[பதிவுகள் இணைய இதழ் (https://www.geotamil.com, https://www.pathivukal.com ) 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ] 1. பெப்ருவரி 2011 இதழ் 134 1. வாழ்வாங்கு வாழ்ந்தவர்! இளவாலை என்றதுமே கல்வியாளர்கள் நினைவுக்கு வருகிறார்கள் .. இளவாலை.அமுது, தாசிசியஸ், ஜேசுரத்தினம்(1931-2010) அவர்களோடு பலரும் சேர்வர். இனம் காணப்பட்ட கலைஞர்களுள் ஜேசுரத்தினம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இளவாலை என்றதுமே கல்வியாளர்கள் நினைவுக்கு வருகிறார்கள் .. இளவாலை.அமுது, தாசிசியஸ், ஜேசுரத்தினம்(1931-2010) அவர்களோடு பலரும் சேர்வர். இனம் காணப்பட்ட கலைஞர்களுள் ஜேசுரத்தினம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அந்தக் காலத்தில் நம்மிடையே பேசப்பட்ட ஹாஷ்ய நாடகங்கள் கலைஞர்களையும் இனம் காண வைத்தன. புளுகர் பொன்னையா, புளுகர் பொன்னம்பலம், அடங்காப்பிடாரி, வெளிக்கிடடி விசுவமடுவுக்கு, இண்டைக்குச் சமைக்காதே, சந்தியில் நில்லாதே, அண்ணை றைட் என அந்தக் காலத்து நகைச் சுவை நாடகங்களை தந்திருந்த நமது கலைஞர்கள் சில சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் சொல்லி வந்துள்ளதை மறுக்கமுடியாது. அதே போல் தான் இலங்கை வானொலியில் சுமார் ஐந்து வருடங்கள் கமத்தொழில் திணைக்களத்தாரின் அனுசரணையுடன் ஒலிபரப்பப் பட்ட முகத்தார் வீட்டில் நாடகம் மூலம் கமத்தொழில் சார்ந்த விஷயங்களை சொல்லி பாமர மக்களும் தெரிந்து கொள்ள வைத்தார். அதுவே பின்னாளில் அவருடன் ஒட்டிக்கொண்டு நமக்கு முன் முகத்தார் என்று அறியப்பட்டார். உண்மையில் சாதனையாளர் தான். தன் குரல் வளத்துடன், கூடவே திடகாத்திரமான நடையுடன் பார்ப்பவரை ஒரு பண்ணையார் அல்லது பொலிஸ்காரன் என்றே எண்ணத்தோன்றும் . அதனால் தான் மிடுக்கான அவரை 'பாசச்சுமை’ நாடகத்தில் பலரையும் 'அப்லாஷ்' வாங்க வைத்தது எனலாம். சில வருடங்களுக்கு முன் மணிமேகலை பிரசுரத்தாரின் நூல் அறிமுக விழாவின் போதும், அதற்கு முதல் நாள் 'அமரர்'டாக்டர். இந்திரகுமார் அவர்களின் இரவு விருந்துபசாரத்தின் போதும் அவருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. பாரதியாரை நேரில் பார்த்தது போல் இருந்தது.அவரை அறிமுகப் படுத்திய விதமே அலாதியானது. நகைச் சுவையுடன் பழைய நாடக அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாகவே அமைந்திருந்தது.
தான் பார்த்த உத்தியோகம் , நாடக அறிமுகம் எல்லாம் சொல்லி தன்னுடன் நம்மையும் ஒன்றிப் போக வைத்தது மறக்க முடியாது. வாடைக்காற்றின் மூலம் துணை நடிகருக்கான விருது பற்றி பெருமையாகச் சொன்ன போது 'கொடுத்துவைத்தவர்' என்று அனைவரும் சொல்லிக் கொண்டது ஞாபகத்தில் இருக்கிறது. அவர் நடிக்கத் தொடங்கிய காலப் பகுதி சிரமமானது தான். கிராமத்தில் எவ்வளவு படித்தவர்கள் இருந்தாலும் சமூகம் ஏற்றுக் கொள்ள பழகவில்லை. ஆனாலும் படிப்பில் அதி சிரத்தையுடன் இருந்து உத்தியோகம் பார்க்க வந்த பின்பு தான் சமுகத்தின் அங்கிகாரம் வந்திருக்க வேண்டும்.அவருக்குப் பின்னாளில் வாய்த்த நண்பர்கள் அனேகம். வரணியூரான், கே.எஸ்.பாலச்சந்திரன், சிவதாசன்(கமலாலயம்) ,வேலனையூர். வீரசிங்கம்(பிரவுண்சன் கோப்பி), ராமதாஸ், பி.ஏச்.அப்துஹமீட், பி.விக்னேஸ்வரன், மதியழகன், விமல்.சொக்கநாதன், ராஜகோபால் என தொடங்கி வண்ணை தெய்வம், இரா.குணபாலன் வரை பலரிடம் நட்பு கொள்ள வைத்துள்ளதை பார்க்க முடிந்தது. அவர் கால்த்தில் நாம் வாழ்ந்ததாக பெருமை கொள்ள வைக்கிறது.