Tuesday, August 20, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: அதி மானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்?



                                             - இசை & குரல் - AI Suno | ஓவியம் - AI

இக்கவிதை தாயகம் (கனடா) பத்திரிகை, பதிவுகள், திண்ணை இணைய இதழ்களில் வெளியான கவிதை. எண்பதுகளில் என் குறிப்பேட்டில் நான் எழுதி வைத்திருந்த கவிதைகளில் ஒன்று. கனடாவில் மங்கை பதிப்பக வெளியீடாக வெளிவந்த  'எழுக அதிமானுடா' என்னும்  எனது முதலாவது கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் ஒன்று.

வ.ந.கிரிதரன் பாடல்: அதி மானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்? 

Concrete! Concrete! Concrete!
சுவர்கள்! கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்
கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.

'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.

அஞ்சா நெஞ்சத் தூண்களின்
அரவணைப்பில் மயங்கிக்
கிடக்கும் இட வெளிகள்.

வாயுப் படைகளின் வடிகட்டலில்
வடியுமுஷ்ணக் கதிர்கள்.
பனித் துளிகளின் குமிண் சிரிப்பினில்
சிலிர்த்திடும்
புல்வெளிகள் பற்றிய கற்பனைகளின்
இனிமையில், நீலப்படுதாவின் கீழ்
குளிர்ந்து கிடக்கும் நிலமடந்தை
பற்றிய சோக நினைவுகள்.

தலைகவிழ்ந்து அரவணைக்கும்
விருட்ஷக் கன்னியர்தம் மென்தழுவல்
ஸ்பரிசக் கனவுகள்.

செயற்கையின தாக்கங்கள்
படர்ந்திட்ட
இயற்கையின் தேக்கங்கள்.

வ.ந.கிரிதரன் பாடல்: நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!


                                           - இசை  & குரல் - AI SUNO | ஓவியம்: AI -

எழுத்தாளர் மாலன் சாகித்திய அகாதெமிக்காக 'அயலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு -'புவி எங்கும் தமிழ்க் கவிதை' என்னும் கவிதைத்தொகுப்பினைத் தொகுத்துள்ளார். 22 நாடுகளில் வசிக்கும் தமிழ்க் கவிஞர்களின் 70 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. மேற்படி தொகுப்பில் எனது இககவிதையான . "நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'"  கவிதையும் இடம் பெற்றுள்ளது.

வ.ந.கிரிதரன் பாடல்: நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!

உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று.

விரிவெளியில் படர்ந்து கிடக்கும்
உன் நகைப்போ ,
நீ விளைவிக்கும் கோலங்களோ,
அல்லது உன் தந்திரம் மிக்க
கதையளப்போ
எனக்கொன்றும் புதியது அல்லவே.

இரவுவானின் அடுக்குகளில்
உனது சாகசம் மிக்க
நகைப்பினை உற்றுப் பார்த்திடும்
ஒவ்வொரு இரவிலும்,
நட்சத்திரச் சுடர்களில்,
அவற்றின் வலிமையில்
உன்னை உணர்கின்றேன்.

வ.ந.கிரிதரன் பாடல் : செயற்கை அறிவுத் தொழில் நுட்பம்!



- இசை & குரல் : AI SUNO | ஓவியம் - AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=r-iEJwSfg5Q

செயற்கைத் தொழில் நுட்பம்
செயற்கரிய செய்யும் தொழில் நுட்பம்.

செயற்கை அறிவுத் தொழில் நுட்பம்
இயற்கை அல்ல என்பர் சிலர்.
செயற்கைக்குள் வாழ்வைத் தள்ளும்
இயற்கையாக வாழுங்கள் என்பர் அவர்.

தொழில் நுட்பம் எது என்றாலும்
தொழிலை மேம்படுத்தும் தன்மை மிக்கதே.
புதியனவற்றை ஏற்பதும், பயன் பெறுவதும்
புதிய விடயம் ஒன்றும் அல்லவே.

செயற்கைத் தொழில் நுட்பம்
செயற்கரிய செய்யும் தொழில் நுட்பம்.

Monday, August 19, 2024

வ.ந.கிரிதரன் பாடல் : ஆர்டிஸ்ட் மணியத்தின் கட் அவுட்டுகள்!



- இசை & குரல் : AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=HSFigDG3ESU

ஆர்டிஸ்ட் மணியத்தின் கட் அவுட்டுகள்
ஆடிட வைக்கும். பாடிட வைக்கும்.

மணியத்தின் ஆர்டிஸ்ட் மணியத்தின்
மக்கள் திலகத்தின் கட் அவுட்டுகள்
எம்மை மகிழ்வித்த காலமது.
எண்ணிப் பார்த்தால் மகிழ்வுதான்.

வாத்தியாரின் புதுப் படமென்றால்
வாண்டுகள் எங்களுக்கோ கொண்டாட்டம்தான்.
முதல் நாளிரவே காட்சி தொடங்கிவிடும்.
முண்டியடித்தபடி வாத்தியார் இரசிகர்கள்.

ஆர்டிஸ்ட் மணியத்தின் கட் அவுட்டுகள்
ஆடிட வைக்கும். பாடிட வைக்கும்.

Sunday, August 18, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: தமிழும் திராவிடமும்!



                                                            இசை & குரல்: AI SUNO

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=gz9j9nQQpJU

தேவநேயப் பாவாணரின் நூல்: திரவிடத்தாய்

தேவநேயப் பாவாணர் தமிழ் அறிஞர்.
தமிழ் ஆய்வில் பேர் அறிஞர்.

திரவிடம் மூலம் தமிழம்
திராவிட  மூலம் திரவிடம்.
திராவிட மொழிகள் அனைத்தும்
தமிழ் மொழியின்  குழந்தைகளே.

தேவநேயப் பாவாணார் சொன்னார்.
திராவிட  மூலம் திரவிடமே.
திரவிடத்தின் மூலம் தமிழமே.
திராவிடத்தின் மூலம் தமிழே.

வ.ந.கிரிதரன் பாடல்: அதிகாலைக் கனவில் வந்தாய்!



- இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=PNeexMOQYoM

கனவில் வந்தாய் அன்பே என் அதிகாலைக்
கனவில் வந்தாய்

உன்னைக் காணாமல் உருகும் நெஞ்சுக்கு
உன் வருகையால் ஒத்தடம் தந்தாய்.
என்னை மறக்க வைத்தாய்
உன்னை நினைக்க வைத்தாய்.

கனவில் வந்தாய் அன்பே.  என் அதிகாலைக்
கனவில் வந்தாய்

Saturday, August 17, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: தாயே!


வ.ந.கிரிதரன் பாடல்: தாயே!

- இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -

வ.ந.கிரிதரன் பாடல்: தாயே!

தாயே! என்னிருப்பில்
உன்னிருப்பறிந்தேன்!
உன்னிருப்பாலிருப்பின் மறுப்புதனை
உணர்த்தியெங்கு சென்றாய் ? தாயே!
எங்கு சென்றாய் ?

நினைவுக் கோளத்தினொரு
சித்தவிளையாட்டாய்
இருந்து நீ சென்றதெல்லாம்
அன்னையே! என்
எண்ணப் பறவைகளின் வெறும்
சிறகடிப்போ ?

தமிழகமும் , ஊழலும்!

தமிழக வெற்றிக்கழகம் தமிழ் நாட்டில் ஊழலை ஒழித்து விட்டதாகக் கதைக்கின்றார்களே, அது உண்மையா?  ஆராய்ந்து பார்த்தால் ஓரளவு உண்மை உண்டு.ஓரளவு பொய்...