Sunday, September 14, 2025

மானுட அவதானிப்பும், சமுதாயப் பிரக்ஞையும் மிக்க எழுத்தாளர் ரஞ்ஜனி சுப்ரமணியத்தின் கதைகள் .. - வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர்  ரஞ்ஜனி  சுப்ரமணியத்தின் சிறுகதைத்தொகுப்பான 'நெய்தல் நடை' தற்போது ஜீவநதி பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. இத்தொகுப்பு நான் எழுதிய அணிந்துரை இது. 


ஒருவகையில் சிறுகதையை இவ்வுலகைப் பார்க்கும் ஜன்னல் என்றும் கூறலாம். அந்த ஜன்னலூடு வெளியே விரிந்து கிடக்கும் உ லகைப் பார்க்கின்றோம், வியக்கின்றோம். உணர்கின்றோம. புரிந்து கொள்கின்றோம். அந்த உணர்தல் பலவகைப்பட்டதாக  இருக்கும். இவ்வகையில் சிறுகதை ஒவ்வொன்றையும்  ஒரு ஜன்னல் என்று உருவகிக்கலாம்.  இத்தொகுப்பில் பல ஜன்னல்கள் இருக்கின்றன. இந்த ஜன்னல்களைக் கொண்டு இச் சிறுகதைத் தொகுப்பென்ற மண்டபத்தினை அமைத்திருக்கின்றார் எழுத்தாளர் ரஞ்ஜனி சுப்பிரமணியம்.  இந்த மண்டபத்தின்  ஜன்னல்கள் , ஜன்னல்களுக்கு வெளியே விரிந்து கிடக்கும் உலகை, அங்கு வாழும் பல்வகை மாந்தரை, அவர்தம் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள எம்மைத்தூண்டுகின்றன. மருத்துவராக, மானுடராக ,அவர் அன்றாடம் கண்டு அறிந்த, அவதானித்த  உலகை,  சக மாந்தரை  , அவர்தம் வாழ்வை அவதானித்து, அவை ஏற்படுத்திய உணர்வுகளைக் கொண்டு ஜன்னலொவ்வொன்றையும்  உருவாக்கியுள்ளார்  ரஞ்ஜனி  சுப்ரமணியம்.  சமுதாயப் பிரக்ஞை மிக்க ஜன்னல்கள் அவை.

''பதிவுகளி'ல் அன்று - சாகித்ய அகாதெமியின் கருத்தரங்கு! - நா.முத்துநிலவன் -

[பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை  இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ] 

பதிவுகள் பெப்ருவரி 2004 இதழ் 50 

'பதிவு'களில் அன்று - சாகித்ய அகாதெமியின் கருத்தரங்கு! 

அன்பினிய "பதிவுகள்" ஆசிரியர் நண்பர் திரு.வ. ந.கிரிதரன் அவர்களுக்கு, வணக்கம். அண்மையில் - கடந்த 20,21,22 ஜனவரி -2004 தேதிகளில், சாகித்ய அகாதெமியின் சார்பில்,நெல்லை ம.சு.பல்கலையில் மூன்று நாள் இலக்கிய விமர்சனக் கருத்தரங்கு ( Three Days Seminar on 'LITERARY CRITICISM' at MSU, Thirunelveli ) நடந்தது. ம.சு.பல்கலையின் ஆங்கிலத்துறைப் பேராசிரியரும், வானம்பாடிக் கவிஞரும், சாகித்ய அகாதெமியின் தமிழ்மொழிக் குழுத் தலைவரும்  ஆன முனைவர் பாலா (ஆர்.பாலச்சந்திரன்) அவர்களின் முன் முயற்சியில் கருத்தரங்கு வெகுசிறப்பாக நடந்தது.

பல்கலையின் துணைவேந்தர் திரு சொக்கலிங்கம் தலைமை தாங்க, தமிழ்த்துறைத் தலைவரும், அறியப்பட்ட தமிழறிஞருமான- 'அறியப்படாத தமிழகம்' முதலான நூல்களின் ஆசிரியர்- முனைவர் தொ.பரமசிவம் தொடக்கவுரையாற்றினார். அந்த மூன்று நாள்களிலும் தமிழறிஞர்கள்/ஆங்கில இலக்கிய விமர்சகர்கள்/ தமிழ் இலக்கிய முன்னோடிகள், பெரும் பேராசிரியர்கள் - (Senior Doctorates), நெல்லை, மதுரை, சென்னை, திருச்சி, கோவை, புதுவை மற்றும் திண்டுக்கல் காந்திகிராமம் ஆகிய 7 பல்கலைக் கழகங்களைச்சேர்ந்த சுமார் 36 மூத்த பேராசிரியர்கள் ஆய்வுரைகளை (Research Papers) முன்வைத்தனர். (இதில் நான் மட்டும்தான்  பள்ளிக்கூட வாத்தியாருங்கோ!)

'பதிவுகளி'ல் அன்று - சுவிஸ் பெண்கள் சந்திப்பு 2003! ஒரு குறிப்பு! - றஞ்சி (சுவிஸ்) -

[பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை  இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]

பதிவுகள் டிஸம்பர் 2003 இதழ் 48 
'பதிவு'களில் அன்று - சுவிஸ் பெண்கள் சந்திப்பு 2003! ஒரு குறிப்பு! - றஞ்சி (சுவிஸ்) -

புகலிடத்தில் வாழும் பெண்கள் தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பரிமாறிக்கொள்ளும் முகமாக 1990இல் ஜேர்மனியில் உள்ள சில பெண்களால் ஆரம்பிக்கப்பட்டது. இப் பெண்கள் சந்திப்பு ஜேர்மனியின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற அதேநேரம், அது தனது எல்லைகளை விஸ்தா¢த்து சுவிஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் சந்திப்புகளை நடாத்தி வருகின்றது. ஜரோப்பாவில் வாழும் பெண்கள் மட்டுமன்றி இலங்கை, இந்தியா அவுஸ்திரேலியாவிலிருந்தும்கூட பெண்கள் வந்து கலந்து கொள்ளும் சந்திப்பாக வளர்ந்திருக்கிறது. சுவிஸில் மூன்றாவது தடவையாக நடைபெறும்  பெண்கள் சந்திப்பின் 22வது தொடர் ஒக்டோபர் மாதம் 11ம் திகத§ சுவிஸ் சூ¡¢ச் நகா¢ல்  நடைபெற்றது. இச் சந்திப்பு தனது 13வது வருடத்தை பூர்த்தி செய்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஓரு நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற இச் சந்திப்பில் பெண்ணியச் சிந்தனை நோக்கிலான கருத்தாடல்கள், அனுபவப் பகிர்வுகள், விமர்சனங்கள் என்பன இடம்பெற்றன. 

'பதிவுகளி'ல் அன்று - எழுத்தாளர் - லதா ராமகிருஷ்ணனின் நிகழ்வுக் குறிப்புகள்!


[பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை  இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ] 

பதிவுகள் யூலை 2004 இதழ் 55

எழுத்தாளர் மா.அரங்கநாதனின் படைப்புலகம்!

ஐம்பதுகளில் பிரசண்ட விகடன், பொன்னி, புதுமை ஆகிய இலக்கிய இதழ்களில் எழுதியவர். சாகித்ய அகாதமிக்காக சிறுகதைகள் மொழிபெயர்த்துள்ளவர். தமிழக அரசு நாவல் பரிசு, கோவை வில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு, திருப்பூர்த் தமிழ்ச் சங்கப் பரிசுகள் பெற்றவர். 'பொருளின் பொருள் கவிதை' என்ற கட்டுரை நூல், வீடு பேறு, ஞானக்கூத்து, காடன்மலை முதலிய மீன்று சிறுகதைத் தொகுப்புகள், 'பறளியாற்று மாந்தர்' என்ற புதினம் ஆகியவற்றின் படைப்பாளி. தமிழின்பால் அபரிமிதமான அபிமானம் கொண்டவர். எண்பதுகளில் 'மூன்றில்' என்ற சிற்றிதழின் நிறுவனர்- ஆசிரியர் மற்றும் 'மூன்றில் ' என்ற இலக்கிய அமைப்பின் வாயிலாக பல நல்ல புத்தகங்களையும் வெளியிட்டவர். இத்த்னை சிறப்பிற்கும் உரிய திரு. மா.அரங்கநாதனுக்கு 17-04-01 அன்று சென்னையில் இலக்கிய ஆர்வலர்களால் ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டது. திரு.ச.சீ.கண்ணனை அடுத்து அமர்நதா, 'வெளி' ரெங்கராயன், லதா ராமகிருஷ்ணன் ஆகியோர் மா.அரங்கநாதனின் படைப்புத் திறனுக்கான பதில் மரியாதையாக ஏற்பாடு செய்திருந்த கூட்டம் இது. 

கூட்டத்தில் மா.அரங்கநாதனின் படைப்புலகம் பற்றியும், அவருடைய 'மூன்றில்' சிற்றிதழின் இலக்கியப் பங்களிப்பு குறித்தும் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. மூன்றில் ஏறத்தாழ 20 இதழ்களுக்கு மேல் வெளியாகியது. பலதரப்பட்ட இலக்கியப் போக்குகளுக்கும் அது இடமளித்தது. அதன் முதல் சில இதழ்களுக்கு திரு.க.நா.சு ஆசிரியராக இயங்கினார். 'மூன்றில்' சார்பில் நடத்தப்பட்ட மூன்றூ நாள் இலக்கியக் கருத்தரங்கம் 'First of Kind' என்று சொன்னால் மிகையாகாது. மேலும் மூன்றில் என்பது வெறும் இலக்கிய இதழாக மட்டும் செயற்படாமல், ஒரு சிறு பத்திரிகை இயக்கமாகவும் செயல்பட்டது. மூன்றில் பதிப்பகம் மூலம் நல்ல பல புத்தகங்கள் வெளியாகின. கோபிக்கிருஷ்ணனின் 'சமூகப்பணி- அ-சமூகப்பணி-எதிர்-சமூகப்பணி' மற்றும் 'உள்ளேயிருந்து சில குரல்கள்' முதலிய புத்தகங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சென்னை மாம்பலம் ரங்கநாதன் தெருவில் இயங்கிய மூன்றில் அழுவலகம் இலக்கியவாதிகள்  இளைப்பாறும், உத்வேகம் பெறும் இடமாக இருந்தது என்றால் மிகையாகது என்று கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் நினைவு கூர்ந்தார்கள்.

'பதிவுகளி'ல் அன்று - எழுத்தாளர் திலகபாமாவின் (சிவகாசி) நிகழ்வுக் குறிப்புகள்!

[பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முர்சு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை  இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]

இலக்கியம்! பதிவுகள் செப்டம்பர் 2004 இதழ் 57 

செப்டம்பர் மாத சந்திப்பு!  நவீன இலக்கியத்தின் சமீபத்திய போக்குகள்!  சிறப்புரை: கவிஞர் பிரம்மராஜன்! பாரதி இலக்கியச் சங்கம் சிவகாசி 

5.09.04 அன்று காலை 10.30 மணிக்கு  நிகழ்ச்சி ஆரம்பமானது. திலகபாமாவின் “நவீன இலக்கியத்தின் சமீபத்திய போக்குகள்  பற்றிய”   ஆரம்ப உரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. அவரது உரையில் “வாழ்வோடுதான் என் எழுத்து என வாழ்ந்து கொண்டிருந்தவள் நான். முதன் முறையாக2000த்தில்  தான் எழுத்துலகை நின்று கவனிக்கத் துவங்குகின்றேன். இனிமேலும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது  என்கின்ற சூழலில் தான்   எழுத்து பற்றிய என்  விமரிசனங்களை வெளியிடத் துவங்குகின்றேன். இந்த 4 வருட அவதானிப்பு  நிறைய எனக்குள் கேள்விகள்: எழுப்பியிருக்கின்றது.. மனிதத்துள் நுழைய முடியாது தவிப்பவர்கள்,சமுகப் பொறுப்புணர்வு அற்றிருப்பவர்கள் எல்லாம்  இலக்கியம் செய்ய வந்திருப்பதும், செய்து கொண்டிருப்பதும் தாங்கள் செய்து கொண்டிருந்தவற்றை பலரும் பின் பற்றும் படி செய்ய தொடர் பழக்க வழக்கமாக்கி அதை நிலை நிறுத்துவதும் தொடர்ந்து நடந்த படி இருப்பது இலக்கியத்துள் குறிப்பாக கவிதைகளில் ஒரு ஆரோக்கியமற்ற போக்கை உருவாக்கி வைத்திருக்கின்றது. 

'பதிவுகளி'ல் அன்று - பண்டிதர் வி.சீ.கந்தையாவின் ”மட்டக்களப்புத் தமிழகம்” பாரிஸ் நகரில் எக்ஸில் வெளியீடாக.... - இன்பவல்லி -


[பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முர்சு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை  இப்படைப்புகள் எடுத்துரைக்கும்.
]

பதிவுகள் டிஸம்பர் 2003 இதழ் 48

பதிவுக'ளில் அன்று -  பண்டிதர் வி.சீ.கந்தையாவின்  ”மட்டக்களப்புத் தமிழகம்”   பாரிஸ்  நகரில் எக்ஸில் வெளியீடாக....  - இன்பவல்லி -

உடல் உழைப்பாளர்களையும், அடித்தட்டு மக்களையும் அதிகளவில் கொண்ட பாரிஸ் - 18 இல் கடந்த 16-11-2003 அன்று மட்டக்களப்பு தமிழகம் எனும் வரலாற்று நு¡ல் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழர்கள் வணிகரீதியாக மையங்கொண்டுள்ள லாசப்பல் (டுய ஊ¡யிநடடந) எனும் இடத்தில் அமைந்துள்ள தமிழர் வித்தியாலயத்தில் சுமார் மாலை 5மணி அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு இரவு 9 மணிவரை நீடித்தது. ”எக்ஸில்” வெளியீட்டகத்தின் மூன்றாவது வெளியீடாக அமைந்த மட்டக்களப்பு தமிழகம் ஜரோப்பாவில் இரண்டாவது தடவையாக வெளியிடப்பட்டுள்ளது. முதலாவது தடவையாக சுவிஸ் -சூரிச் நகரில் 12.10.2003 வெளியீட்டு வைக்கப்பட்டது. 1962 ம் ஆண்டு கிழக்கிலங்கை தோறும் ஆலயங்களிலும், பண்டைத்தமிழ்ப் புலவர்களிடத்திலும் அடங்கிக்கிடந்த கல்வெட்டுக்கள் தொகுக்கப்பட்டு விளக்கவுரையுடன் முதன்முதலில் ”மட்டக்களப்பு மான்மிகம்” அச்சுருவம் பெற்றது. இதையடுத்து வீ.சி.கந்தையா பண்டிதர் அவர்கள் 1949 இலிருந்து எழுதிவந்த ஆராய்ச் சிக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு முழுமையான ஒரு வரலாற்று நு¡லாக 1964 இல் ”மட்டக்களப்பு தமிழகம்” எனும் நு¡ல் வெளியிடப்பட்டது. தமிழர் குடியேற்றம், நாட்டுக்கூத்துகள், பாடுமீன், புலவர் பரம்பரை, பண்டைய வழிபாட்டுமுறைகள், மந்திரவழக்கு, அரசியல் வரலாறு என்று குறித்த சமூகத்தின் சகலவித அசைவியக்க அம்சங்களையும் ஒன்றுசேர்த்து தொகுக்கப்பட்ட இந்நு¡ல் எதிர்கால ஆய்வுகளுக்கு சிறந்தவொரு ஆதாரமையமாகும். 

நூல்வெளியீட்டுக்கு தலைமையேற்ற ஓவியரும், எழுத்தாளருமான அ.தேவதாசன் அவர்கள் 2500 வருடங்களுக்கு முன்பே அமைக்கப்பட்ட தீகவாபி குகையில் இருந்து மட்டக்களப்பின் புராதன வரலாறு தொடங்குவதை தொட்டுக்காட்டி தனது பேச்சை ஆரம்பித்தார். கிறிஸ்துவுக்கு முன் 545 ஆம் ஆண்டு விஐயன் வந்ததில் இருந்து துட்டகைமுணு ஈறாக நீண்டகால அரசியல் வரலாற்றை இக்குகை கொண்டிருப்பதனையும்  பெளத்த, சமண, சைவ, இஸ்லாம், கிறிஸ்தவம் என்று பல்வித மதங்களையும் பின்பற்றிய சிற்றரசர்கள் தீகவாபியில் இருந்து மட்டக்களப்பு பிரதேசத்தை ஆட்சிசெலுத்தியிருப்பது குறித்து சிலாகித்தார். 

Saturday, September 13, 2025

என் அப்பாவுக்குப் பிடித்த நடிகர் ரஞ்சன்!


நடிகர் ரஞ்சனின் நினைவு தினம் செப்டம்பர் 12.  என் தந்தையார் காலத்து 'சுப்பர் ஸ்டார்'கள் எம்.கே.டி பாகவதர் & பி.யூ.சின்னப்பா.  எம் காலத்து எம்ஜிஆர் & சிவாஜி போல். எம் காலத்து இளம் சுப்பர் ஸ்டார்கள் ரஜனி & கமல் போல் அவர் காலத்து இளம் சுப்பர் ஸ்டார்கள் எம்.கே.ராதா & ரஞ்சன்.

ரஞ்சன் வாள் வீச்சு, குதிரையேற்றம் போன்றவற்றில் வல்லவர் என்றும், M.Lit பட்டதாரியென்றும், விமானம் ஓட்டும் அனுமதிப்பத்திரம் உள்ளவர் என்றும் , பாடும் வல்லமை மிக்கவர் என்றும் அப்பா அடிக்கடி நடிகர் ரஞ்சனைப் புகழ்வதுண்டு. அப்போதெல்லாம் ரஞ்சன், எம்.கே.ராதா & டி.ஆர்.ராஜகுமாரி நடித்த ஜெமினி ஸ்டியோ தயாரிப்பாக , எஸ்.எஸ்.வாசனின் இயக்கத்தில் தமிழ் , ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்து பெரும் வசூலைப்பெற்றுச் சாதனைகள் நிலைநாட்டிய சந்திரலேகா (1948) திரைப்படம் பற்றியும் குறிப்பிடுவார். அதன் காரணமாகவே நான் படம் பார்க்கும் பதின்ம வயதுகளில் மீள் வெளியீடாக வெளிவந்த சந்திரலேகா திரைப்படம் பார்த்தேன். பிரமித்தேன்.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...