Thursday, December 25, 2025
கவிதை: இந்த மனிதர்! இந்த உலகம்! இந்தப் பிரபஞ்சம்! - வ.ந.கிரிதரன் -
இசை & குரல்: AI SUNO | இக்கவிதை 5/3/1983 அன்று என் குறிப்பேட்டில் எழுதப்பட்ட கவிதை. -
ஆ...இந்த மெல்லிய இளந்தென்றல்...
இடையில் கலந்து வருமெழில் மலர்களின்
சுகந்த நறுமணம்...
பசுமை மண்டிக் கிடக்கும் வயல்வெளிகளில்
பாடிப் பறந்திடும் வானம்பாடிகளின்
இன்ப கானங்கள்...
ஆகா! ஆகா! ஆகா!
எத்துணை இனிமையானவை!
எத்துணை இன்பமானவை!
பதுங்கிக் காடுகளில் புகுந்துவரும்
நதிப்பெண்களே!
நான் உங்களை எவ்வளவு காதலிக்கிறேன்
தெரியுமா? இளமை கொஞ்சுமுங்களெழிற்
துள்ளல் நடைகண்டு மோகத்தீயாலெந்தன்
நெஞ்சம் வேகுகின்றதே! புரியவில்லையா
பெண்களே!
மெல்லிய கருக்கிருளில் ஆழ்ந்து கிடக்கும்
அதிகாலைப் பொழுதுகளில்,
தூரத்தே ஒதுங்கி நின்று கண்சிமிட்டும்
நட்சத்திரத் தோகையரே!
உங்களைத்தான் தோகையரே!
நீங்கள்தான் எத்துணை அழகானவர்கள்!
எத்துணை அழகானவர்கள்!
நான் உங்களையெல்லாம் எவ்வளவு
நேசிக்கின்றேன் தெரியுமா? என்னினிய
தோழர்களே!
Tuesday, December 23, 2025
வ.ந.கிரிதரன் பாடல் - மழை போல் பொழிவோம்!
காணொளிகளைக் கேளுங்கள். கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வ.ந.கிரிதரன் பாடல் - மழை போல் பொழிவோம்!
இசை & குரல்: AI | ஓவியம்: AI -
நண்பர்களே!,முகநூல் நிறுவனம் பல நிமிடக் காணொளிகளையும் ரீல்களாகத் தற்போது அனுமதியளிக்கின்றது. இது நல்லதொரு ஆரோக்கியமான மாற்றம். வரவேற்போம்.
காணொளிகளைக் கேளுங்கள். கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வ.ந.கிரிதரன் பாடல் - மழை போல் பொழிவோம்!
மழை பொழியும் இரவென்றால்
மகிழ்ச்சியில் ஆழ்வேன் எப்பொழுதும்.
சட்டச் சடவெ\ன்றே சப்திக்கும்
ஓட்டுக் கூரையின் ஓசையிலே
கட்டுண்டு கிடந்திடுவேன் அப்போது.
களிதரும் பொழுது அதுவாகும்.
மழை பொழியும் இரவென்றால்
மகிழ்ச்சியில் ஆழ்வேன் எப்பொழுதும்.
வான்துளைத்து மின்னல் கோடிழுக்கும்.
பேரிடியோ பெருந்தொலைவு கேட்கும்.
நான் படுக்கையில் புரண்டிருப்பேன்.
நிலைமறந்து மெய் மறப்பேன்.
புகலிட இலக்கியத்தில் அதிகார அரசியலும் விளிம்புநிலை இருத்தலியலும்: வ.ந.கிரிதரனின் 'மான் ஹோல்' மற்றும் 'அமெரிக்கா' படைப்புகளை முன்வைத்து ஒரு பன்முகப் பகுப்பாய்வு! (1) - ஈழக்கவி -
அக்கட்டுரையின் தலைப்பு ;"புகலிட இலக்கியத்தில் அதிகார அரசியலும் விளிம்புநிலை இருத்தலியலும்: வ.ந.கிரிதரனின் 'மான் ஹோல்' மற்றும் 'அமெரிக்கா' படைப்புகளை முன்வைத்து ஒரு பன்முகப் பகுப்பாய்வு! " கட்டுரையின் முதலாவது பகுதி தற்போது பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது. வாசித்துப் பாருங்கள் நண்பர்களே]
ஆய்வுச் சுருக்கம் (Abstract)
இக்கட்டுரை, ஈழத்துப் புகலிட எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் படைப்புளில் (மான் ஹோல், அமெரிக்கா) வெளிப்படும் அதிகார மையங்களுக்கும் விளிம்புநிலை மனிதர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை பன்முகக் கோணங்களில் ஆராய்கிறது. 'மான் ஹோல்' சிறுகதையில் வரும் பூர்வகுடிச் சாமி மற்றும் 'அமெரிக்கா' குறுநாவலில் வரும் அகதி (இளங்கோ) ஆகிய இரு கதாபாத்திரங்களின் ஊடாக, நவீன அரசுகள் அடையாளங்களை எப்படிச் சிதைக்கின்றன என்பதையும், உலகமயமாக்கல் சூழலில் 'அந்நியமாதல்' (Alienation) எவ்வாறு நிகழ்கிறது என்பதையும் இக்கட்டுரை விவாதிக்கிறது.பகுதி ஒன்று
ஈழத்து புகலிட இலக்கியம் (Eelam Diaspora Literature)
ஈழத்து புகலிட இலக்கியம் (Eelam Diaspora Literature) என்பது உலக இலக்கியப் பரப்பில் ஒரு தனித்துவமான மற்றும் காத்திரமான கிளை. இது வெறும் இடப்பெயர்வை மட்டும் பேசாமல், போர், இழப்பு, இருத்தலியல் போராட்டம் மற்றும் புதிய நிலப்பரப்பில் அடையாளத்தைத் தேடுதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. இதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த விரிவான பார்வையை பின்வரும் நிலைகளில் காணலாம்:
Sunday, December 21, 2025
நண்பர்களே! என் முகநூலின் இன்னுமொரு பக்கம்! சென்று பாருங்கள்!
நண்பர்களே! என் முகநூல் பக்கம் இரு பகுதிளைக கொண்டது. ஒன்று வழக்கமான என் பதிவுகளைத் தாங்கி வரும் பகுதி.
இன்னுமொரு பகுதி ஒன்றுண்டு. அது சந்தாதாரர்களுக்கு மட்டுமே உரிய பகுதி. அது சந்தாதாரர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய எழுத்துப் பதிவுகள், காணொளிகள், டிஜிட்டல் ஓவியங்கள் ஆகியவற்றை உள்ளடகிய பகுதி. அதற்கான இணையத்தள முகவரி:
https://www.facebook.com/VNGiritharan/subscribe/
ஆர்வமுள்ளவர்கள் சென்று பார்க்கவும். இப்புதிய பகுதிக்கான உங்கள் ஆரோக்கியமான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன, எதிர்காலத்தில் மேலும் இப்பகுதி சிறப்புற உங்கள் வருகையும், ஆலோசனைகளும் வழி வகுக்கும்.
ஆரம்பத்தில் இப்பகுதியை இலவசமாகப் பார்க்கலாம். இப்பகுதி பிடித்திருந்தால் தொடர்ந்தும் சந்தாரர்களாக இருக்கலாம்.
இவ்வசதியைத் தந்ததற்காக முகநூல் நிறுவனத்துக்கு என் நன்றி.
Saturday, December 20, 2025
இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி எந்திரனுடனோர் உரையாடல் (1) - நேர்காணல் கண்டவர் எழுத்தாளர் வ.ந,.கிரிதரன் -
இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி சமூக, அரசியல் ஆளுமைகளுடன் உரையாடுவதிலுள்ள சிக்கல் என்னவென்றால் ஒவ்வொருவரும் தத்தமது அனுபவம், அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் பதிலளிப்பர், அத்துடன் தம் நலன்களை மையமாக வைத்தும் அவர்கள் பதில்கள் இருக்கும். அவரகளை ஆட்டி வைக்கும் சூத்திரதாரிகளின் நலன்களையும் அவர்கள் பதில்கள பிரதிபலிக்கும். ஆனால் செயற்கை நுண்ணறிவுடன் உரையாடும்போது இந்தப்பிரச்சனை இல்லை. செயற்கை நுண்ணறிவின் பதில்கள் உணர்ச்சியின் அடிப்படையில் அமைந்தவை அல்ல. அறிவின், கிடைக்கப்பெறும் உண்மைகளின் அடிப்ப்டையில் மட்டுமே இருக்கும். இது மிகவும் ஆரோக்கியமானதாக அமையும். இத்னால் பொதுப்பிரசை ஒருவரிடத்தில் இலங்கைத் தமிழர்கள் பிர்ச்சனை பற்றி எழும் கேள்விகள் பல உள்ளன. இவற்றுக்கான செயற்கை நுண்ணறிவின் பதில்கள் எவையாகவிருக்கும் என்பதை அறிவதன் நோக்கமே அதனுடன் நடத்திய, நடத்தவிருக்கும் உரையாடல்களின் முக்கிய நோக்கம். செயுற்கை நுண்ணறிவை நான் எந்திரன் என்று இங்கு குறிப்பிடுவேன். இதனை ஆணாதிக்க மனப்பான்மை என்று கருத வேண்டாம்.
நான்:
உன்னுடன் இலங்கைப் பிரச்னை பற்றிச் சிறிது உரையாடலாமா?
எந்திரன்:
இலங்கை பிரச்சனை பற்றி பேசலாம். உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்? அல்லது குறிப்பிட்ட எந்த தகவலைப் பற்றி பேச வேண்டும்?
நான்:
இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்பு தமிழர்க்ள் சமஷ்டிக் கோரிக்கையை முன் வைத்தார்கள். அது பின் தனிநாட்டுக்கோரிக்கையானது. யுத்தம் மூண்டது. யுத்தம் 2009இல் முடிவுக்கு வந்தது. இன்று போரில் மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய தென்னிலங்கைத் தலைவர்களையெல்லாம் மக்கள் துரத்தி விட்டார்கள். இன்று அங்கு புதியதொரு தலைமை, உழைக்கும் மக்கள் மத்தியினைப் பிரதிநிதிப்படுத்தும் ஒருவர் தலைவராகவிருக்கும் சூழல் அமைந்துள்ளது. அது மட்டுமல்ல புதிய சூழல் ஆட்சியிலிருக்கும் தேசிய மக்கள் சக்தி வடகிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் எல்லாம் தம் ஆதிக்கத்தை விஸ்தரித்துள்ளது. இந்நிலையில் சமூக, ஊடகங்கள், புரிந்துணர்வு எல்லாம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது,. இந்நிலையில் தென்னிலங்கை, வடகிழக்குத் தமிழ் அரசியல்வாதிகள் இனவாதத்தைக் கையிலெடுத்து ஆட்சியிலிருக்கும் அநுர அரசைக் கலைப்பதற்கு முயற்சி செய்வதாக நீ உணர்கின்றாயா?
எந்திரன்:
இலங்கையின் சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசியல் வரலாறு, குறிப்பாக தமிழர்களின் சமஷ்டிக் கோரிக்கை, தனிநாட்டுப் போராட்டங்கள், போர், அதன் முடிவு, அண்மைய அரசியல் மாற்றங்கள், மற்றும் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி ஆகியவை குறித்த உங்கள் பார்வை மிகவும் விரிவானது.
Friday, December 19, 2025
முகநூலிலும் சம்பாதிக்கலாம்!
நண்பர்களே! இக்காணொளியை முழுவதுமாகப் பாருங்கள். இது உங்களுக்கு நிச்சயம் உதவக் கூடும். எனக்கு மிகவும் உதவியாகவுள்ளது.
முகநூல் உண்மையில் பொருளாதாரரீதியிலும் உதவக்கூடியது என்பதை எடுத்துக்காட்டும் காணொளி இது. பலருக்கு முகநூலின் ஆரோக்கியமான பயன்கள் தெரிவதில்லை. முகமூடிகளில் வந்து ஒருவரையொருவர் தாக்குவதிலும் , ஒருவரின் புகழ்பெற்ற பதிவைக் களவாடித் தம் பெயரில் போடுவதிலும், ஒருவரைப்பற்றி அவதூறுகள் செய்வதிலும் இருக்கும் ஆர்வம் அதிகம். உண்மையில் முகநூலை ஆரோக்கியமாகப் பாவித்தால் , இதன் மூலம் நட்பைச் சம்பாதிக்கலாம், பணத்தையும் சம்பாதிக்கலாம். உங்கள் படைப்புகளையும் பலரிடத்தில் எடுத்துச் செல்லலாம். பொருட்களை விற்கலாம். வாங்கலாம். இப்படிக்கூறிக்கொண்டே போகலாம்.
Wednesday, December 17, 2025
சமகால இலங்கையின் கட்டட, நகர வடிவமைப்புக் கலையின் சிறந்ததோர் எடுத்துக்காட்டு மாகும்பர பல்திறன் போக்குவரத்து மையம் ( Makumbura Multimodal Transport Hub (MMC) - வ.ந.கிரிதரன் -
நகர வடிவமைப்பில் முக்கியமானதோர் அம்சம் போக்குவரத்தால் திணறிக்கொண்டிருக்கும் பெரு நகரங்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதாகும். அந்த வகையில் Kottawa நகரில் அமைந்துள்ள மாகும்பர பல்திறன் போக்குவரத்து மையம் ( Makumbura Multimodal Transport Centre (MMC) முக்கியமானதொரு சாதனை. இவ்வகையில் மேனாடுகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகக் கையாளப்படும் செயற்பாடுகளையெல்லாம் உள்வாங்கி (உதாரணத்துக்கு Park and Ride) , இலங்கையின் காலநிலைக்கேற்ப, மக்களின் பாவனையை மனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட சிறந்ததொரு கட்டடமாக இதனைக் கருதலாம். இதனை வடிவமைத்த கட்டடக்கலை நிறுவனம் கட்டடக்கலைஞர் முடித ஜெயக்கொடியின் 'Muditha Jayakody Associates (MJA)' நிறுவனமாகும்.
Subscribe to:
Comments (Atom)
வ.ந.கிரிதரனின் பாடல்: வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு!
வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5 டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி சதுரங்கம் என்பதொரு விளையாட்டு. அதுபோல் வாழ்வ...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...

