இலங்கையில் இருந்த காலத்தில் எஸ்கிமோ, நீக்ரோ, செவ்விந்தியர் போன்ற சொற்பதங்களால் அவை குறிப்பிடும் இன மக்களை நாமெல்லாரும் அழைத்து வந்தோம். இங்கு வந்தபின்பும் ஆரம்பத்தில் அவ்விதமே அழைத்து வந்தோம்,. ஆனால் காலப்போக்கில் அப்பெயர்கள் அம்மக்களை இழிவு படுத்தும் , இனத்துவேசம் மிக்க பெயர்கள் என்பதை அறிந்து அவற்றைப் பாவிப்பதை நிறுத்தி விட்டோம்.
இவை ஏன் அம்மக்களை இழிவு படுத்தும் சொற்பதங்கள் என்பதைப் பார்ப்போம்.
எஸ்கிமோ
(Eskimo) இந்தச்சொல்லின் உண்மையான் அர்த்தம்
Algonquin மொழியில் இருந்து பெறப்பட்டது. 'பச்சை மாமிசம் சாப்பிடுபவர்கள் என்பது பெயர். இச்சொல் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைக் குறிக்கவில்லை. ஆர்க்டிக் இனக்குழுக்களான
(Inuit, Yupik, Iñupiat போன்றவர்களை ஒரு சேர அழைக்கப்பாவிக்கப்பட்டது. தற்போது கனடாவில்
"Inuit" (இனியுட்), அலாஸ்காவில்
Yupik" (யுபிக்) ,
"Inupiat" (இனுபியாட்) போன்ற பெயர்கள் பாவிக்கப்படுகின்றன. அனைவரையும் உள்ளடக்கி "
First Nation" என்னும் சொற்பதமும் பாவிக்கப்படுகின்றது.
இது போல் செவ்விந்தியன்
(Red Indian) என்னும் பெயர் அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸ் அதனை இந்தியா என்று தவறாக முடிவு செய்த வரலாற்றுத்தவறினால் உருவானது. அமெரிக்காவின் ஆதிக்குடிகளை (
Native Americans / Indigenous Peoples) இந்தியர்களாகக் கருதி , அவர்களின் நிறத்தையும் சேரத்துச் செவ்விந்தியர் என்றழைக்கப்பட்டனர். இது நிறவெறி மிக்க ஒரு சொற்பதம். இதனை இப்போது பாவிப்பதில்லை. இன்று பொதுவாக
Native American", "American Indian" (அமெரிக்கன் இந்தியன்), அல்லது
"Indigenous Peoples" (சுதேசிய மக்கள்) என்றே இம்மக்கள் அழைக்கப்படுகின்றனர்.அத்துடன்
Cherokee, Navajo, Sioux போன்ற இனக்குழுப் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றனர்.
இது போன்ற இன்னுமொரு சொல் 'நீக்ரோ' (Negro) என்று கறுப்பினத்தவரை அழைக்கும் சொல். . ஸ்பானிஷ் மொழியில் இது கறுப்பு என்னும் அர்த்தத்தைத் தரும். கறுப்புத்தோல் கொண்டவரகள் என்னும் நிறப்பாகுபாட்டைக் காட்டுவதற்காகப் பாவிக்கப்பட்ட இச்சொல் அமெரிக்காவில் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக நடத்தப்பட்ட காலகட்டத்தில் இவர்களைக் குறிக்கும் சொல்லாகவும் பயன்படுத்தப்பட்டது. இன்று இச்சொல் பாவிக்கப்படுவதில்லை. Black, African American போன்ற சொற்களால் இன்று கறுப்பினத்தவர் தம்மை அடையாளப்படுத்துகின்றனர்.
எங்கெல்லாம் இனக்குழுக்களை அழைக்கப்பாவிக்கபப்டும் சொற்பதங்கள் ஒடுக்குமுறை, பாகுபாடு, மனித உரிமை மீறல்களுடன் தொடர்புள்ளவையாக இருக்கின்றனவோ, அச்சொற்பதங்களைப் பாவிப்பதையும் தவிர்க்க வேண்டும். இது யாழ்ப்பாண்ச சமூகங்களுக்கும் பொருந்தும்.
இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் பலர் ஏற்கனவே அவ்விதம் அழைப்பதை தவிர்த்து வருகின்றனர. மேட்டுக்குடி, சீவல் தொழிலாளர் போன்ற சொற்பதஙக்ளை அவர்கள் பாவித்து வருகின்றனர். இது ஒரு விதத்தில் நல்லது. ஏனென்றால் சாதியச் சின்னங்களை, பெயர்கள் உட்பட, அவற்றை எதிர்ப்பவர்கள் கூட மீண்டும் மீண்டும் மீண்டும் பாவிக்கும்போது அப்பெயர்கள் வரலாற்றில் நிலைத்து நின்று விடுகின்றன. புதிய தலைமுறையினர் மத்தியிலும் அப்பெயர்கள் தொடர்ந்து பயணம் செய்கின்றன. அவ்விதம் நிலைத்து நிற்பதைத்தவிர்ப்பதற்கு அப்பெயர்களைத் தவிர்ப்பதும் முக்கியமான முதற்படியாக அமையும்.
உளவியலில் ஒரு கோட்பாடு உண்டு. அது ஒரு சொல்லை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு வந்தால், அது நல்ல சொல்லோ, கெட்ட சொல்லோ , ஆழ்மனத்தில் ஆழச்சென்று படிந்து விடுகின்றன். அதை Auto Suggestion (சுய மந்திரம்) என்பர். மேற்படி சமூக ஒடுக்குமுறையுடன் சம்பந்தபப்ட்ட சொற்பதங்களையும் திரும்பத் திரும்பப் பாவிப்பதும் ஒரு வகை Auto Suggestion தான். சுயமந்திரம்தான்.