"அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும்
ஆயுசுக்கும் நெனைச்சதெல்லாம் நடக்கணும்
உன் மனசும் என் மனசும் ஒன்னு போல இருக்கணும் " - கவிஞர் மாயவநாதன் -
'காவல் தெய்வம்' ஜெயகாந்தனின் குறுநாவல். கைவிலங்கு என்னும் பெயரில் கல்கி சஞ்சிகையில் வெளியானது. நடிகர் எஸ்.வி.சுப்பையாவின் தயாரிப்பில் , கே.விஜயனின் இயக்கத்தில் வெளியான திரைப்படம். இசை - ஜி.தேவராஜ். பாடகர்கள் - தாராபுரம் சுந்தராஜன் & பி.சுசீலா. பாடல்களை எழுதியிருப்பவர் கவிஞர் மாயவநாதன். இவரது புகழ்பெற்ற பாடல்களில் நித்தம் நித்தம் மாறுவது எத்தனையோ, தண்ணிலவு தேனிறைக்க, கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு, சித்திரப்பூவிழி வாசலிலே ஆகியவை முக்கியமானவை.
இப்பாடலின் சிறப்பு - நட்சத்திர நடிகர்களின் ஆதிக்கம் மிகுந்த திரையுலகில், முதிய நடிகரும், இளம் நடிகையும் ஆடிப்பாடும் சூழலில், இளம் நடிகர்களின் காதல் காட்சிகள் பசுமையாக, இயல்பாக, இனிய இளங்காலைப்பொழுதைப்போல் மகிழ்ச்சியைத் தருகின்றன. இளம் சிவகுமாரும், லட்சுமியும் தம் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் இப்பாடலின் ஒளிப்பதிவும் என்னைக் கவர்ந்தது. ஒவ்வொரு சட்டமும் நினைவில் நிற்கும் வகையில் எடுக்கப்பட்டதாக இப்பாடலைப் பார்க்கையில் உணர்ந்தேன். நீங்களும் உணர்வீர்கள். ஒளிப்பதிவாளர் விஜயன்.
காவல் தெய்வம் படத்தின் இன்னுமொரு சிறப்பு - நடிகர் திலகம் கெளரவ் வேடத்தில் , ஆனால் நினைவில் நிற்கும் பாத்திரத்தில் கொலைக்குற்றவாளியான 'சாமுண்டி'யாக நடித்திருப்பார். ராணிமுத்து பிரசுரங்களின் தொடக்கக் காலத்தில் காவல் தெய்வம் என்னும் பெயரில் வெளியானது.
https://www.youtube.com/watch?v=5-Z-s46dNB0&list=RD5-Z-s46dNB0&start_radio=1
டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி; VNG
Monday, October 13, 2025
காலத்தால் அழியாத கானம் - "அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும் "
Sunday, October 12, 2025
உண்மை உரைக்கும் ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன!
![]() |
| ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன! |
இலங்கை சுதந்திரமடைந்து சென்ற ஆண்டு அநுர குமார திசாநாயக்க ஆட்சியில் அமரும் வரையிலான காலகட்டம் பாரம்பரிய இலங்கை அரசியல்வாதிகளால் இனவாதம், மதவாதம், தேசியவாதம் ஆகியவற்றைப் பாவித்து அதிகாரத்தைக் கைப்பற்றும் காலகட்டமாக இருந்துள்ளது. பிரதான ஊடகங்களின் சூத்திரதாரிகளாக மேற்படி அரசியல்வாதிகளே இருந்து வந்தனர்.அதனால் நாட்டு மக்களுக்கு, குறிப்பாகத் தென்னிலங்கை மக்களுக்கு நாட்டின் வடகிழக்கில், மலையகத்தில் , தமிழ், முஸ்லிம் மக்கள் சம்பந்தப்பட்ட அரசியல் இவையெல்லாம் பற்றிய உணமை நிலை தெரியாததொரு சூழல் நிலவியது. இன்று முதன் முறையாக அந்தச் சூழல் மாறியுள்ளது. இது வரவேற்கத்தக்க, ஆரோக்கியமானதொரு சூழல். இச்சூழல் தொடர்ந்தும் நிலைத்திருப்பதே நாட்டின் நல்லதோர் எதிர்காலத்துக்கு அவசியம். ]
இதன் விளைவே முக்கியமான சிங்கள ஊடகவியலாளர்களில் ஒருவரான நந்தன வீரரத்தினவின் , அண்மையில் வெளியான, இரு நூல்கள்: யாழ்ப்பாணத்தை தீயிடுதல் 1981 - ஒரு வன்முறை அரசின் ஆரம்பம், கறுப்பு ஜூலை - வன்முறை அரசின் ஏழு நாட்கள். இவை சிங்கள மொழியில் வெளியான நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள். தமிழ் மொழிபெயர்ப்பாளர் - செல்லையா மனோரஞ்சன்.
Saturday, October 11, 2025
நினைவில் நிற்கும் காட்சி: தருமியாக திருவிளையாடலில் நடிகர் நாகேஷ்!
மறக்க முடியாத காட்சி, அனைத்து வயதினரும் முகம் சுளிக்காது, நினைத்து நினைத்துக் களிக்கும் காட்சி. இக்காட்சியில் தருமியாக நாகேஷ் சிவனிடம் கேட்கும் கேள்விகளும், அப்போது நாகேஷ் வெளிப்படுத்து உடல், குரல் அசைவுகளும் அற்புதம்.
இயக்குநர் ஏ.பி .நாகராஜனே திரைப்படக்கதை வசனத்தையும் எழுதியவர்.அவரது எழுத்துச் சிறப்புக்கு எடுத்துக்காட்டு இக்காட்சி வசனங்கள்.
இதிலொரு கேள்வி வரும். பிரியக்கூடாதது எது?
அதற்குப் பதில் எதுகையும் மோனையும்.
அது உண்மையில் சரியான பதிலல்ல. ஏனென்றால் தமிழ் மரபுக் கவிதையில் எதுகை, மோனையற்று அல்லது மோனையுடன் வரும் கவிதை வடிவம் அகவற்பா என்னும் ஆசிரியப்பா. ஆசிரியப்பாவில் எதுகை வரலாம், வராதும் விடலாம். அங்கு முக்கியம் ஆசிரிய உரிச்சீர்கள். அதுவும் அதிகமாக ஆசிரிய உரிச் சீர்கள் வரவேண்டும். இந்நிலையில் பிரியக் கூடாதது எதுகையும், மோனையும் சரியான பதிலல்ல. அப்படி ஒரு கட்டாய விதி தமிழ் மரபுக் கவிதையிலில்லை.
https://www.youtube.com/watch?v=gj6EDdB2_dA
டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) : VNG
கலைநிதன் கலைச்செல்வன் இயக்கத்தில் , சுமதி பலராமின் நடிப்பில் 'கறுப்பு' !
* டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG
'டொரோண்டோ சர்வதேசத் திரைப்பட விழா' (20250) - கலைநிதன் கலைச்செல்வன் இயக்கத்தில், சுமதி பலராமின் நடிப்பில் வெளியான குறுந்திரைப்படம் 'கறுப்பி'!
கறுப்பி - 'டொரோண்டோ' சர்வதேசத் திரைப்பட விழாவில் (TIFF - 2025 ) திரையிடப்பட்டுப் பலரின் கவனத்தை ஈர்த்த குறுந்தமிழ்த்திரைப்படம் 'கறுப்பி' (Karupy) .இதன் திரைக்கதையை எழுதி,இயக்கியிருப்பவர் கலைநிதன் கலைச்செல்வன் ( Kalainithan Kalaichelvan) . நோர்மன் ஜூவிசன் திட்டத்தின் கீழ் (Norman Jewison Program ) கனடியத் திரைப்பட மையத்தில் , தெற்காசிய நடிகர்களைப் பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் கறுப்பி. கலைநிதன் கலைச்செல்வன் எழுத்து , திரைப்பட இயக்கம் ஆகியவற்றில் இயங்கி வருபவர். இவரது குறுந்திரைப்படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Friday, October 10, 2025
காலத்தால் அழியாத கானம்: 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!"
பாடகி வாணி ஜெயராமுக்குச் சிறந்த பாடகிக்கான இந்திய மத்திய அரசின் விருதினைப் பெற்றுத்தந்த பாடல். இசை - எம்.எஸ்.வி. ]
பாடலின் வரிகள் கவிஞர் கண்ணதாசனின் சிறந்த திரைப்படப் பாடல் வரிகளிலில் அடங்கும். இப்பாடலைக்கேட்கையியெல்லாம் இவ்வரிகளைக் கவிஞர் மிகவும் இலகுவாக, அனுபவித்து எழுதியிருப்பார் என்று நான் நினைப்பதுண்டு. கவிஞருக்கு மானுட வாழ்க்கை பற்றிய பாடல்கள் கை வந்த கலை. வாழ்க்கை அனுபவத்தின் சாரத்தினைப் பிழிந்து எடுத்து வைத்த வரிகள்.
வாணி ஜெயராமை நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் பாடல்களில் முதன்மையானது. அவ்வளவு இலகுவாகப் பாட முடியாத பாடலைச் சிறப்பாகப் பாடியிருக்கின்றார்.
நடிகை ஶ்ரீவித்யாவை நினைத்தாலும் முதலில் நினைவுக்கு வரும் திரைப்படம் , என்னைப்பொறுத்த வரையில் கே.பாலச்சந்தரின் 'அபூர்வ இராகங்கள்' தான். பாடகி பைரவியாகவே மாறியிருப்பார். உண்மையில் ஶ்ரீவித்யா தன் தாயார் எம்.எல்.வசந்தகுமாரி போல் சிறந்த பாடகியாக வந்திருக்க வேண்டியவர். நடிப்பில் கவனத்தைத்திருப்பியதால் அதனைத் தவற விட்டதாகவே உணர்கின்றேன்.
Thursday, October 9, 2025
காலத்தால் அழியாத 'செம்மீன்' மலையாளப்படப் பாடலொன்று!
எழுத்தாளர் தகழி சிவசங்கரம்பிள்ளையின் புகழ் பெற்ற மலையாள நாவல்களிலொன்று 'செம்மீன்'. தமிழில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்பில் , காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளியாகியுள்ளது.
Tuesday, October 7, 2025
'ராஜா ராணி'யில் நடிகர் திலகத்தின் நடிப்பும் ,கலைஞரின் வசனமும்!
'ராஜா ராணி' நடிகர் திலகமும்,கலைஞரும் இணைந்த திரைப்படம். அதில் வரும் கலைஞரின் வசனங்கள் திரைவானில் மிகுந்த புகழ் பெற்றவை.
அத்திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் கம்பீரக் குரலில் ஒலிக்கும் கலைஞரின் வசனங்களை இக்காணொளியில் கேட்டு மகிழுங்கள்.
'டிஜிட்டல் ' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG
https://www.youtube.com/watch?v=vAE6xvRMn34
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு உற்ப...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...
.png)


.png)

