Saturday, January 10, 2026

பெரியார், திராவிடம், தமிழ்மொழி பற்றி செயற்கை நுண்ணறிவுடன் விரிவான நேர்காணல். நேர்காணல் கண்டவர் : வ.ந.கி




நான்: 


பெரியார் ஆரியர் தமிழ் மொழியைத் தம் மொழியைக் கலந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பிரித்து விட்டதாகக் கருதுகின்றாரே?

செயற்கை நுண்ணறிவு AI:


ஆம், பெரியார் ஈ.வெ.ரா. ஆரியர்கள் தமிழ் மொழியைக் கலந்து, மற்ற திராவிட மொழிகளைப் பிரித்து விட்டதாகக் கருதினார் என்பது உண்மை. இது திராவிட இயக்கம் முன்வைத்த ஒரு முக்கியமான கோட்பாடு மற்றும் பெரியாரின் தமிழ் மொழி குறித்த பார்வையின் ஒரு முக்கிய அம்சமாகும்.

பெரியாரின் வாதம் சுருக்கமாக:

பெரியார் மற்றும் திராவிட இயக்கத்தினர் முன்வைத்த வாதத்தின் சாரம் இதுதான்:

    தமிழ் தான் மூல மொழி: திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ் தான் மிகவும் தொன்மையானதும், தனித்துவமானதுமான மூல மொழி என்று பெரியார் கருதினார். மற்ற திராவிட மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை தமிழிலிருந்து பிரிந்தவை என்றும், அல்லது தமிழின் கிளை மொழிகள் என்றும் நம்பினார்.

Thursday, January 8, 2026

வ.ந.கிரிதரனின் பாடல் -கல்லுண்டாய் நினைவுகள்!


வ.ந.கிரிதரனின் பாடல்  -கல்லுண்டாய் நினைவுகள்!
இசை & பாடல் - SUNO AI   ஓவியம் - Google AI


அதிகாலைகளில் , அந்திவேளைகளில் 
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.

நகருக்குப் படையெடுப்பர் தொழிலாளர்.
நானும் கூடவே சைக்கிளில் செல்வேன்.
அராலி வடக்கில் நான் வசித்தேன்.
அக்கால நினைவுகள் விரிகின்றன.

அதிகாலைகளில் , அந்திவேளைகளில் 
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.

அராலிப் பாலத்தில் இறால் பிடிப்பர்
அதிகாலையில் தொழில் செய்யும் தொழிலாளர்.
அங்குதான் வழுக்கியாறு கடலுடன் சங்கமிக்கும்.
அதுவோர் அகத்தின் இனிய நினைவு.;

அதிகாலைகளில் , அந்திவேளைகளில் 
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.

தொலைவில் நவாலி ம்ணற் குன்றுகள்.
தவமியற்றும் துறவிகள் போலிருக்கும்.
காற்றிலாடும் பசும் வயல்கள்.
கிளிகளும் கூட்டமாகப் பறக்கும்.

அதிகாலைகளில் , அந்திவேளைகளில் 
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.

தந்தை பெரியாரின் பார்வையில் தமிழரும், திராவிடரும், தென்னிந்தியரும்!


திராவிடம் என்னும் சொல் தமிழம் த்ரமிளம், த்ரவிடம், திரவிடம்,  திராவிடம் என்னும் வட சொல்லாக மீண்டும் தமிழுக்கு வந்த சொல்.இந்தியாவின் பூர்வ குடிகள் தமிழர். ஆரியர் தமிழரைத் திராவிடர் என்றழைத்தனர். வடக்கில் திராவிடரிடமிருந்து ஆதிக்கத்தைப் பெற்றதும் தமிழர்கள் (திராவிடர்) தென்னிந்தியாவில் ஒடுங்கினர். 
 
அவ்விதம் ஒடுங்கிய தமிழர் பேசும் மொழி இருக்கும் பிரதேசங்களுக்கேற்ப வேறுபாட்டுடன் விளங்கியது. இன்று கூட கோவை, மதுரை, தஞ்சாவூர்த் தமிழ் வித்தியாசமாக் இருக்குதல்லவா., அதுபோல். இவ்வேறுபாட்டைப் பாவித்து வடக்கில் திராவிடரை அடக்கிய ஆரியர் , தெற்கிலும் தம் மொழி, சமயம் இவற்றைப்பாவித்துத் தமிழைக் கன்னடம், தெலுங்கு, மலையாளமாக மேலும் பிரித்தனர், இது ஆரியர் தமிழைப்பலவீனப்படுத்தச் செய்தது. 

Wednesday, January 7, 2026

நூல் அறிமுகம் - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரின் 'திரவிடத்தாய்'


நூல் அறிமுகம் - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரின் 'திரவிடத்தாய்'


தமிழம் -> திரவிடம் -> திராவிடம்!

மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய நூல் 'திரவிடத்தாய்'. இதன் பதிப்பாசிரியர் புலவர் அ.நக்கீரன். திராவிடம் என்னும் சொல் தமிழம் என்னும் சொல்லிலிருந்து உருவான சொல் என்பது தேவநேயப் பாவாணரின் கருத்து,. இதனை வலியுறுத்தும் இந்நூல் முக்கியமானது.  

திராவிடம் என்று வடக்கு நாட்டவர்  தமிழை அழைத்தனர். அதனால்தான் கால்ட்வெல் தமிழிலிருந்து வந்த மொழிகளைத் திராவிட மொழிகள் என்றழைத்தார்.  அதாவது தமிழ் மொழிகல், தமிழை அடியாகக் கொண்ட  மொழிகள். முனைவர் அரியேந்திரன் மொழியியல் அறிஞர் தமிழ் வேர்ச்சொல்லிலிருந்து வடமொழி உட்படப் ஐரோப்பிய மொழிச் சொற்கள் பல தோன்றின என்பதையிட்டு ஆய்வுகள் பல செய்தவர். அவர்  பாவாணரின் வழி வந்தவர். 

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் , திராவிடம் தெக்கணம் பற்றி...


"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து 
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! "

இப்பாடல்  மனோன்மணீயம் பெ. சுந்தரனார் எழுதிய மனோன்மணீயம் காப்பியத்தில் வரும் தமிழ்த்தெய்வ வணக்கம் என்னும் பாயிரத்தில் வரும் வரிகள்.  இப்பாடல் தெளிவாகத் தென்னிந்தியாவைத் தெக்கணம் என்றும் , தமிழ் நாட்டைத்  திராவிட நல்  திருநாடு என்றும் குறிப்பிடுவதைக் கவனியுங்கள். இதனால்தான் 1914ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்திலுள்ள தமிழ்ச்சங்கங்கள் பலவற்றில் தமிழ்த்தாய் வாழ்த்தாக இப்பாடல் பாடப்பட்டு வந்தது. 

அதனால்தான் தமிழ் மொழிக்காக, அதன் வளர்சசிக்காகத் திராவிட முன்னேற்றக் கழகத்தினர்,திராவிடக் கழகத்தினர் திராவிடம் என்னும் சொல்லைத்  தமிழகத்தைக் குறிக்கப்பாவித்தனர். திராவிடக் கழகத்தினர் திராவிட் மொழி என்று குறிப்பிட்டது தமிழை. திராவிட நாடு என்று குறிப்பிட்டது தமிழ் நாட்டை.

அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்தபோது இப்பாடலைத்தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக்க வேண்டுமென்ற கோரிக்கை பலமாக எழுந்தது. அதை அவர் நிறைவேற்றுவதற்குள் அறிஞர் அண்ணா மறைந்து விட்டார். அதனால்தான் கலைஞர் அதன் பின் ஆட்சிக்கு வந்ததும் அக்கோரிக்கையை நிறைவேற்றினார்.

Tuesday, January 6, 2026

வ ந கிரிதரன் பாடல் காட்சியும் சித்து விளையாட்டும்!


[ வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1  -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள்.]
 

வ ந கிரிதரன் பாடல்   காட்சியும் சித்து  விளையாட்டும்!
இசை & குரல் - SUNO AI   ஓவியம் - Google AI

கண்ணெதிரே விரிந்திருக்கும் காலவெளி எல்லாம்
என்னுள்ளம் உருவாக்கிய சித்து விளையாட்டா?

சிந்தையின் சித்து விளையாட்டு என்றால்
விந்தைமிகு விரிஉலகம் அனைத்தும் பொய்மையா?
பொய்மையை உண்மையென எண்ணி இருப்பதே
வையகத்தில் நம்வாழ்வு என்பதும் சரியா?

கண்ணெதிரே விரிந்திருக்கும் காலவெளி எல்லாம்
என்னுள்ளம் உருவாக்கிய சித்து விளையாட்டா?

Monday, January 5, 2026

இரு தடவைகள் சிறந்த ஒளிப்பதிவாளருக்காக இந்திய மத்திய அரசின் தேசிய விருதினைப் பெற்றவர் பாலு மகேந்திரா!


இரு தடவைகள் சிறந்த ஒளிப்பதிவாளருக்காக  இந்திய  மத்திய அரசின் தேசிய விருதினை பெற்றவர் பாலு மகேந்திரா!  - வ.ந.கி -

இந்தியச் சினிமா உலகில் இரு தடவைகள் சிறந்த ஒளிப்பதிவுக்காக இந்திய மத்திய அரசின் தேசிய விருதினைப் பெற்றவர் இவர். இவர் இயக்கத்தில் வெளியான தமிழ்த்திரைப்படங்கள் மூன்று தடவைகள் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளன.  ஆறு  தடவைகள் சிறந்த இயக்குநருக்கான பிலிம்ஃபெயர் விருதினைப் பெற்றவர். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இப்பொழுது இவர் யாரென்று அறிந்திருப்பீர்கள். ஆம்! இவர்தான் பாலு மகேந்திரா.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...