Monday, December 23, 2024

கிடைத்தது 'முற்போக்கு இலக்கிய ஆளுமை கே.கணேஷ் மொழிபெயர்ப்புகள்' நூல். நன்றி!


நண்பர் ஊடகவியலாளர்  கே.பொன்னுத்துரை (பொன்னுத்துரை கிட்ணர்) இலங்கைத் தமிழ் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான கே.கணேஷின் நூற்றாண்டினையொட்டி வெளியான  'முற்போக்கு இலக்கிய ஆளுமை கே.கணேஷ் மொழிபெயர்ப்புகள்' என்னும் நூலை அனுப்பியிருந்தார்.

மிகசிறப்பாக நூல் வெளிவந்துள்ளது. 'கே.கணேஷ் நூற்றாண்டு விழாக்குழு' நூலை வெளியிட்டுள்ளது. குமரன் அச்சகம் சிறப்பாக நூலை அச்சு வடிவில் வெளிக்கொணர்ந்துள்ளது.  இந்நூலைச் சிறப்பாகத் தொகுத்துள்ள ஊடகவியலாளர் கே.பொன்னுத்துரை அவர்கள் பாராட்டுக்குரியவர். மிகவும் முக்கியமான பணியினை அவர் செய்துள்ளார். ஆவணச்சிறப்பு மிக்க இத்தொகுப்பை வெளியிட்ட 'கே.கணேஷ் நூற்றாண்டு விழாக்குழு'வின் பணி போற்றத்தக்கது.

- தொகுப்பாளர் கே. பொன்னுத்துரை -

நூலின் ஆரம்பத்தில் பி.பி.தேவராஜின் எழுத்தாளர் கே.கணேஷ் பற்றிய அறிமுகக்கட்டுரை, பேராசிரியர் சபா ஜெயராசாவின் கட்டுரை, ஞானம் சஞ்சிகையில் வெளியான அதன் ஆசிரியர் தி.ஞானசேகரன் கே.கணேஷுடன் நடத்திய நேர்காணல் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவை கே.கணேஷின் பன்முக ஆளுமையினை வெளிப்படுத்தும் கட்டுரைகள். இலங்கை எழுத்தாளர் சங்கம், முற்போக்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (இலங்கை, இந்தியா) ஆகியவற்றில் அவரது பங்களிப்பு, அவரது குடும்பப்பின்னணி, தமிழக சஞ்சிகைகளில் (மணிக்கொடி போன்ற) வெளியான அவரது படைப்புகள், அவரைப் பாதித்தக் கலை, இலக்கிய ஆளுமைகள், இலங்கையில் தமிழில்  வெளியான முதலாவது முற்போக்கு சஞ்சிகையில் அவருடன் இணைந்து பங்களித்த கே.ராமநாதன், அ.ந.கந்தசாமி ஆகியோரின் பங்களிப்பு, அவர் மொழிபெயர்த்த உலக முற்போக்கு எழுத்துலகச் சிற்பிகளின் படைப்புகளின் பகுதிகள் இவற்றுடன் அவர் மொழிபெயர்த்த முல்க்ராஜ் ஆனந்தின்  'தீண்டாதான்' (Untouchable) முழுமையாகத் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Sunday, December 22, 2024

வ.ந.கிரிதரன் - நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!


எழுத்தாளர் மாலன் , இந்திய சாகித்திய அமைப்புக்காகத் தொகுத்த  'புவி எங்கும் தமிழ்க் கவிதை'த் தொகுப்பில் இடம் பெற்றுள்ள  எனது கவிதையான 'நவீன விக்கிரமாதித்தனின் காலம்' கவிதை சிறு மாற்றங்களுடன் இங்கு பாடலாக , ரொக் இசை வடிவில்மேனாட்டு , கீழ்நாட்டு வாத்தியங்களின்  கலவையில்
ஒலிக்கின்றது. சாத்தியமாக்கிய செயற்கை அறிவுக்கு என் நன்றி.

இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI

உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?

ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று

உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?

ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று
விரிவெளியில் படர்ந்து கிடக்குமுன்
நகைப்போ,
நீ விளைவிக்கும் கோலங்களோ,
அல்லது
உன் தந்திரம் மிக்க
கதையளப்போ எனக்கொன்றும் புதியதல்லவே.

வ.ந.கிரிதரன் பாடல்: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.


இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI


நானொரு குதிரை வளர்ப்பாளன்.
நான் வியாபாரி அல்லன்.

நாணயமான குதிரை வளர்ப்பாளன். நான்.
என்னிடம் நல்ல குதிரைகள் பல உள்ளன.
இருப்பவை அனைத்துமே நல்லவைதாம்.
இருக்கும் குதிரைகள் அனைத்துமே
பிரியத்துக்குரியவை.
என் பிரியத்துக்குரியவை.
அவற்றில் வேறுபாடு நான் பார்ப்பதில்லை.
ஆனால்  குதிரைத் திருடர்களே!
உங்களின் தொல்லை அதிகமாகிவிட்டது.

Friday, December 13, 2024

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்


 
 
கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை அடுத்து அச்சுருவில் வருவது நின்று போனாலும் இணையத்தில்  டிஜிட்டல் வடிவில் வெளிவருவது மகிழ்ச்சி தருவது. நான் Magzter தளத்தில் வருடச் சந்தா கட்டி வாசித்து வருகின்றேன். நீங்களும் சந்தா கட்டி வாசியுங்கள். இணைப்பைக் கனடாச் சட்டத்தின்படி முகநூலில் பகிர முடியாது. கூகுளில் Magzter என்று தேடி, தமிழ் சஞ்சிகைகளில் கணையாழிக்கான இணைப்பைப் பெற முடியும்.
 
தமிழகத்துச் சஞ்சிகைகளில் எனது படைப்புகள் அதிகம் வெளியானது கணையாழி சஞ்சிகையில்தான். கனடாச் சிறப்பிதழில் எனது சிறுகதையான 'சொந்தக்காரன்' வெளியானது. அதைவிட பத்துக்கும மேற்பட்ட எனது கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
 
கணையாழி தொகுப்பிலும் (1995 -2000) எனது இரு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 
 
கணையாழியில் வெளியான கட்டுரைகள் கீழே. இவை முழமையான பட்டியல் அல்ல.
 
 
 

Monday, December 9, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - உலகக் கவி கணியன் பூங்குன்றனார்


உலகக் கவி கணியன் பூங்குன்றனார்


இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI


இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் உலகக் கவிஞன்

கணியன் பூங்குன்றனார் உலகக் கவிஞன்
நான் என்று அவன் கருதவில்லை.
நாம் என்றே அவன் சிந்தித்தான்.
குறுகிய சிந்தனைக் கவிஞன் அல்லன்.

இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் உலகக் கவிஞன்

Sunday, December 8, 2024

வ.ந.கிரிதரன் பாடல்- உண்மை அன்பெனும் ஊற்று!


உண்மை அன்பெனும்  ஊற்று!


இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI


நினைவுக் குருவிகள்  உன்னைச் சுற்றியே
சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.

உன் அன்பின் வலிமை ஆட்கொள்ள
என் நிலை குலையும் ஆனால்
இன்பத்தேன் குடிக்கும் தேனி ஆவேன்
அன்பே .அது போதும் எனக்கு.

நினைவுக் குருவிகள்  உன்னைச் சுற்றியே
சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.

எதிர்பார்ப்பு அற்றது தூய அன்பு.
எதிர்பார்ப்பில் தூய்மை எங்கே கூறு?
இருப்பில் இதுபோல் ஓருறவு வரப்பிரசாதம்.
இல்லையா அன்பே நீயே கூறு.

Saturday, December 7, 2024

வ.ந.கிரிதரன் பாடல்- களிப்புப் பூக்களை மலர்விக்கும் கதிராக ஒளிர்வோம்'


களிப்புப் பூக்களை மலர்விக்கும் கதிராக ஒளிர்வோம்'

இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI

நல்லதை நினைப்போம் நினைத்ததை அடைவோம்
செல்லும் வழியெங்கும் இன்பத்தை நிறைப்போம்

இன்பமூட்டும் சொற்கள், எழுத்துகள் , அசைவுகள்
என்றுமே வாழ்வுக்கு இன்பம் தருபவை.
நன்று அவை என்போம் நம்புவோம்
நம்பிக்கை எப்பொழுதும் பயனைத்  தருமே.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...