Tuesday, January 27, 2026
" ஏய் மாமா நீ ஒரு கோமாளிதான்" பாடலைப் பாடிய பாடகி திருமதி கனகாம்பாள் சதாசிவம் மறைந்தார்! ஆழ்ந்த இரங்கல்!
எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் பிரபலமாகவிருந்த இசைக்குழுக்கள் பலவற்றில் பாடிப்புகழ் பெற்றவர் பாடகி கனகாம்பாள் சதாசிவம். கண்ண்ன் - நேசம் இசைக்குழுவில் தன் இசைப்பயணத்தை ஆரம்பித்தவர். நான் அக்காலகட்டத்தில் என் பால்ய, பதின்மப் பருவத்தில் பல இசைக்குழுக்களின் இசை நிகழ்வுகளை ஆலயத்திருவிழாக்கள், திருமண நிகழ்வுகளில் நண்பர்களுடன் கேட்டு இரசித்திருக்கின்றேன். ஆனால் அப்போதெல்லாம் அங்கு பாடிய பெண் பாடகிகளின் பெயர்கள் நினைவிலில்லை. இவரும் பாடியிருந்திருக்கலாம். பெயர் அறியாமல் இவர் பாடலை இரசித்திருப்பேன். ஆனால் இவரது பெயரை நான் முதன் முதலில் அறிந்து கொண்டது 'கோமாளிகள்' திரைப்படத்தில் இவர் பாடிய " ஏய் மாமா நீ ஒரு கோமாளிதான்' என்னும் பாடல் மூலம்தான்.
எழுத்தாளர்களின் கவனத்துக்கு - இணையத்தின் வலிமை!
எனது 'குடிவரவாளன்' நாவலின், எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனின் ஆங்கில மொழிபெயர்ப்பு An Immigrant . இதனை நூலகம் தளத்தில் வாசிக்கலாம். என் கூகுள் தேடலொன்றில் அண்மையில் இந்நாவல் பற்றிக் கிடைத்த தகவலிது: தமிழகத்தைச் சேர்ந்த , உதவிப் பேராசிரியராகப் பணி புரியும் முனைவர் பி.முத்துலக்சுமி இந்நாவல் பற்றி ஆங்கிலத் திறனாய்வொன்றினைச் சர்வதேச இலக்கியக் கருத்தரங்கொன்றில் சமர்ப்பித்திருக்கின்றார். அவ்வாய்வுக் கட்டுரையின் தலைப்பு - 'Ethnic Conflict in V.N. Giritharan’s An Immigrant,'
ஏற்கனவே முனைவர் தாரணி அகில் இந்நாவல் பற்றி ஆங்கில ஆய்வுக் கட்டுரைகள் இரண்டினை எழுதியிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவை பற்றிய விபரங்கள் வருமாறு:
Sunday, January 25, 2026
கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டமும் , தமிழரின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க பகுதிகளும்! - வ.ந.கிரிதரன் -
அண்மைக்காலமாக ஊடகங்களில் கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டம் பற்றி செய்திகள் வெளியாகியுள்ளன. இது பற்றிய முழுமையான அறிக்கையினை இன்னும் நான் பார்க்கவில்லை. இத்திட்டம் பற்றிய விரிவான வரைபடங்களுடன் கூடிய அறிக்கை இணையத்தில் இருந்தால் அறியத்தாருங்கள்.
இத்திட்டம் பற்றிய முழுமையான விபரங்கள் எவையுமில்லாமல் என்னால் உறுதியான கருத்துகள் எவற்றையும் தற்போது வைக்க முடியாது. ஆனால் ஒன்றை மட்டும் கூறுவேன். வவுனியாவின் எல்லைப்பகுதிகளில் குறிப்பாக மருதோடை , காஞ்சிரமோடை பகுதிகள் பல தமிழர்தம் சரித்திர முக்கியத்துவம் மிக்கவை. குறிப்பாகக் காஞ்சிரமோடை பற்றியொரு கட்டுரையினை நான் எழுநா சஞ்சிகையிலும் எழுதியுள்ளேன். அதனை இப்பதிவின் கீழ் தந்திருக்கின்றேன்.
இவ்விதமான சரித்திர முக்கியத்துவம் மிக்க பகுதிகள் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டியவை. இதுவரையில் போதிய ஆய்வுகள் இவை பற்றிச் செய்திருக்கின்றார்களா என்பதும் சரியாகத்தெரியவில்லை. இவ்விதமான பகுதிகளை இத்திட்டம் அழிக்கும் வகையில் அமைந்திருந்தால் இத்திட்டம் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், அப்பகுதி மக்களின் குடி பரம்பலை மாற்றி அமைக்காதிருந்தால், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்டால் , இத்திட்டம் அப்பகுதி மக்களுக்கு மிகுந்த பயனை அளிப்பதாக இருந்தால் இத்திட்டம் நடைமுறைப்படுத்துவது நல்லதே.
காலத்தால் அழியாத கானம்: 'நீல நிறம். வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்'
'என் அண்ணன்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள , கவிஞர் கண்ணதாசனின் எழுத்தில், டி.எம்.எஸ் & எஸ்.ஜானகி குரலில், எம்ஜிஆர் & ஜெயலலிதா நடிப்பில், கே.வி.மகாதேவன் இசையில் ஒலிக்கும் இனியதொரு காலத்தால் அழியாத கானமிது. இத்திரைப்படத்தை முதல் நாள் காலைக் காட்சியாக யாழ் வெலிங்டன் திரையரங்கில் பார்த்த நினைவுகள் படமாக விரிகின்றன.
கவிஞர் கண்ணதாசன், எம்ஜிஆர், கே.வி.மகாதேவன் கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத கானங்கள்தாம். பொதுவாக அவரது இவ்விதமான பாடல்கள் டி.எம்.எஸ் & பி.சுசீலா குரலில் ஒலிப்பவை. ஆனால் இது டி.எம்.எஸ் & எஸ்.ஜானகி குரலில் ஒலிக்கின்றது. இதுவும் சிறப்பாகத்தானுள்ளது.
வரலாற்றில் நிலைத்து நிற்கப்போகும் கனடியப் பிரதமரின் உரை!
கனடியப் பிரதமர் மார்க் கார்னியின் இந்த உரை வரலாற்றில் நிலைத்து நிற்கபோகும் உரை! தற்போதுள்ள சூழலில் , டொனால்ட் ட்ரம் அமெரிக்க அதிபராக இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இந்த உரை முக்கியத்துவம் மிக்கது.https://www.youtube.com/watch?v=btqHDhO4h10
அலெக்ஸ் பிரிட்டியின் மானுட நேயத்திற்காகத் தலை வணங்குவோம்! - வ.ந.கி -
மின்னியாபொலிஸ் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடிவரவாளர்களுக்கு எதிரான அடக்குமுறை தொடர்கிறது. அவரது தலைமையிலான ICE குண்டர்களின் அட்டகாசம் தொடர்கிறது. எவ்வித மானுட நேயமுமற்று பெண்களை, முதியவர்களைம் குழந்தைகளை அவர்கள் அவமானப்படுத்தும் வகையில் கைது செய்வதும், அவர்கள் மேல் தேவைக்கு அதிகமான அளவில் பலாத்காரம் புரிவதும் தொடர்கிறது.
Tuesday, January 20, 2026
யு டியூப் ஆய்வாளர்கள்!
இணையத்தின் வருகை சமூக ஊடகங்கள் உருவாக வழி வகுத்தது. இது இதுவரை காலமும் அர்ப்பணிப்பும் , கடும் உழைப்பும், அறிவும், தேடலும், ஆய்வும் மிக்கவர்களே சிறந்த ஊடகவியலாளர்களாக, ஆய்வாளர்களாக இருந்தார்கள். யாரும் ஊடகவியலாளர்களாம், யாரும் எழுத்தாளர்களாகலாம், யாரும் சஞ்சிகைகள் நடத்தலாம், யாரும் எழுதலாம், நடிக்கலாம் என்னும் நிலையினைச் சமூக ஊடகங்கள் உருவாக்கின. சமூக ஊடகங்கள் மூலம் சம்பாதிக்கலாம் என்னும் நிலை வந்ததும், சம்பாதிப்பதையே நோக்காகக் கொண்டு எல்லாருமே உண்மைகளைக்க குழி தோண்டிப் புதைத்து விட்டு, பரபரப்பினைத் தரும், உணர்வினைத் தூண்டி விடும், செய்திகளை , உண்மையினைத் திரித்து எழுதவும், பேசவும் வழி வகுத்தது. அதிகமானவர்களைத் தம்மிடம் அழைப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு எல்லாரும் இயங்கத்தொடங்கினார்கள். இது சமூக ஊடகங்களால் உருவான எதிர்மறை அம்சங்களில் ஒன்று.
Subscribe to:
Comments (Atom)
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு உற்ப...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...


