Friday, February 19, 2021
கவிதை: கவிதை = அறிவுணர்வுப்புரிதல்கள் ->ஆழ்வுணர்வுக்கவி -> கவிதைகள்! - வ.ந.கிரிதரன் -
வருகின்றன.
சிலவேளைகளில் அவை கனவுகளா
நனவுகளா என்பதில் கூட
என்னால் வேறுபாடுகளைக் காண முடிவதில்லை.
முன்பெல்லாம் ஆழ்ந்துறங்கையில் வரும் கனவுகள்
இப்போதெல்லாம் அரைத்தூக்கத்திலும் வருகின்றன.
நம்பவே முடியவில்லை. நிஜமா? நிழலா? என்பதை.
ஆனால் கனவுகள் நனவுகள் அல்ல என்பதை
உணர்கையில் ஏற்படும் திருப்தி
இனியதோர் அனுபவம்.
அப்பாடா என்று எத்தகையதோர் நிம்மதி!
ஏன் கனவுகள் எம்மை ஆட்டிப்படைக்கின்றன?
என்று அவ்வப்போது எண்ணுவதுண்டு.
அறிவுணர்வின் புரிதல்கள்தமை
ஆழ்வுணர்வுக்கவி
வடித்திடும் கவிதைகளா?
அல்லது
அக்கதாசிரியர் வடித்திடும்
புனைவுக் காட்சிகளா?
கவிதை: பழைய புத்தகக்கடை அனுபவமொன்று! - வ.ந.கிரிதரன் -
பழைய புத்தகக் கடைகளில் புத்தகங்கள் வாங்குவது.
புதுக் கடைகளில் வாங்குவதை விடப்
பழைய புத்தகக் கடைகளில் வாங்குவதிலுள்ள
இன்பமே தனி.
பழைய புத்தகக் கடைகளில் கிடைப்பதைப்போல்
எல்லாவகைப் புத்தகங்களும்
புதுப்புத்தகக் கடைகளில் கிடைப்பதில்லை.
உதாரணத்துக்கு ஒன்று கூறுவேன்.
உங்களால் பழைய புத்தகக் கடைகளில்
வாங்குவதைப்போல்
புதுப்புத்தகக் கடைகளில்
பால்ய பருவத்தில் பிடித்தமான இதழொன்றில்
தொடராக வெளியான,
ஓவியங்களுடன் கூடிய , அழகாக 'பைண்டு' செய்யப்பட்ட
நூல்களை ஒருபோதுமே பெற முடியாது.
அந்நூல்களைக் கைகளால் அளைகையிலுள்ள சுகம்
இருக்கிறதே
அதுவொரு பெரும் சுகமென்பேன்.
அவ்வகையான சுகத்தினை ஒருபோதுமே உங்களால்
புதுப்புத்தகக் கடைகளில் பெற முடியாது.
கவிதை: நூலகம் நோக்கி! - வ.ந.கிரிதரன் -
என்பேன்.
என் மனத்தில் சஞ்சலங்கள் அலையடிக்கத்தொடங்குகையில்,
என் மனத்தில் சஞ்சலப்புயல்கள் வீசத்தொடங்குகையில்,
என் மனத்தின் அமைதி சீர்குலையத்தொடங்குகையில்,
நான் அந்த உலகை நோக்கிப் பயணமாகத் தொடங்குகின்றேன்.
அந்த உலகப்பயணம் தரும் திருப்தியை எனக்கு வேறெந்தப் பயணமும்
தருவதில்லை.
அந்த உலகில் நானும் காட்சிகள் அற்புதமானவை.
பறவைகளைப் பற்றிய புரிதல்களை,
அறிவியற் சாதனைகளை வெளிப்படுத்தும்
அந்த உலகில் நான் எவ்வளவு நேரமானாலும் என்னை மறந்து
பயணிப்பேன். அந்த உலகின் மிகச்சிறப்புகளிலொன்று காலக்கப்பல்.
அந்த உலகின் காலக்கப்பலைப்போல் இன்னுமொரு காலக்கப்பலை
நான் வெறெங்கும் கண்டதில்லை.
அந்தக் காலக்கப்பற் பயணத்துக்காகவே நான் அடிக்கடி அங்கு செல்வதுண்டு.
அந்தக்கப்பலிலேறி
ஆதியில் இங்கு ஆட்டம்போட்ட இராட்சதப்பறவைகள், மிருகங்களின் காலகட்டத்துக்கு
என்னால் மிகவும் இலகுவாகச் சென்று விட முடிகின்றது.
ஆனால் அக்காலக்கப்பல் என்னை அவற்றிடமிருந்து திறமையாக
பாதுகாக்கவும் செய்கின்றது.
என்னால் அம்மிருகங்கள்,பட்சிகளின் அபாயங்களைப்பற்றிய சிந்தனைகளை நீக்கி
அங்கு அக்கப்பலில் பயணிக்க முடிகின்றது.
கவிதை: எமக்கும் கீழே தட்டையர் கோடி! - வ.ந.கிரிதரன் -
தட்டையர்கள் உலகுக்கு விஜயம் செய்வதென்றால்
எனக்கு மிகவும் பிடித்த
பொழுதுபோக்கு.
பரிமாண வித்தியாசங்கள் எங்களுக்கிடையில்
ஏற்படுத்திய வித்தியாசங்கள்
எங்களுக்கு மிகவும் சாதகமாகவிருக்கின்றன.
அதனால் தட்டையர்கள் உலகு எப்பொழுதும்
எனக்கு உவப்பானதாகவே இருக்கின்றது.
தட்டையர்கள் உலகில் நான் எப்போதுமே உவகையுறுவதற்கு
முக்கிய காரணங்களிலொன்று
என்னவென்று நினைக்கின்றீர்கள்?
மானுடப் படைப்பிலுள்ள பலவீனங்களிலொன்றுதான்.
ஏனெனில் அங்கு நான் அவர்களைவிட
எல்லாவகையிலும் உயர்ந்தவன்.
என்னை மீறி அங்கு எவையுமேயில்லை.
புதிய கட்டமைப்பில் பதிவுகள் இணைய இதழ்!
விளம்பரதாரர்களுக்கு!
பதிவுகள் இணைய இதழை உலகின் பல நாடுகளிலிருந்தும் தமிழ் மக்கள் வாசிக்கின்றார்கள். குறிப்பாக இந்தியா, கனடா, வட அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய நாடுகள், இலங்கை, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், சீனா, பர்மா போன்ற நாடுகளுட்பட மேலும் பல நாடுகளிலிருந்தும் வாசிக்கின்றார்கள்.
பதிவுகள் இணைய இதழில் விளம்பரம் செய்வதன் மூலம் நீங்கள் மிகுந்த பயனை அடைய முடியும். குறிப்பாக 'ரியல் எஸ்டேட்', 'மோர்ட்கேஜ்', காப்புறுதி, பல்வகைச் சேவைகளை வழங்கும் தனிப்பட்டவர்கள் & நிறுவனங்கள் , பொருட்களை, சேவைகளை விற்பவர்கள் என அனைவரும் மிகுந்த பயனை அடைய முடியும். அதனால்தான் கூகுள் நிறுவனம் கூடத் தனது விளம்பரங்களைப் பதிவுகளில் வழங்குகின்றது.
"பதிவுகள்' இணைய இதழினைப் பின்வரும் இணைய முகவரிகளில் வாசிக்கலாம்:
வ.ந.கிரிதரன்: "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்".Wednesday, January 20, 2021
பதிவுகள்.காம் கிண்டில் பதிப்புகளாக பல் துறைகளில் வெளியிட்ட 15 மின்னூல்கள் (தமிழில் 11 நூல்கள் & ஆங்கிலத்தில் 4 நூல்கள்)!
மின்னூற் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி! பதிவுகள்.காம் கிண்டில் பதிப்புகளாக பல் துறைகளில் 15 மின்னூல்களை (தமிழில் 11 நூல்கள் & ஆங்கிலத்தில் 4 நூல்கள்) வெளியிட்டுள்ளது. அவை தற்போது அமேசன் தளத்தில் விற்பனைக்குள்ளன. வெளியிட்ட மின்னூல்களின் விபரங்கள் வருமாறு:
நாவல்:
அமெரிக்கா - வ.ந.கிரிதரன்
குடிவரவாளன் - வ.ந.கிரிதரன்
வன்னி மண் - வ.ந.கிரிதரன்
மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்
அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன்
கட்டுரை:
வ.ந.கிரிதரனின் கட்டுரைகளின் தொகுப்பு
சிறுகதை:
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் - வ.ந.கிரிதரன் (25 புகலிடச் சிறுகதைகளின் தொகுப்பு)
கவிதை:
ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் - வ.ந.கிரிதரன் (44 கவிதைகளின் தொகுப்பு)
கட்டடக்கலை:
நவீன கட்டடக்கலைச் சிந்தனைகள் - வ.ந.கிரிதரன் (கட்டடக்கலை, நகர அமைப்புக் கட்டுரைகளின் தொகுப்பு)
வரலாறு / நகர அமைப்பு
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) - வ.ந.கிரிதரன்
அறிவியல்:
அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன் - (அறிவியற் கட்டுரைகள்,கவிதைகள் & கட்டுரைகளின் தொகுப்பு)
தமிழ் மின்னூல்களுக்கான இணைப்பு: https://www.amazon.ca/s?i=digital-text&rh=p_27%3A%E0%AE%B5.%E0%AE%A8.+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&s=relevancerank&text=%E0%AE%B5.%E0%AE%A8.+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&ref=dp_byline_sr_ebooks_1
ஆங்கிலத்தில்...
1. An Immigrant - V.N.Giritharan (Novel)
2. AmeriCA - V.N.Giritharan (Novel)
3. Nallur Rajadhani City Layout - V.N.Giritharan (Research Paper)
4. A message for Stallion-Stealers! (A collection of poems) - V.N.Girithara
ஆங்கில நூல்களுக்கான இணைப்பு: https://www.amazon.ca/s?k=v.n.giritharan&i=digital-text&ref=nb_sb_noss
Monday, January 18, 2021
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல். மேற்படி ஆய்வு நூல் பின்வரும் அத்தியாயங்களைக் கொண்டுள்ளது:
அத்தியாயம் ஒன்று: 'நல்லூரும் சிங்கை நகரும்'!
அத்தியாயம் இரண்டு: 'நல்லூரும் யாழ்ப்பாணமும்'!
அத்தியாயம் மூன்று: 'நல்லூர் இராஜதானி: வரலாற்றுத் தகவல்கள்!'
அத்தியாயம் நான்கு: 'நல்லூர்க் கந்தசுவாமி கோயில்!'
அத்தியாயம் ஐந்து: 'நல்லூர்க் கோட்டையும் மதில்களும்!'
அத்தியாயம் ஆறு: 'வெளிக்கள ஆய்வுத் தகவல்கள்!'
அத்தியாயம் ஏழு: 'கோட்டைவாசலும், கோட்டையடியும் வெயிலுகந்த பிள்ளையார் ஆலயமும்!'
அத்தியாயம் எட்டு: 'பண்டைய நூல்களும், இந்துக் கட்டடக் கலையும்!"
அத்தியாயம் பத்து: பண்டைய தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள்!
அத்தியாயம் பதினொன்று: 'நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு!'
இந்நூல் மேலதிகமாகப் பின்வரும் கட்டுரைகளையும் உள்ளடக்கியுள்ளது:
1.சிங்கை நகர பற்றிய ஒரு நோக்கு - வ.ந.கிரிதரன்
2. கோப்பாய்ப் பழைய கோட்டையின் கோலம் - வ.ந.கிரிதரன்
3. கால யந்திரத்தினூடாக நல்லூர் - காத்யானா அமரசிங்ஹ
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -
இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...


