Tuesday, September 3, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: வெகுசன இலக்கியத்தின் தேவை!



இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

வெகுசன இலக்கியத்துக்கும் இடம் உண்டு
வாசிப்பின் வளர்ச்சிப் படிக்கட்டில் நிச்சயம்.

பாலர் பருவத்தில் பாலர் இலக்கியம்.
படிப்பது வளர்ச்சியின் தேவை அல்லவா.
அதன்பின் அம்புலிமாமாக கதைகள் படித்தோம்.
அதன்பின் வெகுசனப் படைப்புகளில் மூழ்கினோம்.

வெகுசன இலக்கியத்துக்கும் இடம் உண்டு
வாசிப்பின் வளர்ச்சிப் படிக்கட்டில் நிச்சயம்.

தீவிர வாசிப்பு நோக்கிய பயணத்தில்
தவிர்க்க முடியாதது வெகுசன இலக்கியம்.
கல்கி, அகிலன், சாண்டியல்யன், ஜெகசிற்பியன்
இவர்களின் படைப்புகள் எம்மை மகிழ்வித்தன.

வெகுசன இலக்கியத்துக்கும் இடம் உண்டு
வாசிப்பின் வளர்ச்சிப் படிக்கட்டில் நிச்சயம்.

Monday, September 2, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: ஓயும் வரையில் ஓய்வில்லை



- இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -

ஓயும் வரையில் ஓய்வில்லை

ஓயும் வரையில் ஓய்வில்லை உயிர்களுக்கு.
ஓய்வு என்பது இயற்கையில் இல்லை.

இரவும் பொழுதும் நாளும் வருடமும்
இரவி ஓய்வு எடுப்பது உண்டா?
இரவில் தண்ணொளி சொரியும் நிலவு
உறக்கத்தில் கண்ணயர்வது இல்லை அல்லவா.

ஓயும் வரையில் ஓய்வில்லை உயிர்களுக்கு.
ஓய்வு என்பது இயற்கையில் இல்லை.

வ.ந.கிரிதரன் பாடல்: அலைந்து திரியும் அகதி மேகமே!


இசை & குரல்:  AI SUNO | ஓவியம்: AI -


அலைந்து திரியும் அகதி மேகமே!

நாட்டுச் சூழல் காரணமாகப் புகலிடம் நாடி அகதியாக அலையும் ஓர் அகதி மேகத்தைப் பார்த்துக் கூறுவதாக அமைந்துள்ள பாடல்.

அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.

நாடு விடு நாடு நகர்கின்றாய்.
ஊரு விட்டு ஊரு செல்கின்றாய்.
இருப்பதற்கு ஒரு நாடு உனக்கும்
இல்லையோ மேகமே சொல்லுவாய் எனக்கு.

அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.

Sunday, September 1, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற



இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற!

நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற
பல்லின மக்கள் வாழ்வில் இணைந்திட

முடிந்த போரின் அழிவுகள் இன்னும்
படிந்தே இருக்கும் அனைவர் நினைவினில்.
நடந்தவற்றில் இருந்தே பாடங்கள் படிப்போம்.
நல்லெண்ணம் வளர்த்திட நடவடிக்கை எடுப்போம்.

நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற
பல்லின மக்கள் வாழ்வில் இணைந்திட

Saturday, August 31, 2024

வ.ந.கிரிதரன் பாடல். என்னை மாற்றிய உன் வரவு!


இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI -

என்னை மாற்றிய உன் வரவு!

உன்னை முதல் பார்த்த நாளை நினைக்கின்றேன்.
என்னை மறந்தே இன்பத்தில் திளைக்கின்றேன்.

காதல் உணர்வு படைப்பின் அற்புதம்.
காலம் கடந்தும் நிலைக்கும் காவியம்.
பொருள் உலகில் மருள் நீக்கும்
அரும் பெரும் ஓருணர்வு அதுவாகும்.

உன்னை முதல் பார்த்த நாளை நினைக்கின்றேன்.
என்னை மறந்தே இன்பத்தில் திளைக்கின்றேன்.

Friday, August 30, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - தாழ்வு தவிர்போம்!



- இசை & குரல் - AI SUNO | ஓவியம் - AI -

தாழ்வு தவிர்போம்!

வாழ்வில் வெற்றி பெற்றிட வேண்டும்.
தாழ்வு மனப்பான்மை தவிர்த்திட வேண்டும்.

மதியாதார் தலைவாசல் மிதியாதே என்றாள்.
மானமுள்ள மனிதருக்கு அவ்வை அன்றே.
மதி தாழ்த்தும் எவற்றையும் தவிர்ப்போம்.
மண்ணில் வெற்றி நிச்சயம் குவிப்போம்.

வாழ்வில் வெற்றி பெற்றிட வேண்டும்.
தாழ்வு மனப்பான்மை தவிர்த்திட வேண்டும்.

Thursday, August 29, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: காதல் செய்வீர்!


                                                    இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

 காதல் செய்வீர்!

காதல் ஒளியில் ககனம் வெளிக்கும்.
காதல் ஒளியில் அன்பு சுடரும்.

ஆடி அசைந்து செல்லும் நதி.
அதுபோல்தான் வாழ்வில் காதல் நதியும்.
கூடி இன்பம் உயிர்கள் அடைய
காதல் நதியும் கரைபுரண்டு பாயும்.    

காதல் ஒளியில் ககனம் வெளிக்கும்.
காதல் ஒளியில் அன்பு சுடரும்.

புத்தாக்கம் செய்வோம்! பாதிப்புகளைக் குறைப்போம்! இணைந்து வாழ்வோம்!

  காலத்துக்குக் காலம் புதுப் புதுத்  தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும் தருணங்களில் சமூக, ஊடகங்களில் புதிய சூழலியற் போராளிகள் உருவாகிவிடுகின்றனர...