது. நண்பர்களே! ஆணும், பெண்ணும் இணைந்து பாடுகையில்; , குரல்களை வேறுபடுத்திப் பாடலை SUNO மூலம் இலகுவாக உருவாக்கும் வழிகள் உள்ளனவா? அநேகமான சமயங்களில் SUNO குரல்களை மாற்றி விடுகின்றது. யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=xJ4HZTrBaXA

ஆண்:

எங்கோ பிறந்தாய். அன்பே! எங்கோ வளர்ந்தாய்.
இங்கு வந்தாய். என் மனம் கவர்ந்தாய்.
நேற்று வரை உன்னை அறியேன் அன்பே.
இன்றோ என்னில் பாதி.

Saturday, August 3, 2024

SRS தமிழ் வானொலியின் விமர்சன அரங்கத்தில் வ.ந.கிரிதரனின் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத் தொகுப்பு பற்றிய விமர்சனம்.


 

பதிவுகள்.காம் வெளியீடாக வெளியான எனது கவிதைத் தொகுதியான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' தொகுப்புக்கு எழுத்தாளரும், திறனாய்வாளருமான ரஞ்ஜனி சுப்பிரமணியம் எழுதிய விமர்சனம் SRS தமிழ் வானொலியின் விமர்சன அரங்கத்தில் ஒலி பரப்பாகியுள்ளது. அதனை ஒலி வடிவில் வழங்கியவர் நாடகவியலாளர் ஆனந்தராணி பாலேந்திரா.

சிறப்பாக எனது கவிதை நூலுக்கு விமர்சனம் எழுதிய ரஞ்ஜனி சுப்பிரமணியம் அவர்களுக்கும், அதனைச் சிறப்பாக வாசித்த நாடகவியலாளர் ஆனந்தராணி பாலேந்திரா அவர்களுக்கும், இதற்குச் சந்தர்ப்பம் வழங்கிய SRS தமிழ் வானொலியின் 'விமர்சன அரங்க'த்துக்கும் என் நன்றி. -
விமர்சன உரையினைக் கேட்பதற்கான  இணைய இணைப்பு - 

             https://www.youtube.com/watch?v=DSLCdTHruDM

'ஒரு நகரத்து  மனிதனின் புலம்பல்'  கவிதைத் தொகுப்பினை வாசிக்க - https://noolaham.net/project/1139/113856/113856.pdf

 


 

Friday, August 2, 2024

அறிஞர் அண்ணா! - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல்: AI SUNO -


என் ஆளுமையில் அறிஞர் அண்ணாவுக்கும் முக்கிய பங்குண்டு. வெகுசனப் படைப்புகள் -> திராவிட முன்னேற்றக் கழக எழுத்துகள் -> மார்க்சியப் புரிதல் என என் ஆளுமை பரிணாமடைந்து வந்துள்ளது. 

பதின்ம வயதுகளில் அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் உரைகள் இளைஞர்களை ஆட்டிப் படைத்தன. தேடித் தேடி வாசித்தோம். இளைஞர்கள் நூலகங்களை அண்ணா அறிவகம் என்னும் பெயரில் ஆரம்பித்தார்கள்.

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=4CQZe3j8eQI

அறிஞர் அண்ணா!  - வ.ந.கிரிதரன் -

சமூகத்து மூட நம்பிக்கைகளை
சுட்டெரித்தவர் அறிஞர் அண்ணா.

'ஏ தாழ்ந்த தமிழகமே!
எம்மைப் பிரமிக்க வைத்தது.
எம்மைச் சிந்திக்க வைத்தது.
எங்கும் நிலவிக் கிடக்கும்
ஏற்றத் தாழ்வுகளை எடுத்துரைத்தது.

'எதையும் தாங்கும்  இதயம் வேண்டும்'

'நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.
நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.'

'ஒன்றே குலம். ஒருவனே தேவன்'

அண்ணாவின் மொழியை மாந்திக் கிடந்தோம்.
அதில் களிவெறி கொண்டு கிடந்தோம்.

Thursday, August 1, 2024

கவிதை: இந்த மனிதர்! இந்த உலகம்! இந்தப் பிரபஞ்சம்! - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

- இக்கவிதை 5/3/1983 அன்று என் குறிப்பேட்டில் எழுதப்பட்ட கவிதை. இக்கவிதையை யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=h0ZL-aFAXSk

இந்த மனிதர்! இந்த உலகம்! இந்தப் பிரபஞ்சம்!  

ஆ...இந்த மெல்லிய இளந்தென்றல்...
இடையில் கலந்து வருமெழில் மலர்களின்
சுகந்த நறுமணம்...
பசுமை மண்டிக் கிடக்கும் வயல்வெளிகளில்
பாடிப் பறந்திடும் வானம்பாடிகளின்
இன்ப கானங்கள்...
ஆகா! ஆகா! ஆகா!
எத்துணை இனிமையானவை!
எத்துணை இன்பமானவை!

பதுங்கிக் காடுகளில் புகுந்துவரும்
நதிப்பெண்களே!
நான் உங்களை எவ்வளவு காதலிக்கிறேன்
தெரியுமா? இளமை கொஞ்சுமுங்களெழிற்
துள்ளல் நடைகண்டு மோகத்தீயாலெந்தன்
நெஞ்சம் வேகுகின்றதே! புரியவில்லையா
பெண்களே!

Wednesday, July 31, 2024

காலவெளிக்காட்டி வல்லுனன்! - வ.ந.கிரிதரன் -



           - இசை & குரல்: AI SUNO -

பதிவுகள்.காம் வெளியீடான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள இக்கவிதை. ஒரு சில மாற்றங்களுடன் பாடலாக்கப்பட்டுள்ளது. யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=DQRDqnJPwUU

காலவெளிச் சட்டங்களைக் கோத்து உருவானது
இந்த இருப்பு கண்ணம்மா!

இவ்விருப்பும் ஒரு காலவெளிப் படம்
என்பதையுணர்வாயாயடி நீ கண்ணம்மா.

என்னாசை ஒன்று உள்ளதென்பேன்.
என்னவென்று நீ அறியின் நகைக்கக்கூடும்.
கண்ணம்மா, நகைக்கக் கூடும்

அப்போது கண்ணம்மா! அதிகாலைநேரம்.
ஆடியசைந்து நீ வந்தாய் பொழுதின் எழிலென.
அது நினைவிருக்கிறதா? உனக்கு.
அது நினைவிருக்கிறது எனக்கு கண்ணம்மா..

நாங்கள் கவிகள்! - வ.ந.கிரிதரன் -




- இசை & குரல்: AI SUNO -

1980இல் தினகரன் (இலங்கை) பத்திரிகையின் கவிதைச் சோலை பகுதியில் வெளியான எனது கவிதைகளான 'சீடர்கள்' , ' எதிர்பார்ப்பு' ஆகிய இரு கவிதைகளையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது இக்கவிதை..  யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=2BoJqz8w87s

நாங்கள் கவிகள்
புல்லின் நுனிகளில் பொலிந்திடும் எழிலினில்
மெல்லிய முருங்கைகளில் தொங்கிடும்
தூக்கணாங் குருவிக் கூடுகளின்
இனிமையான அழகுகளில்
மெய்ம்மறந்திடும்  எங்கள் நெஞ்சங்கள்;
சோகங்கள் கண்டு நகருகையில்
அமைதி அடைவதில்லை.
வாழ்க்கைக் காடுகளில் வழிமாறித் துடித்திடும்
மனித ஜீவன்களுக்கு
வழிகாட்டுதற்காய், கவி வடித்திடும் வழிகாட்டிகள்
நாங்களே!

புத்தாக்கம் செய்வோம்! பாதிப்புகளைக் குறைப்போம்! இணைந்து வாழ்வோம்!

  காலத்துக்குக் காலம் புதுப் புதுத்  தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும் தருணங்களில் சமூக, ஊடகங்களில் புதிய சூழலியற் போராளிகள் உருவாகிவிடுகின்றனர...