Sunday, February 22, 2026
வ.ந.கிரிதரனின் பாடல் - இருப்பைப் புரிந்து கொள்ளல்!
இப்பாடலில் மேனாட்டு, கீழ்நாட்டு வாத்தியக் கருவிகள் எல்லாவற்றையும் ஒன்றாகப் பாவித்திருக்கின்றேன். அத்துடன் இராகம் - ஆனந்த பைரவியைப் பாவித்து உருவாக்கும்படி செயற்கை நுண்ணறிவைப் பணித்தேன். அதில் எவ்வளவுதூரம் அது வெற்றி அடைந்திருக்கின்றது என்பதை இசை வல்லுநர்கள்தாம் கூற வேண்டும். பாடல் அற்புதமாகவே பாடப்பட்டிருப்பதாகவே கேட்கையில் நான் உணர்ந்தேன். நீங்களும் அப்படியே உணர்வீர்கள் என்று கருதுகின்றேன்.
வ.ந.கிரிதரனின் பாடல் - இருப்பைப் புரிந்து கொள்ளல்!
- இசை & குரல் - SUNO AI. ஓவியம் - கூகுள் AI
விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.
இருக்கும் இருப்பைப் புரிந்து கொள்வது
இன்பம் மிக்கது. ஊக்கம் தருவது.
இருப்பை அறிவதும் அறியும் பொருட்டு
இருப்பது என்றால் அதுபோதும் எனக்கு.
விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.
Thursday, February 19, 2026
புத்தாக்கம் செய்வோம்! பாதிப்புகளைக் குறைப்போம்! இணைந்து வாழ்வோம்!
காலத்துக்குக் காலம் புதுப் புதுத் தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும் தருணங்களில் சமூக, ஊடகங்களில் புதிய சூழலியற் போராளிகள் உருவாகிவிடுகின்றனர். AI அதிக அளவு மின்சாரத்தை எடுக்கின்றது. நிலக்கரி போன்ற எரிபொருட்களை எரிப்பதன் மூலம் இம்மின்சாரம் உற்பத்தியாவதால் வளியில் காபனீரொட்சைட்டு அதிகமாகின்றது. இவ்விதமாகப் பலரும் உரிமைக்குரல் எழுப்பத்தொடங்கி விடுகின்றார்கள். இவர்கள் உரிமைக்குரல் எழுப்புவது பாராட்டுக்குரியது. ஆனால் இவர்கள் இவற்றைப்பாவிப்பதைக் குறைத்து விடப்போகின்றேன் என்று கூறுவது போலித்தனமானது. இவர்கள் நிச்சயம் இதன் பயனைப் பாவிக்காமல் இருக்கப்போவதில்லை. அப்படிச் சூழலைப் பாதிப்பதைத் தடுப்பது இவர்களின் முக்கிய நோக்கமென்றால் இவர்கள் செய்ய வேண்டியவை பின்வரும் தொழில் நுட்பங்களையெல்லாம் நிராகரித்து விடுவது.
Tuesday, February 17, 2026
கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -
ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை
தொடர் நாவல் : சுதந்திர மனிதன்! - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் ஒன்று: அர்த்தமும், அர்த்தமின்மையும்!
சுதந்திரன் அவன் வசித்து வரும் தொடர்மாடிக் கட்டடத்தின் , அப்பார்ட்மென்டின் பல்கணியிலிருந்த சாய்வு நாற்காலியில் வந்தமர்ந்தபோது நன்கு இருண்டு விட்டிருந்தது. வானம் தெளிவாகவிருந்தது. நகரத்து ஒளி மாசிலிருந்து தப்பி நட்சத்திரக்கன்னியர்கள் சிலர் தொலைவிலிருந்து கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தனர். தொலைவிலிருந்து கண்களைச் சிமிட்டிக்கொண்டிருக்கும் சுடர்க்கன்னியர்கள் வழக்கம்போல் அவனுக்கு மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தினர். அவர்கள் ஓரிடத்திலிருந்து தன்னைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டுவதைப்போல் அவன் அப்போதெல்லாம் கருதிக்கொள்வான். அச்சிந்தனையே அவர்கள் மேல் அவனது ஈர்ப்பை மேலும் அதிகமாக்கியது. ஆனால் உண்மையில் அவர்கள் ஓரிடத்தில், ஒரே சமயத்திலிருந்து அவனை நோக்க்கவில்லையென்பதையும் உணர்ந்திருந்தான். காலத்தின் அடுக்குக்களின் வெவ்வேறு அடுக்குகளிலிருந்து அவர்கள் அவனை நோக்கிக் கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தார்கள். உண்மையில் அவர்கள் ஒவ்வொருவரையும் சுற்றி வெறுமை கலந்த விரி வெளி கவிந்திருந்தது. தனிமையின் வெறுமைக்குள் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதிலிருந்துகொண்டுதான் அவர்கள் உற்சாகம் மிக்கர்வகளாகக் கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தார்கள். அதனால் அவனுக்கு அவர்கள் மேலான மதிப்பும், நாட்டமும் அதிகரித்தது.
எவ்விதம் அவர்களால் தனிமைக்குள் இனிமை காண முடிகின்றது? ஒருவிதத்தில் தனக்கும் அவர்களுக்குமிடையில்தான் என்ன வேறுபாடு? தானும் ஒருவகையில் அவர்களைப்போன்றுதானே இருக்கின்றேன் என்றும் எண்ணிக்கொண்டான். தான் மட்டுமே அவன் வசிக்கும் இக்கோளில் உள்ளவர்கள் அனைவருமே இப்படித்தானே இருக்கின்றார்கள் என்றும் இவ்விதமான சமயங்களில் எண்ணிக்கொள்வான். அன்றும் எண்ணிக்கொண்டான்.
Tuesday, February 10, 2026
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.
இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI
வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு உற்பத்திச் சக்திகளின் வரலாறு.
உழைக்கும் தொழிலாளர் உருவாக்குவதே வரலாறு.
உலகின் வரலாற்றைப் படைப்பவர் இவரே.
உழைப்பவர் வேர்வை, உழைப்பில் உருவாவதே
உண்மையான வரலாறு தெரிந்து கொள்வோம்.
வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு உற்பத்திச் சக்திகளின் வரலாறு.
உண்மை வரலாற்றை அறியாது இருக்கின்றோம்.
மண்ணின் வரலாற்றை எழுதுபவர் மக்களே.
உண்மை வரலாறு அதுவே உணர்வோம்.
உணர்ந்து அவரை எப்போதும் போற்றுவோம்.
காலத்தால் அழியாத கானம்: 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி'
காலத்தால் அழியாத கானங்களில் ஒன்றான இது போன்ற உயிர்த்துடிப்புள்ள பாடல்களை, வரிகளையெல்லாம் மறக்கத்தான் முடியுமா? . பாடகி பி. சுசீலா அவர்களின் சிறந்த பாடல்களில் நிச்சயம் இடம் பெறும் பாடல் 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி' . கவியரசர் கண்ணதாசனின் சிறந்த பாடல்களில் ஒன்று. கவிஞர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் & ராமமூர்த்தி , பி.சுசீலா கூட்டணியில் உருவான சிறந்த பாடல்களிலும் இடம் பிடிக்கும் பாடல்.
விதவைப்பெண் ஒருத்தியின் உணர்வுகளை அற்புதமாக இதைவிட யாழ் எழுத்தில் எழுத்தில் வடிப்பார்? கவிஞரின் வரிகளுக்கு உயிரூட்டி நடித்திருக்கின்றார் செளகார் ஜானகி. அவரை நினைத்தால் நினைவுக்கு வரும் பாடல்களில் ஒன்றாகவும் இப்பாடலைக் கூறலாம்.
வ.ந.கிரிதரன் பாடல்: என் பிரியம் மிகு யாழ் மண்ணே!
வ.ந.கிரிதரன் பாடல்: என் பிரியம் மிகு யாழ் மண்ணே!
- இசை & குரல்: AI SUNO - ஓவியம் : AI
உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில் நிலைத்திருக்கும் பிரிய யாழ்மண்ணே.
பிறந்து உருண்டு தவழ்ந்த மண்.
பருவக் கனவுகள் பூத்த மண்.
போர்க்களங்கள் எத்தனை சந்தித்தாய் வரலாற்றில்.
பாரில் உயர்ந்து நிற்கின்றாய் யாழ்மண்ணே.
உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில் நிலைத்திருக்கும் பிரிய யாழ்மண்ணே.
தாழ்ந்த போதெல்லாம் மேலெழுந்தாய் நிலைத்தாய்.
தலைநிமிர்ந்து எழுந்து நின்றாய் என்மண்ணே.
எரித்த போதெல்லாம் துளிர்த்து எழுந்தாய்.
என்னருமை யாழ்மண்ணே! பிரிய யாழ்மண்ணே!.
அழியாத கோலங்கள்: ராணி வாராந்தரி சிறுவர் தொடர்கதைகள்!
என் பால்யப் பருவத்தில் எம் வாசிப்புப் பசிக்குத் தீனியாக இருந்தவற்றுள் ராணி வாராந்தரியில் வெளியான சிறுவர் தொடர்கதைகளும் அடங்கும். ராணி வாராந...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...


