Tuesday, April 14, 2026
SURRENDERING MYSELF AT THE HANDS OF WINTER - V.N.Giritharan (குளிர்காலத்துடனான என் சரணாகதி! - வ.ந.கிரிதரன் -) | Rendered in English by Latha Ramakrishnan -
ஆஸ்திரியாவைத் தளமாகக்கொண்டு வெளியாகும் சஞ்சிகை Words & World இதன் இவ்வாண்டுக்கான முதலாவது இதழில் எனது கவிதையான 'குளிர்காலத்துடனான என் சரணாகதி!' யின் தமிழ் வடிவமும், எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனின் ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியாகியுள்ளன. அதற்கான இணைய இணைப்பு -
குளிர்காலத்துடனான என் சரணாகதி! - வ.ந.கிரிதரன் -
குளிர்காலம் விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
கனடாவில் ஆண்டுகள் பலவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
இன்னும் இந்தக் குளிர்காலம் மீதான
என் வெறுப்பு குறைந்தபாடாகவில்லை.
வழக்கம்போல் குளிர்காலம் பற்றிய நினைவுகள்
வந்தவுடன், கூடவே அதனுடன் இணைந்து
வரும் பனி, உறைபனி எல்லாமே நினைவுக்கு
வந்து விடுகின்றன.
Monday, April 13, 2026
எழுத்தாளர் த.சிவதாசனின் 'காலம் 63' கட்டுரை 'கனடா நாற்பது'வும், வரலாற்று இருட்டடிப்பும்! - வ.ந.கிரிதரன் -
கனடாத் தமிழ் எழுத்தாளர்களில் சிலர் ஆய்வாளர்கள் அவதாரம் எடுத்ததும் வரலாற்றை மூடி மறைக்கும் வேலையைச் செய்யத் தொடங்கி விடுவர். எழுத்தாளர் ரதன் மகரந்தன் என்னும் பெயரில் சுபமங்களா சஞ்சிகையில் 'கனடாவில் தமிழ்' என்னுமொரு கட்டுரையை எழுதியபோது அக்காலகட்டத்தில் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்துக்கொண்டிருந்த பலரைத் தவிர்த்திருந்தார். அது பலத்த வாக்கு வாதங்களை ஏற்படுத்தியது. அதற்குப் பதிலாக எழுத்தாளர் ஒருவர் , ப.ஶ்ரீகாந்தனாக இருக்க வேண்டும், வாசகர் கடிதம் எழுதி அதனையும் சுபமங்களா வெளியிட்டிருந்தது.
Saturday, April 11, 2026
அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூல் பற்றிய குறிப்புகள்! - வ.ந,கிரிதரன் -
[காலம்' செல்வத்தின் ஏற்பாட்டில் இன்று டொரோண்டோ, கனடாவில் நடந்த 'வாழும் தமிழ் நிகழ்ச்சியில் அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் ' 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூல் பற்றி ,நேரக்கட்டுப்பாடு காரணமாக நான் கூறவிருந்த் எல்லா விடயங்களையும் என்னால் கூற முடியவில்லை. அதனால் கூற விருந்த ஏனைய விடயங்களையும் ஓரளவு முழுமையாக்கி இப்பதிவில் தந்திருக்கின்றேன்.]
அறிவியல் நூல்களின் அவசியம் ஏன்? அறிவை மக்களைச் சென்றடைய, தவறான தகவல்களைத் தடுக்க, அதாவது சரியான தகவல்களை அறிய, அறிவியல் சிந்தனையை வளர்க்க, சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த, மூட நம்பிக்கைகளைக் குறைக்க, அரசின் முடிவுகள் சரியாக ,அறிவு பூர்வமாக அமைய, மாணவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்த, சிந்தனையைத் தூண்ட, ஏன் என்று கேள்விகளைக் கேட்கும் ஆற்றலை வளர்க்க, அறிவியல் தொழில் நுட்பத்தை , அதன் நன்மை, தீமைகளை அறிந்து கொள்ள அறிவியல் கட்டுரைகள் , நூல்கள் எழுதப்பட வேண்டும். அறிவு பகிரப்பட வேண்டும். அதனைச் சாத்தியமாக்குபவை அறிவியல் எழுத்துகள்.
எனக்கு அறிவியல் துறையில் வானியல், வானியற்பியல் மிகவும் பிடிக்கும். என் பால்ய பருவத்தில் , வவுனியாவில், வீட்டு முற்றத்தில் அப்பாவின் சாறத்தைத் தொட்டிலாக்கி, நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானைப்பார்த்ததிலிருந்து என் ஆர்வம் தொடங்கியது என்பேன். அக்காலகட்டத்தில் கல்கியில் 'பொன்னியின் செல்வன்' நாவலும் மீண்டும் தொடராக வெளியாகத்தொடங்கியிருந்தது. ஓவியர் வினுவின் அழகான ஓவியங்களுடன் வெளியான நாவலில் அப்போது அடிக்கடி வானில் தோன்றிக்கொண்டிருந்த தூமகேது பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்பொழுதுதான் அவ்விதம் குறிப்பிடப்பட்டிருப்பது வால்வெள்ளி என்பதை அறிந்தேன். நாவல் நடைபெறும் காலத்தில் நடக்கப்போகும் துர்ச்சம்பவமொன்றினை எதிர்வு கூறுவதாகத் தூமகேது சித்திரிக்கப்பட்டிருக்கும். அதே காலகட்டத்தில் கல்கியில் வாண்டுமாமாவின் 'ஓநாய்க்கோட்டை' என்னும் சித்திரக்கதையொன்றும் வெளியாகிக்கொண்டிருந்தது.அதில் வரும் தூமகேது பாத்திரமும் பயங்கரமானதோர் ஆளுமையாகச் சித்திரிக்கப்பட்டிருந்த பாத்திரம். அதனால் தூமகேது என்னும் பெயரும் எம்மைப் பயப்படுத்துமொரு பெயராக அக்காலகட்டத்திலிருந்தது. அத்துடன் அக்காலகட்டத்தில் அடிவானில் தென்பட்டுக்கொண்டிருந்த வால்வெள்ளியும் நினைவுக்கு வருகின்றது.
| அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணன் |
அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூலின் 'என்னுரையில்' தன் சிறுவயதில் பூதக்கண்ணாடியுடன் அலைந்து திரிந்த அனுபவத்தை விபரித்திருப்பார். அதை வாசித்தபோது எனக்குப் பழைய நினைவுகள் மீள் எழுந்தன. கலகி சஞ்சிகையின் அளவில் சிறுவர்களுக்கான அறிவியல் புத்தகமொன்று 'நீங்களும் விஞ்ஞானியாகலாம்' என்னும் பெயரில் அல்லது அது போன்றதொரு பெயரில் வெளியாகியிருந்தது. யாழ் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்த நூல்களிலொன்று. பூதக்கண்ணாடியுடன் வீட்டு வளவில் திரியும் சிறுவனொருவனின் சித்திரம் போன்ற சித்திரங்களுடன் வெளியாகியிருந்த அந்த நூலை அடிக்கடி எடுத்து வாசித்திருக்கின்றேன். மிகவும் எளிய தமிழ்லில் எழுதப்பட்டிருந்த நூலும், சித்திரங்களும் நெஞ்சில் கிளர்ச்சியை ஏற்படுத்தின. அதனைக் கலைக்கதிர் நிறுவனம் வெளியிட்டிருக்கலாம். சரியாக நினைவிலில்லை. அதை வாசித்து விட்டு , வெங்கட்ரமணன் போல் நானும் பூதக்கண்ணாடியுடன் வீட்டு வளவு முழுவதும், என்னை ஓர் அறிவியல் அறிஞராகக் கருதிக்கொண்டு அலைந்துதிரிந்தேன்.
Friday, April 10, 2026
எழுத்தாளர் கற்சுறாவின் 'நூலகம்' பற்றிய குற்றச்சாட்டுகள்...
![]() |
| எழுத்தாளர் கற்சுறா |
அண்மையில் முகநூலில் எழுத்தாளர் கற்சுறா நூலகம் பற்றியும், 'நூலக' அறக்கட்டளையுடன் இணைந்து செயற்படும் சஜீவன் பற்றியும் , சஜீவனின் கிளப் ஹவுஸ்ஸில் நண்பர் பரதனுடன் நடந்த உரையாடல் பற்றியுமொரு பதிவிட்டிருந்தார். அதில் அவர் பின்வரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இதுவரை தானும், தன் நண்பர்களும் நூலகத்துக்கு அனுப்பிய பணத்தைத் திருப்பி அனுப்பும்படியும், நூலகத்தில் உள்ள தனது நூல்கள், சஞ்சிகைகளை நீக்கும்படியும் கோரிக்கை விடுத்திருந்தார்.
Monday, April 6, 2026
மகாகவி பாரதியார் பாடல் - 'கண்ணம்மா என் காதலி (2) '
மகாகவி பாரதியாரின் 'கண்ணம்மா என் காதலி (2) ' கவிதையைப் பாவித்து இப்பாடலை உருவாக்கியுள்ளேன். என் குரலில் இசையமைத்துப் பாடியிருப்பவர் செயற்கை நுண்ணறிவாளர் SUNO 5.5
மகாகவி பாரதியார் பாடல் - 'கண்ணம்மா என் காதலி (2) '
இசை & வ.ந.கிரிதரனின் குரலில் : SUNO AI ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வான வளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே
சாலப் பலபலநற் பகற் கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.
மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,
ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,
பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்,
பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்;
ஓங்கி வருமுவகை யூற்றி லறிந்தேன்;
ஒட்டு மிரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;
‘வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!
மாய மெவரிடத்தில்?’என்று மொழிந்தேன்.
மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்.
வ.ந.கிரிதரன் பாடல் : தலை குனிந்து செல்லும் பெண்ணே!
எனது பாடல் வரிகளுக்கு, என் குரலில் இசைமைத்துப் பாடியிருப்பது செயற்கை நுண்ணறிவு SUNO 5.5
அறிவியல் நூல்களும், அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூல் பற்றிய வெளியீட்டு அறிவிப்பும் பற்றி... வ.ந.கிரிதரன் -
அறிவியல் நூல்களின் அவசியம் ஏன்? அறிவை மக்களைச் சென்றடைய, தவறான தகவல்களைத் தடுக்க, அதாவது சரியான தகவல்களை அறிய, அறிவியல் சிந்தனையை வளர்க்க, சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த, மூட நம்பிக்கைகளைக் குறைக்க, அரசின் முடிவுகள் சரியாக ,அறிவு பூர்வமாக அமைய, மாணவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்த, அறிவியல் கட்டுரைகள் , நூல்கள் பொதுமக்களுக்காக எழுதப்பட வேண்டும், ஏனெனில்: அறிவு பகிரப்பட வேண்டும். உண்மை பரவ வேண்டும். சிந்தனை வளர வேண்டும்.
வ.ந.கிரிதரனின் பாடல்: இயற்கையைப் பேணுவோம். வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
வ.ந.கிரிதரனின் பாடல்: இயற்கையைப் பேணுவோம். வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5 ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி இயற...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...




