Friday, August 2, 2024

அறிஞர் அண்ணா! - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல்: AI SUNO -


என் ஆளுமையில் அறிஞர் அண்ணாவுக்கும் முக்கிய பங்குண்டு. வெகுசனப் படைப்புகள் -> திராவிட முன்னேற்றக் கழக எழுத்துகள் -> மார்க்சியப் புரிதல் என என் ஆளுமை பரிணாமடைந்து வந்துள்ளது. 

பதின்ம வயதுகளில் அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் உரைகள் இளைஞர்களை ஆட்டிப் படைத்தன. தேடித் தேடி வாசித்தோம். இளைஞர்கள் நூலகங்களை அண்ணா அறிவகம் என்னும் பெயரில் ஆரம்பித்தார்கள்.

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=4CQZe3j8eQI

அறிஞர் அண்ணா!  - வ.ந.கிரிதரன் -

சமூகத்து மூட நம்பிக்கைகளை
சுட்டெரித்தவர் அறிஞர் அண்ணா.

'ஏ தாழ்ந்த தமிழகமே!
எம்மைப் பிரமிக்க வைத்தது.
எம்மைச் சிந்திக்க வைத்தது.
எங்கும் நிலவிக் கிடக்கும்
ஏற்றத் தாழ்வுகளை எடுத்துரைத்தது.

'எதையும் தாங்கும்  இதயம் வேண்டும்'

'நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.
நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.'

'ஒன்றே குலம். ஒருவனே தேவன்'

அண்ணாவின் மொழியை மாந்திக் கிடந்தோம்.
அதில் களிவெறி கொண்டு கிடந்தோம்.

Thursday, August 1, 2024

கவிதை: இந்த மனிதர்! இந்த உலகம்! இந்தப் பிரபஞ்சம்! - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

- இக்கவிதை 5/3/1983 அன்று என் குறிப்பேட்டில் எழுதப்பட்ட கவிதை. இக்கவிதையை யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=h0ZL-aFAXSk

இந்த மனிதர்! இந்த உலகம்! இந்தப் பிரபஞ்சம்!  

ஆ...இந்த மெல்லிய இளந்தென்றல்...
இடையில் கலந்து வருமெழில் மலர்களின்
சுகந்த நறுமணம்...
பசுமை மண்டிக் கிடக்கும் வயல்வெளிகளில்
பாடிப் பறந்திடும் வானம்பாடிகளின்
இன்ப கானங்கள்...
ஆகா! ஆகா! ஆகா!
எத்துணை இனிமையானவை!
எத்துணை இன்பமானவை!

பதுங்கிக் காடுகளில் புகுந்துவரும்
நதிப்பெண்களே!
நான் உங்களை எவ்வளவு காதலிக்கிறேன்
தெரியுமா? இளமை கொஞ்சுமுங்களெழிற்
துள்ளல் நடைகண்டு மோகத்தீயாலெந்தன்
நெஞ்சம் வேகுகின்றதே! புரியவில்லையா
பெண்களே!

Wednesday, July 31, 2024

காலவெளிக்காட்டி வல்லுனன்! - வ.ந.கிரிதரன் -



           - இசை & குரல்: AI SUNO -

பதிவுகள்.காம் வெளியீடான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள இக்கவிதை. ஒரு சில மாற்றங்களுடன் பாடலாக்கப்பட்டுள்ளது. யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=DQRDqnJPwUU

காலவெளிச் சட்டங்களைக் கோத்து உருவானது
இந்த இருப்பு கண்ணம்மா!

இவ்விருப்பும் ஒரு காலவெளிப் படம்
என்பதையுணர்வாயாயடி நீ கண்ணம்மா.

என்னாசை ஒன்று உள்ளதென்பேன்.
என்னவென்று நீ அறியின் நகைக்கக்கூடும்.
கண்ணம்மா, நகைக்கக் கூடும்

அப்போது கண்ணம்மா! அதிகாலைநேரம்.
ஆடியசைந்து நீ வந்தாய் பொழுதின் எழிலென.
அது நினைவிருக்கிறதா? உனக்கு.
அது நினைவிருக்கிறது எனக்கு கண்ணம்மா..

நாங்கள் கவிகள்! - வ.ந.கிரிதரன் -




- இசை & குரல்: AI SUNO -

1980இல் தினகரன் (இலங்கை) பத்திரிகையின் கவிதைச் சோலை பகுதியில் வெளியான எனது கவிதைகளான 'சீடர்கள்' , ' எதிர்பார்ப்பு' ஆகிய இரு கவிதைகளையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது இக்கவிதை..  யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=2BoJqz8w87s

நாங்கள் கவிகள்
புல்லின் நுனிகளில் பொலிந்திடும் எழிலினில்
மெல்லிய முருங்கைகளில் தொங்கிடும்
தூக்கணாங் குருவிக் கூடுகளின்
இனிமையான அழகுகளில்
மெய்ம்மறந்திடும்  எங்கள் நெஞ்சங்கள்;
சோகங்கள் கண்டு நகருகையில்
அமைதி அடைவதில்லை.
வாழ்க்கைக் காடுகளில் வழிமாறித் துடித்திடும்
மனித ஜீவன்களுக்கு
வழிகாட்டுதற்காய், கவி வடித்திடும் வழிகாட்டிகள்
நாங்களே!

Tuesday, July 30, 2024

யாழ்ப்பாணத்து மொக்கங் கடை! - வ.ந.கிரிதரன் -




- இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=o3WH-tw_A4Q

யாழ்ப்பாணத்து மொக்கங் கடை!  - வ.ந.கிரிதரன் -
 
மனத்தில்  தெரிகிறது.
மொக்கங் கடை
யாழ்ப்பாணத்தின்
மொக்கங் கடை

மறக்க முடியாத மொக்கங் கடை.
மறக்க முடியாத மொக்கங் கடை.
யாழ்ப்பாணமண்ணின்
மொக்கங் கடை.

கொத்து ரொட்டியென்றால்
எமக்கு
மொக்கங் கடை தானே.

மொக்கன் கடை என்றே
மக்கள் அழைப்பர்.
எனக்கோ அது என்றுமே
மொக்கங் கடை.

மொக்கங் கடை என்றே
முகப்பு விளம்பரத்தில்
பார்த்த நினைவு.

நினைவு பொய்யோ
நினைவு மெய்யோ
நிலைத்து விட்டது
நினைவில் மொக்கங் கடை
என்றே.
என் நினைவில்
மொக்கங் கடை
என்றே.

யாழ்ப்பாண ஐந்து சந்திக்கு
அண்மையில் ஒரு தெரு.
அங்கு அமைந்திருந்தது
அந்த மொக்கங் கடை.

ஓராயம் என்றோர் ஒளிர் திட்டம்! - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல் : AI SUNO -

[பெருந்தொற்றுக் காலத்தில் எழுபதுகளில் யாழ் இந்துக் கல்லூரியில் படித்த மாணவர்கள் சிலர் எண்ணங்களில் உதித்த திட்டம் ஒராயம் திட்டம் . அது பற்றிய மேலதிக விபரங்களுக்கு - https://oraayam.org ]

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=Ws3c8PTMP20

ஓராயம் போல் வருமா? இங்கு ]
ஓராயம் போல் வருமா?

ஊர்நலம் நாடி உருவான
ஓர் ஒளிர் திட்டம்
ஓராயம். திட்டம்,
ஓராயம் திட்டம் .

பெருந்தொற்றுக் காலத்தில்
உருப்பெற்ற ஒரு திட்டம்
ஓராயம் திட்டம். நல்
ஓராயம் திட்டம்.

Monday, July 29, 2024

சமநீதி பிறக்கட்டும் எங்கும். - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல்: AI SUNO -


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=EAbi7zZI9t0

 சமநீதி பிறக்கட்டும் எங்கும்!

சமநீதி இல்லையேல் அநீதியே.
சமநீதி எங்கும் இருந்தால்
வர்க்கப் பிரிவுகள் மறையும்.
வர்ணப் பிரிவுகள் மறையும்.

ஆண், பெண் பிரிவுகள் ஒழியும்,
அனைத்துப் பிரிவுகளும் ஒழியும்,.
பிரிவுகள் நீங்க வேண்டுமானால்
பிறக்கட்டும் இங்கு சமநீதி.

சமநீதி பிறக்கட்டும் எங்கும்.
சமைத்திடுவோம் சமநீதி உலகை.
அமைத்திடுவோம் அன்புமிகு வாழ்வை.
அனைவரும் எழுக, உறுதி கொள்க.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...