Sunday, January 25, 2026

காலத்தால் அழியாத கானம்: 'நீல நிறம். வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்'


'என் அண்ணன்' திரைப்படத்தில் இடம்  பெற்றுள்ள , கவிஞர் கண்ணதாசனின் எழுத்தில், டி.எம்.எஸ் & எஸ்.ஜானகி குரலில், எம்ஜிஆர் & ஜெயலலிதா நடிப்பில், கே.வி.மகாதேவன் இசையில் ஒலிக்கும் இனியதொரு காலத்தால் அழியாத கானமிது. இத்திரைப்படத்தை முதல் நாள் காலைக் காட்சியாக யாழ் வெலிங்டன் திரையரங்கில் பார்த்த நினைவுகள் படமாக விரிகின்றன. 

கவிஞர் கண்ணதாசன், எம்ஜிஆர், கே.வி.மகாதேவன் கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத கானங்கள்தாம். பொதுவாக அவரது இவ்விதமான பாடல்கள் டி.எம்.எஸ் &  பி.சுசீலா குரலில் ஒலிப்பவை. ஆனால் இது டி.எம்.எஸ் & எஸ்.ஜானகி குரலில் ஒலிக்கின்றது.  இதுவும் சிறப்பாகத்தானுள்ளது. 

வரலாற்றில் நிலைத்து நிற்கப்போகும் கனடியப் பிரதமரின் உரை!


கனடியப் பிரதமர் மார்க் கார்னியின் இந்த உரை வரலாற்றில் நிலைத்து நிற்கபோகும் உரை! தற்போதுள்ள சூழலில் , டொனால்ட் ட்ரம் அமெரிக்க அதிபராக இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இந்த உரை முக்கியத்துவம் மிக்கது.

https://www.youtube.com/watch?v=btqHDhO4h10

அலெக்ஸ் பிரிட்டியின் மானுட நேயத்திற்காகத் தலை வணங்குவோம்! - வ.ந.கி -


மின்னியாபொலிஸ் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடிவரவாளர்களுக்கு எதிரான அடக்குமுறை தொடர்கிறது. அவரது தலைமையிலான ICE குண்டர்களின் அட்டகாசம் தொடர்கிறது. எவ்வித மானுட நேயமுமற்று பெண்களை, முதியவர்களைம் குழந்தைகளை அவர்கள் அவமானப்படுத்தும் வகையில் கைது செய்வதும், அவர்கள் மேல் தேவைக்கு அதிகமான அளவில் பலாத்காரம் புரிவதும் தொடர்கிறது. 

Tuesday, January 20, 2026

யு டியூப் ஆய்வாளர்கள்!


இணையத்தின் வருகை சமூக ஊடகங்கள் உருவாக வழி வகுத்தது. இது இதுவரை காலமும் அர்ப்பணிப்பும் , கடும் உழைப்பும், அறிவும், தேடலும், ஆய்வும் மிக்கவர்களே   சிறந்த ஊடகவியலாளர்களாக, ஆய்வாளர்களாக இருந்தார்கள்.  யாரும் ஊடகவியலாளர்களாம், யாரும் எழுத்தாளர்களாகலாம், யாரும் சஞ்சிகைகள் நடத்தலாம், யாரும் எழுதலாம், நடிக்கலாம் என்னும் நிலையினைச் சமூக ஊடகங்கள் உருவாக்கின. சமூக ஊடகங்கள் மூலம் சம்பாதிக்கலாம் என்னும் நிலை வந்ததும், சம்பாதிப்பதையே நோக்காகக் கொண்டு எல்லாருமே உண்மைகளைக்க குழி தோண்டிப் புதைத்து விட்டு, பரபரப்பினைத் தரும், உணர்வினைத் தூண்டி விடும், செய்திகளை , உண்மையினைத் திரித்து  எழுதவும், பேசவும் வழி வகுத்தது. அதிகமானவர்களைத் தம்மிடம் அழைப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு எல்லாரும் இயங்கத்தொடங்கினார்கள்.  இது சமூக ஊடகங்களால் உருவான எதிர்மறை அம்சங்களில் ஒன்று.

Monday, January 19, 2026

பாதுகாக்கப்பட வேண்டிய மந்திரிமனை! இன்னும் காலம் கடந்து போய்விடவில்லை! பாதுகாப்போம்! வரலாற்றைப் பேணுவோம்!


ஏற்கனவே  போதிய பராமரிப்பற்ற நிலையில் இருந்த யாழ் மந்திர்மனைக் கட்டடம் அண்மைக்காலப் பெருமழையினால் மேலும் சிதைவுகளுக்குள்ளாகியுள்ளதாகியுள்ளது. அதன் நிலையினை வெளிப்படுத்தும் காட்சிகள் இவை. மந்திரிமனைக்கு இந்நிலை ஏற்படாமல் தடுத்திருக்கும் வல்லமை எமக்கிருந்தது. ஆனால் அதனை நாம் செய்யவில்லை. இது வருந்தத்தக்கது.

கட்டடங்கள் பல காரணங்களால் பாதுகாக்கப்பட வேண்டியவை. ஒரு குறிப்பிட்ட காலக் கட்டடம் என்னும் வகையில், கட்டடக்கலைப் பாணிகளை வெளிப்படுத்துகின்றன என்னும் வகையில், வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடையவை என்னும் வகையில்,  இனமொன்றி ன் வரலாற்று அடையாளம் என்னும் வகையில் கட்டடங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை. அவ்வகையில் இக்காரணங்கள் அனைத்தும் மந்திரிமனைக்குப் பொருந்தும். 

Sunday, January 18, 2026

முகநூலில் தொடரும் விவாதம் (2) : எழுத்தாளர் மாலனின் இந்தித்திணைப்பு பற்றிய கருத்துகளும்ம் எதிர்வினைகளும்

 எழுத்தாளர் மாலன் 

மாலன் நாராயணன்:


நீங்கள் கூறியுள்ளவற்றிற்கான பதில்கள் என்னுடைய பதிவிலேயே இருக்கிறது உதாரணமாக, இந்தி ஆட்சி மொழி என்பது திடீரென எடுக்கப்ப்ட்ட முடிவு அல்ல, அது சுதந்திர இந்தியாவின் அரசு அமைந்த போதே அரசமைப்பு அவையால் எடுக்கப்பட்டது, அந்த 15 ஆண்டு கெடு அப்போதே எடுக்கப்பட்ட முடிவு, 1958லிருந்து தமிழ் தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக இருந்தது அது தமிழ்நாட்டில் ஆட்சிமொழியாக நீடிப்பதில் 1965 ல் ஆபத்து ஏதும் நேர்ந்துவிடவில்லை, 1965 போராட்டத்தை தொடங்கி முன்னெடுத்தது திமுக மாணவர் அணி . இவை பற்றி விரிவாகவே என் பதிவில் ஆதாரங்களோடு தகவல் கொடுத்திருக்கிறேன் அதையேதான் நீங்கள் உங்கள் பதிவில் எழுதியிருக்கிறீர்கள் அவற்றில் ஏதும் பிழை இருக்கிறதா? 2. நீங்கள் கீழ்க்கண்டவற்றை மறுக்கிறீர்களா? 1. 1965 போராட்டத்தின் கோரிக்கை தமிழை மத்திய அரசின் ஆட்சிமொழி ஆக்கு என்பதல்ல, ஆங்கிலத்தை அகற்றாதே என்பது 2. இந்தி ஆட்சி மொழி என்ற நிலையை 1965 போராட்டம் மாற்றியிருக்கிறதா? 3. இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்றிருந்தால் தமிழுக்கு பதில் மாணவர்கள் இந்தி படித்திருப்பார்கள் என்கிறீர்கள் சரி ஆங்கிலமும் ஆட்சிமொழி என்பதால் ஆங்கிலம் படிக்கவில்லையா? ஆங்கிலம் நம் தாய்மொழியா? அதுவும் அயல்மொழிதானே? இந்தி திணிப்பு கூடாது ஆனால் ஆங்கிலத் திணிப்பு சரியா? 3.திமுக மத்தியில் ஆட்சியில் இருந்த போது கூட தமிழை ஆட்சிமொழி ஆக்க முடியவில்லை ஏன்? கீழ்கண்ட இதனை விளக்குங்கள்: 1963ல் ஆங்கிலம் தொடரும் என்று சட்டம் வந்துவிட்டால் 1965 ல் போராட்டம் ஏன்? மற்ற மாநிலங்களில் நடந்த போராட்ட்ம் நடந்ததா என்பது பற்றி தனியாக எழுதுகிறேன் நீங்கள் ஒரு தரப்பான அரசியல் பிரசுரங்களை மட்டும் படிக்காமல் அரசமைப்புச் சட்ட விவாதங்களையும் படிப்பது நல்லது அங்கு எல்லா தரப்பினரும் இருந்தார்கள். ஒருவர் கூட தமிழை ஆட்சிமொழியாக்க கோரவில்லை உணர்ச்சி களை மட்டுப்படுத்திக் கொண்டு யதார்த்தங்களைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

வ.ந.கிரிதரன் 

வணக்கம் மாலன், ' 1963ல் ஆங்கிலம் தொடரும் என்று சட்டம் வந்துவிட்டால் 1965 ல் போராட்டம் ஏன்?' என்று கேட்டிருக்கின்றீர்கள். இதற்கான பதிலாகப் பின்வரும் விக்கிபீடியாக் கட்டுரையின் பகுதிகளைத் தருகின்றேன்:
"1963ஆம் ஆண்டு சனவரி 21 அன்று இந்த வரைவுச்சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. திமுக உறுப்பினர்கள் வரைவுச்சட்டத்தின் மூன்றாம் அங்கத்தில் ஆங்கிலம் இந்தியுடன் தொடரலாம் என்றிருப்பதனை எதிர்த்து ஆங்கிலம் இந்தியுடன் தொடரும் என மாற்ற வேண்டும் என திருத்தம் கொணர்ந்தனர். தொடரலாம் என்பதைப் பின்வரும் அரசினர் தொடராமலுமிருக்கலாம் என பொருள் கொள்ள வாய்ப்பு உள்ளதாக வாதிட்டனர். சிறுபான்மையினரின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்கப்படாமல் போகலாம் என்றும் கூறினர்.

Friday, January 16, 2026

முகநூலில் தொடரும் விவாதம் (1)) : எழுத்தாளர் மாலனின் இந்தித்திணிப்புக்கெதிரான போராட்டம் பற்றிய கருத்துகள் பற்றி... - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் மாலன் 

எழுத்தாளர் மாலன்  1965இல் தமிழ்நாட்டில்  நடந்த இந்தித்திணிப்புக்கெதிரான போராட்டம் பற்றி ஒரு முகநூற் பதிவிட்டிருந்தார். அதில் அவர் பின்வருமாறு கூறியிருப்பார்:

"அந்தப் போராட்டம் ஆங்கிலம் அகற்றப்படுவதை எதிர்த்த போராட்டம்  தமிழுக்கானது அல்ல. தமிழுக்கு அப்போது ஆபத்தில்லை.   தமிழைக் காக்க  நடந்த போராட்டம் என்பது கட்டமைக்கப்பட்டது. ஆங்கிலத்தை அகற்றுவதை எதிர்த்த போராட்டம் என்றால் மக்களிடையே பெரிய எழுச்சி இருக்காது என்பதால் (அன்று தமிழ்நாட்டில் ஆங்கிலம் அறியாத மக்கள் பலர்) கிளர்ச்சியை திமுக தமிழோடு சம்பந்தப்படுத்தி முன்னெடுத்தது"

இவை  திராவிடத்தை எதிர்க்கின்றோம் என்னும் பெயரில் மாலனால்  இந்தித்திணிப்புக்கெதிராகத்  தமிழக மக்களால் நடத்தப்பட்ட நியாயமான போராட்டத்தின் முக்கியத்தைக் குறைப்பதற்காகக் கூறப்பட்ட  கூற்றுகளாகவே கருத வேண்டியுள்ளது. இந்தித்திணிப்புக்கெதிராக நடத்தப்பட்ட போராட்டம் அண்ணா தலைமையிலான திமுக மாணவர்கள், பொது மக்கள் என அனைவருடனும்  இணைந்து நடத்திய போராட்டம்.  இதற்காக மாணவர்கள் தீக்குளித்திருக்கின்றார்கள். பொதுமக்கள் காவற் துறை, இந்திய இராணுவத்தால்  தாக்கப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள். பலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் போராடியது தமிழ் மொழிக்காக, இந்தித்திணிப்புக்கெதிராக.  மாலன் அதனை வெறும் ஆங்கில மொழியினை நீடிப்பதற்காக என்று மலினப்படுத்தியிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. 

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...