Saturday, March 28, 2026
நான் பாடகரானால்..... - வ.ந.கிரிதரன் -
எனக்கு நீண்ட நாட்களாகப் பாட வேண்டுமென்ற ஆசை உண்டு. ஆனால் அதற்கு நிறையப் பயிற்சி தேவை. அதனால் பாடகர்களின் குரலினிமையை, இசையை இரசிப்பதுடன் நின்று விட்டிருந்தேன்.
ஆனால் தற்போது செயற்கை நுண்ணறிவு என் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளது. என் குரலில் , எனக்குப் பிடித்த பாடலொன்றை, இசையமைத்து என் குரலில் பாட வைத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு இசையமைப்பாளரான SUNO 5.5 AI இவ்விதம் சொந்தக் குரலில் பாடும் வசதியைச் செய்து தந்துள்ளது. ஒரு காலத்தில் நான் இந்நாட்டின் ஜனாதிபதியாகவிருந்தால் என்ன செய்வேன் போன்ற கட்டுரைகளை எழுதியிருக்கின்றேன். இப்போது நான் பாடகராகவிருந்தால் எப்படிப் பாடியிருப்பேன் என்பதைச் சுனோ செயற்கை நுண்ணறிவு இசையமைப்பாளர் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் காட்டியிருக்கின்றார். பாடகர் வ.ந.கிரிதரனின் பாடலைக் கேட்டு மகிழுங்கள்.
மகாகவி பாரதியார் பாடல் - சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ! இசை & குரல்: SUNO AI ஓவியம்: சாட் ஜிபிடி வழி வநகி ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
மகாகவி பாரதியார் பாடல் - சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ!
இசை & குரல்: SUNO AI ஓவியம்: சாட் ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ
சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
Thursday, March 26, 2026
வ.ந.கிரிதரன் பாடல் - தாயே! - வ.ந.கிரிதரன் -
இன்று அம்மாவின் நினைவு தினம். நவரத்தினம் டீச்சர் என்று மாணவர்கள் மத்தியிலும், 'மங்கை' என்று அவரது சிநேகிதிகள் மத்தியிலும் அறியப்பட்ட அம்மாவின் மறைவின்போது நான் எழுதிய கவிதை இது. அம்மாவின் நினைவாக அதனைச் செயற்கை நுண்ணறிவு கொண்டு பாடலாக்கியிருக்கின்றேன். நான் எழுதிய கவிதை வரிகளை இசையமைத்து பாடியிருக்கின்றது செயற்கை நுண்ணறிவு.
வ.ந.கிரிதரன் பாடல் - தாயே!
இசை & குரல்: SUNO AI ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
தாயே! என்னிருப்பில்
உன்னிருப்பறிந்தேன்!
உன்னிருப்பாலிருப்பின் மறுப்புதனை
உணர்த்தியெங்கு சென்றாய் ? தாயே!
எங்கு சென்றாய் ?
Wednesday, March 25, 2026
' வ.ந.கிரிதரனின் பாடல்களும் & பார்வைகளும் ' 'யு டியூப் சானல்': மகாகவி பாரதியார் பாடல்கள் நான்கு!
'வ.ந.கிரிதரனின் பாடல்களும் & பார்வைகளும் ' (V.N.Giritharan Songs & Views) என்னும் 'யு டியூப் சான'லில் செயற்கை அறிவின் (AI) துணை மூலம் இசையமைக்கப்பட்ட , குரல் கொடுக்கப்பட்ட என் பாடல்களைக் கேட்டு மகிழலாம். பல்வேறு விடயங்களைப் பற்றியஎன் பார்வைகளையும் கேட்டறிந்து கொள்ளலாம்.
அவ்வப்போது காப்புரிமைப் பிரச்சனை அற்ற , எனக்குப் பிடித்த மகாகவி பாரதியார் போன்றோரின் கவிதைகளையும் செயற்கை நுண்ணறிவு மூலம் இசையமைத்து, பாட வைத்துப் பகிர்ந்து கொள்வேன்.
பாடல்களும், பார்வைகளும் பிடித்திருந்தால் என்னுடன் தொடர்ந்துவர மறக்காமல் Subscribe பட்டனை அழுத்தி Bell பட்டனையும் தேர்வு செய்யுங்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி. எனது மின்னஞ்சல் முகவரி girinav@gmail.com
Tuesday, March 24, 2026
மகாகவி பாரதியார் பாடல் - காற்று வெளியிடைக் கண்ணம்மா!
மகாகவி பாரதியார் பாடல் - காற்று வெளியிடைக் கண்ணம்மா!
இசை & குரல்: SUNO AI ஓவியம்: சாட் ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்
காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்
Monday, March 23, 2026
மகாகவி பாரதியார் பாடல் - செந்தமிழ் நாடெனும் போதினிலே!
மகாகவி பாரதியார் பாடல் - செந்தமிழ் நாடெனும் போதினிலே!
இசை & குரல்: SUNO AI ஓவியம்: சாட் ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே -
வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே -
மகாகவி பாரதியார் பாடல் - மனமெனும் பெண்ணே! இசை & குரல்: SUNO AI ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
மகாகவி பாரதியார் பாடல் - மனமெனும் பெண்ணே!
இசை & குரல்: SUNO AI ஓவியம்: சாட் ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
மனமெனும் பெண்ணே!வாழிநீ கேளாய்!
மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்து கை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்
மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!
மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!
தமிழகமும் , ஊழலும்!
தமிழக வெற்றிக்கழகம் தமிழ் நாட்டில் ஊழலை ஒழித்து விட்டதாகக் கதைக்கின்றார்களே, அது உண்மையா? ஆராய்ந்து பார்த்தால் ஓரளவு உண்மை உண்டு.ஓரளவு பொய்...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...