Monday, October 13, 2025

போர் இலக்கியம் படைத்த போர்ச் செய்தியாளர் எர்னெஸ்ட் டெய்லர் பைல் (Ernest Taylor Pyle)


அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தைச் சேர்ந்த எர்னெஸ்ட் டெய்லர் பைல்  ஆரம்பத்தில் பயணக்கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தவர். அவரது பயணக் கட்டுரைகள் வெறும் தகவற் பெட்டகங்களாக இருந்ததில்லை. அவற்றில் அவர் பயணங்களில் சந்தித்த மானுடர்களின் வாழ்க்கை இருக்கும். அவர்கள்தம் துயரம் இருக்கும். மானுட நேயம் மிக்க அவரது இந்த எழுத்துப்போக்கு பின்னர் அவர் போர்ச் செய்தியாளராகப் பயணித்தபோது பெற்ற அனுபவங்களிலும் இருந்தது.

இரண்டாம் உலகப்போரின்போது இவர் அமெரிக்கப் படையினருடன் வட ஆபிரிக்கா, சிசிலி, இத்தாலி, பிரான்ஸ், பசுபிக் தீவுகள் போன்ற இடங்களுக்கு முன்னணிச் செய்தியாளராகப் பயணித்திருக்கின்றார். 

போர் இலக்கியம் , போர் பற்றிய இலக்கியம் , புகலிட இலக்கியம் பற்றி....


அண்மையில் டொராண்டோவில் நடந்த எழுத்தாளர் தமிழ்நதியின் நூல்களின் வெளியீட்டில் கவிஞர் சேரன் ஆற்றிய உரையினைத்  தனது முகநூற் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில் கவிஞர் போர் இலக்கியம் பற்றிப் பின்வருமாறு குறிபிட்டிருந்தார்:

" தமிழ்நதியினுடைய எழுத்துக்கள் அல்லது நான் எழுதுகிற கவிதைகள், எங்களுடைய போராட்டம் தொடர்பான அனுபவங்களுக்கூடாக வருகிற படைப்புகளை எல்லாம் போரிலக்கியம் அல்லது போராட்ட இலக்கியம் என்று என ஒருவகையாக எல்லைப்படுத்தப்பட்ட முத்திரை குத்திப் பார்க்கிற ஒரு விமர்சனப் போக்கு வந்திருக்கிறது. அது பொருத்தமானதன்று. போரிலக்கியம் என்று சொல்வது போதுமென்று சொன்னால் - உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள் - போர் நடந்துகொண்டிருக்கிறபொழுது ஒவ்வொரு அரசாங்கமும் கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் பத்திரிகையாளர்களையும் போர்முனைக்கு அனுப்பும். வன்னியில், முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்தபொழுது 'The Hindu Group ', 'The Front line ஆகிய நிறுவனங்கள் இரண்டு, மூன்று பத்திரிகையாளர்களையும் எழுத்தாளர்களையும் அதை ஆங்கிலத்தில் Embedded Journalist, Embedded Writers என்று சொல்வார்கள். தமிழில் சரியாகச் சொல்வதென்று சொன்னால் (சிரிக்கிறார்) 'உடன்படு' எழுத்தாளர்களை அனுப்பியிருந்தன.  அதுபோல, ஆப்கானிஸ்தானில் சண்டை நடந்துகொண்டிருந்தபொழுது சில முக்கியமான கனடிய கவிஞர்களை கனடிய அரசாங்கம் அந்தப் போர்முனைக்கு அனுப்பியிருந்தது. சில கட்டுப்பாடுகள்... அங்கே இராணுவம் சொல்வதைத்தான் எழுதவேண்டும். அதையும் போரிலக்கியமென்றுதான் பார்க்கிறார்கள். அதுபோல, போரிலே கொடுமைகள் செய்த ஏராளமான படையினர், அவர்களை வழிநடத்தியவர்கள் எழுதிய கட்டுரைகளையும் கதைகளையும் போரிலக்கியம் என்றுதான் பார்க்கிறார்கள். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள், கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் எழுதுவதற்கும் பாதிப்பை நிகழ்த்தியவர்கள், கொலையாளிகள் எழுதுவதற்குமிடையிலான வித்தியாசத்தை நான் பார்க்கிறேன். எப்படிப் பார்க்கிறேனென்று சொன்னால், வெறுமனே போரிலக்கியம், போர்க்கால இலக்கியம் என்று சொல்லி எங்களுடைய படைப்புகளை முத்திரை குத்திவிட முடியாது. "

காலத்தால் அழியாத கானம் - "அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும் "


"அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும் 
ஆயுசுக்கும் நெனைச்சதெல்லாம் நடக்கணும் 
உன் மனசும் என் மனசும் ஒன்னு போல இருக்கணும் " - கவிஞர் மாயவநாதன் -

'காவல் தெய்வம்' ஜெயகாந்தனின் குறுநாவல். கைவிலங்கு என்னும் பெயரில் கல்கி சஞ்சிகையில் வெளியானது.  நடிகர் எஸ்.வி.சுப்பையாவின்  தயாரிப்பில் , கே.விஜயனின் இயக்கத்தில் வெளியான திரைப்படம். இசை - ஜி.தேவராஜ்.  பாடகர்கள் - தாராபுரம் சுந்தராஜன் & பி.சுசீலா. பாடல்களை எழுதியிருப்பவர் கவிஞர் மாயவநாதன்.  இவரது புகழ்பெற்ற பாடல்களில் நித்தம் நித்தம் மாறுவது எத்தனையோ,  தண்ணிலவு தேனிறைக்க, கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு,  சித்திரப்பூவிழி வாசலிலே ஆகியவை முக்கியமானவை.

இப்பாடலின் சிறப்பு - நட்சத்திர நடிகர்களின் ஆதிக்கம் மிகுந்த  திரையுலகில், முதிய நடிகரும், இளம் நடிகையும் ஆடிப்பாடும் சூழலில், இளம் நடிகர்களின் காதல் காட்சிகள் பசுமையாக, இயல்பாக, இனிய இளங்காலைப்பொழுதைப்போல் மகிழ்ச்சியைத் தருகின்றன. இளம் சிவகுமாரும், லட்சுமியும் தம் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் இப்பாடலின் ஒளிப்பதிவும் என்னைக் கவர்ந்தது. ஒவ்வொரு சட்டமும் நினைவில் நிற்கும் வகையில் எடுக்கப்பட்டதாக இப்பாடலைப் பார்க்கையில் உணர்ந்தேன். நீங்களும் உணர்வீர்கள். ஒளிப்பதிவாளர்  விஜயன். 

காவல் தெய்வம் படத்தின் இன்னுமொரு சிறப்பு - நடிகர் திலகம் கெளரவ் வேடத்தில் , ஆனால் நினைவில் நிற்கும் பாத்திரத்தில் கொலைக்குற்றவாளியான 'சாமுண்டி'யாக நடித்திருப்பார்.  ராணிமுத்து பிரசுரங்களின் தொடக்கக் காலத்தில் காவல் தெய்வம் என்னும் பெயரில் வெளியானது. 

https://www.youtube.com/watch?v=5-Z-s46dNB0&list=RD5-Z-s46dNB0&start_radio=1

டிஜிட்டல் ஓவியத்  தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி; VNG

Sunday, October 12, 2025

உண்மை உரைக்கும் ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன!

ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன! 

இலங்கை சுதந்திரமடைந்து சென்ற ஆண்டு அநுர குமார திசாநாயக்க ஆட்சியில் அமரும் வரையிலான காலகட்டம் பாரம்பரிய இலங்கை அரசியல்வாதிகளால்  இனவாதம், மதவாதம், தேசியவாதம் ஆகியவற்றைப் பாவித்து  அதிகாரத்தைக் கைப்பற்றும் காலகட்டமாக இருந்துள்ளது.  பிரதான ஊடகங்களின் சூத்திரதாரிகளாக மேற்படி அரசியல்வாதிகளே இருந்து வந்தனர்.அதனால் நாட்டு மக்களுக்கு, குறிப்பாகத் தென்னிலங்கை மக்களுக்கு நாட்டின் வடகிழக்கில், மலையகத்தில் , தமிழ், முஸ்லிம் மக்கள் சம்பந்தப்பட்ட அரசியல் இவையெல்லாம் பற்றிய உணமை நிலை தெரியாததொரு சூழல் நிலவியது. இன்று முதன் முறையாக அந்தச் சூழல் மாறியுள்ளது. இது  வரவேற்கத்தக்க, ஆரோக்கியமானதொரு சூழல். இச்சூழல் தொடர்ந்தும் நிலைத்திருப்பதே நாட்டின் நல்லதோர் எதிர்காலத்துக்கு அவசியம்.  ]

இதன் விளைவே முக்கியமான சிங்கள  ஊடகவியலாளர்களில் ஒருவரான நந்தன வீரரத்தினவின் , அண்மையில் வெளியான, இரு நூல்கள்: யாழ்ப்பாணத்தை தீயிடுதல் 1981 - ஒரு வன்முறை அரசின் ஆரம்பம், கறுப்பு ஜூலை - வன்முறை அரசின் ஏழு நாட்கள். இவை சிங்கள மொழியில் வெளியான நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள். தமிழ் மொழிபெயர்ப்பாளர் - செல்லையா மனோரஞ்சன்.

Saturday, October 11, 2025

நினைவில் நிற்கும் காட்சி: தருமியாக திருவிளையாடலில் நடிகர் நாகேஷ்!


நடிகர் நாகேஷைப் பற்றி நினைத்தால் அவர் நடித்த திரைப்படக் காட்சிகள் பல நினைவுக்கு வரும்.அவற்றில் பலருக்கு முதலில் நினைவுக்கு வரும் காட்சி திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி - சிவன் காட்சிதான்.

மறக்க முடியாத காட்சி, அனைத்து வயதினரும் முகம் சுளிக்காது, நினைத்து நினைத்துக் களிக்கும் காட்சி. இக்காட்சியில் தருமியாக நாகேஷ் சிவனிடம் கேட்கும் கேள்விகளும், அப்போது நாகேஷ் வெளிப்படுத்து உடல், குரல் அசைவுகளும் அற்புதம்.

இயக்குநர் ஏ.பி .நாகராஜனே திரைப்படக்கதை வசனத்தையும் எழுதியவர்.அவரது எழுத்துச் சிறப்புக்கு எடுத்துக்காட்டு இக்காட்சி வசனங்கள்.

இதிலொரு கேள்வி வரும். பிரியக்கூடாதது எது?

அதற்குப் பதில் எதுகையும் மோனையும்.

அது உண்மையில் சரியான பதிலல்ல. ஏனென்றால் தமிழ் மரபுக் கவிதையில் எதுகை, மோனையற்று அல்லது மோனையுடன் வரும் கவிதை வடிவம் அகவற்பா என்னும் ஆசிரியப்பா. ஆசிரியப்பாவில் எதுகை வரலாம், வராதும் விடலாம். அங்கு முக்கியம் ஆசிரிய உரிச்சீர்கள். அதுவும் அதிகமாக ஆசிரிய உரிச் சீர்கள் வரவேண்டும். இந்நிலையில் பிரியக் கூடாதது எதுகையும், மோனையும் சரியான பதிலல்ல. அப்படி ஒரு கட்டாய விதி தமிழ் மரபுக் கவிதையிலில்லை.

https://www.youtube.com/watch?v=gj6EDdB2_dA

டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) : VNG

கலைநிதன் கலைச்செல்வன் இயக்கத்தில் , சுமதி பலராமின் நடிப்பில் 'கறுப்பு' !


* டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG 

'டொரோண்டோ சர்வதேசத் திரைப்பட விழா' (20250) - கலைநிதன் கலைச்செல்வன் இயக்கத்தில், சுமதி பலராமின் நடிப்பில் வெளியான குறுந்திரைப்படம் 'கறுப்பி'!

கறுப்பி - 'டொரோண்டோ' சர்வதேசத்  திரைப்பட விழாவில்  (TIFF - 2025 ) திரையிடப்பட்டுப் பலரின் கவனத்தை ஈர்த்த குறுந்தமிழ்த்திரைப்படம் 'கறுப்பி' (Karupy) .இதன் திரைக்கதையை எழுதி,இயக்கியிருப்பவர் கலைநிதன் கலைச்செல்வன் ( Kalainithan Kalaichelvan) . நோர்மன் ஜூவிசன் திட்டத்தின் கீழ் (Norman Jewison Program ) கனடியத் திரைப்பட மையத்தில் , தெற்காசிய நடிகர்களைப் பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் கறுப்பி. கலைநிதன் கலைச்செல்வன்  எழுத்து , திரைப்பட இயக்கம் ஆகியவற்றில் இயங்கி வருபவர். இவரது குறுந்திரைப்படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, October 10, 2025

காலத்தால் அழியாத கானம்: 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!"

 
'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Googel Nano Banana) உதவி; VNG 

பாடகி வாணி ஜெயராமுக்குச் சிறந்த பாடகிக்கான இந்திய மத்திய அரசின் விருதினைப் பெற்றுத்தந்த பாடல். இசை - எம்.எஸ்.வி. ]


பாடலின் வரிகள் கவிஞர் கண்ணதாசனின் சிறந்த திரைப்படப் பாடல் வரிகளிலில் அடங்கும். இப்பாடலைக்கேட்கையியெல்லாம் இவ்வரிகளைக் கவிஞர் மிகவும் இலகுவாக, அனுபவித்து எழுதியிருப்பார் என்று நான் நினைப்பதுண்டு. கவிஞருக்கு மானுட வாழ்க்கை பற்றிய பாடல்கள் கை வந்த கலை. வாழ்க்கை அனுபவத்தின் சாரத்தினைப் பிழிந்து எடுத்து வைத்த வரிகள்.

வாணி ஜெயராமை நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் பாடல்களில் முதன்மையானது. அவ்வளவு இலகுவாகப் பாட முடியாத பாடலைச் சிறப்பாகப் பாடியிருக்கின்றார்.

நடிகை ஶ்ரீவித்யாவை நினைத்தாலும் முதலில் நினைவுக்கு வரும் திரைப்படம் , என்னைப்பொறுத்த வரையில் கே.பாலச்சந்தரின் 'அபூர்வ இராகங்கள்' தான். பாடகி பைரவியாகவே மாறியிருப்பார். உண்மையில் ஶ்ரீவித்யா தன் தாயார் எம்.எல்.வசந்தகுமாரி போல் சிறந்த பாடகியாக வந்திருக்க வேண்டியவர். நடிப்பில் கவனத்தைத்திருப்பியதால் அதனைத் தவற விட்டதாகவே உணர்கின்றேன்.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...