Monday, August 26, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கையைப் பேணுவோம்.


இசை & குரல்: AI SUNO| ஓவியம்: AI

இயற்கையைப் பேணுவோம். 


இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

விரிந்து கிடக்கிறது இயற்கை எங்கும்.
விரியும் அழகில் என்னை மறக்கின்றேன்.
விரிவான் என்னை எப்பொழுதும் மயக்கும்.
வியக்க வைக்கும் பசுமைமிகு வயல்கள்.

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

என்னை மறப்பதில் புத்துணர்வு ஊறுமே.
தன்னை மறப்பதில் பெருகுவதும் இன்பமே.
இருப்பைக்  களிப்புடன் தொடர வைக்கும்
இயற்கையை எப்பொழுதும் விரும்புவேன் நான்.

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

வ.ந.கிரிதரனின் பாடல்: காலையின் வருகை.



  இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -

காலையின் வருகை!

காலைக் கதிரொளி கிழக்கில் தெரியும்.
நாளின் பிறப்பை நமக்கு எடுத்துரைக்கும்.

எங்கும் புத்துணர்ச்சி. எதிலும் புத்துணர்ச்சி.
பொங்கிப் பெருகும் புத்துணர்ச்சி எங்கும்.
காலையின் பண்பு புத்துணர்வு ஆகும்.
நாளைத் தொடங்குவதற்கு நல்கும் செயலாகும்.

காலைக் கதிரொளி கிழக்கில் தெரியும்.
நாளின் பிறப்பை நமக்கு எடுத்துரைக்கும்.

வ.ந.கிரிதரன் பாடல் - மழை போல் பொழிவோம்!


- இசை & குரல்: AI | ஓவியம்: AI -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=SWvb2fkyxa4

 மழை போல் பொழிவோம்!

மழை பொழியும் இரவென்றால்
மகிழ்ச்சியில் ஆழ்வேன் எப்பொழுதும்.

சட்டச் சடவெ\ன்றே சப்திக்கும்
ஓட்டுக் கூரையின் ஓசையிலே
கட்டுண்டு கிடந்திடுவேன் அப்போது.
களிதரும் பொழுது அதுவாகும்.

மழை பொழியும் இரவென்றால்
மகிழ்ச்சியில் ஆழ்வேன் எப்பொழுதும்.

Sunday, August 25, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - தர்க்கம் செய்வோம். ஞானம் பெறுவோம்.


                                           - இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=zrIMuysVSN0

தர்க்கம் செய்வோம். ஞானம் பெறுவோம்.

தனிமைப் பொழுதுகளில் இனிமை காண்போம்.
தர்க்கம் செய்வோம். ஞானம் பெறுவோம்.

ஆகாயம் பார்த்து நிற்கும் பொழுதுகள்
ஆகர்சிப்பவை என்னை எப்போதும் எப்போதும்.
விரிவெளியில் என்னிருப்பு எவ்விதம் இவ்விதம்?
விடைநாடி வினாக்கள் எழும் பொழுதுகள்.

தனிமைப் பொழுதுகளில் இனிமை காண்போம்.
தர்க்கம் செய்வோம். ஞானம் பெறுவோம்.

வ.ந.கிரிதரன் பாடல் - வாழ்க்கை எனும் சதுரங்கம்!

 


- இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -

வாழ்க்கை எனும் சதுரங்கம்!

சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமொரு விளையாட்டே.

சதுரங்கத்தில் வெற்றி பெறுவதற்கே
சிந்தித்து நகர்தல் முக்கியமே.
மண்ணில் வெற்றி பெறுவதற்கே.
எண்ணி நகர்தல்; அவசியமே.

சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமிங்கே விளையாட்டே.

Saturday, August 24, 2024

'கலைக்கதிர்' வெளியிட்ட அறிவியல் நூல்கள்! - வ.ந.கிரிதரன் -



 
என் இளமைப்பருவத்தில் நான் யாழ் பொதுசன நூலகத்தில் இரவல் பெற்று பல அறிவியல் நூல்களை வாசித்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில் அறிவியல்  கட்டுரைகளைத் தாங்கி வெளியான கலைக்கதிர் சஞ்சிகையினையும் விரும்பி வாசித்திருக்கின்றேன்.  கோவையிலிருந்து ஜி.தாமோதரன் என்னும் பொறியியலாளர் வெளியிட்ட சஞ்சிகை.  பல தசாப்தங்களுக்குப் பின்னர் நினைவு கூர்கையில் எனக்கு அன்று வாசித்த அறிவியல் நூல்களை வெளியிட்ட பதிப்பகத்தின் பெயர் சரியாக நினைவுக்கு வராமலிருந்தது. அக்காலகட்டத்தில் சென்னையிலிருந்து இயங்கிக்கொண்டிருந்த சைவ சித்தாந்த நூற் பதிப்பகத்தினரும் பல மேனாட்டு செவ்வியல் படைப்புகளைச் சிறுவர்களுக்கேற்ற வகையிலான மொழிபெயர்ப்பு நடையில் வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள்.

இந்தக் குழப்பத்துக்கு ஒரு தீர்வு கிட்டியது. அன்று நான் வாசித்த பெரும்பாலான அறிவியல் நூல்களை வெளியிட்டது கலைக்கதிர் நிறுவனமே, அண்மையில் பழைய கலைக்கதிரொன்றினை இணையத்தில் வாசிக்கக் கிடைத்தபோது அப்பிரதியில் அவர்கள் வெளியிட்ட நூல்கள் சிலவற்றின் பட்டியலைப் பார்த்தபோதே இவ்விதம் இதனை அறிய முடிந்தது.

நாவல்: அமெரிக்கா! - வ.ந.கிரிதரன் -


                                                                               - ஓவியம் - AI -

- மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது 'அமெரிக்கா' என்னும் நாவலையும் (அளவில் சிறியதானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே 'பொந்துப்பறவைகள்' மற்றும் 'மான் ஹோல்' தவிர , கனடாவிலிருந்து வெளியான 'தாயகம்' பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது).மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இது இந்நாவலின் திருத்தப்பட்ட பதிப்பு.- வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் ஒன்று: இளங்கோவின் பயணம்!

உலகப்புகழ்பெற்ற நியூயார்க் மாநகரின் ஒரு பகுதி புரூக்லீனின் ஓர் ஓரத்தே, கைவிடப்படும் நிலையிலிருந்த , பழைய படையினரால் பாவிக்கப்பட்ட கட்டடத்தின் ஐந்தாம் மாடி. அந்தக்கட்டடத்திற்கு எத்தனை மாடிகள் உள்ளன என்பதே தெரியாது. எனக்குத்தெரிந்ததெல்லாம் நான் இருந்த கட்டடத்தின் பகுதி ஐந்தாவது மாடி என்பது மட்டும்தான். என்னைப்பொறுத்தவரையில் இந்த ஐந்தாவது மாடி அமெரிக்காவைப்பொறுத்தவரையில் இன்னுமோர் உலகம். 'ஒய்யாரக்கொண்டையாம், தாழம்பூவாம். உள்ளேயிருப்பது ஈரும், பேனும்' என்பார்கள். எனது அமெரிக்கப்பிரவேசமும் இப்படித்தான் அமைந்து விட்டது. உலகின் செல்வச்செழிப்புள்ள மாபெரும் ஜனநாயக நாடு! பராக்கிரமம் மிக்க வல்லரசு! இந்த நாட்டில் காலடி எடுத்து வைக்கும் மட்டும் எனக்கு அமெரிக்கா ஒரு சொர்க்க பூமிதான். மனித உரிமைகளுக்கு மதிப்புத்தருகின்ற மகத்தான பூமிதான். ஆனால், என் முதல் அனுபவமே என் எண்ணத்தைச்சுட்டுப்பொசுக்கி விட்டது. ஒரு வேளை என் அமெரிக்க அனுபவம் பிழையாகவிருக்குமோ என்று சில வேளை நான் நினைப்பதுண்டு. ஆனால் மிகுந்த வெற்றியுடன் வாழும் என்னினத்தைச்சேர்ந்த ஏனைய அமெரிக்கர்களை எண்ணிப்பார்ப்பதுண்டு. உண்மைதான்! பணம் பண்ணச்சந்தர்ப்பங்கள் , வெற்றியடைய வழிமுறைகள் உள்ள சமூகம்தான் அமெரிக்க சமூகம். ஆனால் அந்தச் சமுதாயத்தில்தான் எனக்கேற்பட்ட அனுபவங்களும் நிகழ்ந்தன என்பதையும் எண்ணித்தான் பார்க்கவேண்டியிருக்கிறது. சுதந்திரதேவி சிலை நீதி, விடுதலை, சம உரிமையை வலுயுறுத்துகிறது. அமெரிக்க அரசியலமைப்பும்  மனிதரின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்துகிறது.  இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை. வெளியிலிருக்கும் மட்டும் அப்படித்தானிருந்தது. எல்லாம் உள்ளே வரும் மட்டும்தான்.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...