Tuesday, March 24, 2026
மகாகவி பாரதியார் பாடல் - காற்று வெளியிடைக் கண்ணம்மா!
மகாகவி பாரதியார் பாடல் - காற்று வெளியிடைக் கண்ணம்மா!
இசை & குரல்: SUNO AI ஓவியம்: சாட் ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்
காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்
Monday, March 23, 2026
மகாகவி பாரதியார் பாடல் - செந்தமிழ் நாடெனும் போதினிலே!
மகாகவி பாரதியார் பாடல் - செந்தமிழ் நாடெனும் போதினிலே!
இசை & குரல்: SUNO AI ஓவியம்: சாட் ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே -
வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே -
மகாகவி பாரதியார் பாடல் - மனமெனும் பெண்ணே! இசை & குரல்: SUNO AI ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
மகாகவி பாரதியார் பாடல் - மனமெனும் பெண்ணே!
இசை & குரல்: SUNO AI ஓவியம்: சாட் ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
மனமெனும் பெண்ணே!வாழிநீ கேளாய்!
மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்து கை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்
மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!
மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!
Saturday, March 21, 2026
மகாகவி பாரதியார் பாடல் - கண்ணன் என் காதலன்! இசை & குரல்: SUNO AI ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
இசை & குரல்: SUNO AI ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ணனழகு முழுதில்லை
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
Friday, March 20, 2026
மகாகவி பாரதியார் பாடல் - புதிய கோணங்கி! இசை & குரல்: SUNO AI ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
மகாகவி பாரதியார் பாடல் - புதிய கோணங்கி
இசை & குரல்: SUNO AI ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு.
நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது.
சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது.
வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு.
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு.
நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது.
தரித்திரம் போகுது;செல்வம் வருகுது.
படிப்பு வளருது;பாவம் தொலையுது.
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்.
போவான்,போவான்,ஐயோவென்று போவான்.
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு.
நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது.
Thursday, March 19, 2026
மகாகவி பாரதியார் பாடல் - திக்குக்கள் எட்டும் சிதறி! இசை & குரல்: SUNO AI ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
இசை & குரல்: SUNO AI ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம்
சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட
திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
வெட்டி யடிக்குது மின்னல்,-கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம் -கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று.
சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்.
எட்டுத் திசையும் இடிய-மழை
எங்ஙனம் வந்ததடா,தம்பி வீரா!
திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
Wednesday, March 18, 2026
மகாகவி பாரதியார் பாடல் - மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்! இசை & குரல்: SUNO AI ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
இசை & குரல்: SUNO AI ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும்
புன்னகையின் புது நிலவு போற்ற வரும் தோற்றம்
துங்கமணி மின் போலும் வடிவத்தாள் வந்து
தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா
அழகெனும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன்
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
Subscribe to:
Comments (Atom)
மகாகவி பாரதியார் பாடல் - 'புதுமைப்பெண்'
எனக்குப் பிடித்த மகாகவி பாரதியாரின் 'புதுமைப்பெண்' பாடலின் சில பகுதிகளை எடுத்து, தொகுத்திருக்கின்றேன். . எனது குரலைப் பாவித்து , இச...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...