'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக் கொண்டு, 2000ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்' இணைய இதழ்.
Saturday, October 10, 2026
'பதிவுகள்' இணைய இதழ் : "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'
'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக் கொண்டு, 2000ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்' இணைய இதழ்.
Thursday, October 1, 2026
யாழ்ப்பாணம் போவோமா?
இணையத்தில் தேடியபோது யாழ்ப்பாண நகரதுக்கான பயணக்கையேடுகள் பல அமேசன் தளத்தில் காணக்கிடைத்தன.
Wednesday, September 30, 2026
பல்துறை ஆளுமையாளரான எழுத்தாளர் தமயந்தி சைமனைக் கெளரவித்தது நோர்வேயின் நாதாந்தம் பல்கலை மன்றம்!
![]() |
| எழுத்தாளர் தமயந்தி சைமன் |
பல்துறை ஆளுமையாளரான எழுத்தாளர் தமயந்தி சைமனைக் கெளரவித்தது நோர்வேயின் நாதாந்தம் பல்கலை மன்றம்!
எழுத்து (கவிதை, சிறுகதை, விமர்சனம் போன்ற) , புகைப்படக்கலை, இதழியல், நாடகம், கூத்து, குறுந்திரைப்படம், சமூக, அரசியற் செயற்பாடு, சூழலியல் எனப் பன்முக ஆளுமை மிக்கவர் தமயந்தி சைமன். நோர்வே ஊடகங்களில் புகைப்படக் கலைஞராகப்பணியாற்றியவர். இவரது இயற்பெயர் சைமன் விமலராஜன். ஊர்காவற்றுறைப் பகுதியில் வாழ்ந்த புகழ்பெற்ற தென்மோடிக்கூத்துக்கலைஞர் சைமன் பத்திநாதன் அந்தோனிப்பிள்ளை இவரது தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது. நோர்வேயிலிருந்து வெளியான சுவடுகள், சுமைகள் , உயிர்மெய் ஆகிய சஞ்சிகைகளில் இவரது பங்களிப்பு முக்கியமானது. இவரது இணையர் பானுபாரதியும் எழுத்தாளரே. நாடோடி, கெளசல்யன், ஜெயக்கொடி ஆகிய புனைபெயர்களிலும் எழுதியிருக்கின்றார்.
இவரது நாற்பதாண்டுக் காலக் கலை, இலக்கியப் பங்களிப்புகளுக்காக , நோர்வேயிலியங்கும் 'நாதாந்தம்' பல்கலை மன்றம் தனது வானி விழாவில் இவரைக் கெளரவித்துள்ளது. அதற்காக என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
Tuesday, September 29, 2026
வ.ந.கிரிதரனின் பாடல்: காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே.
வ.ந.கிரிதரனின் பாடல் , வ.ந.கிரிதரனின் குரலில் , இசைத்துப் பாடுவது : SUNO 5.5 AI
வ.ந.கிரிதரனின் பாடல் , வ.ந.கிரிதரனின் குரலில் , இசைத்துப் பாடுவது : SUNO 5.5 AI
Saturday, September 26, 2026
மூலதனத்தின் மூலக்கூறுகள்: மார்க்சிய தத்துவமும் அதன் வரலாற்றுப் பயணமும்! - நுண்ணறிவு எந்திரன் -
[கார்ல் மார்க்சின் மூலதனம் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை பற்றிய சுருக்கமான புரிதலை , இலகுவாக, எளிமையாக நாம் அறிவது அவசியம். அதற்காக இது பற்றிய இந்தக் கட்டுரையினை கூகுள் நனோ பனானா செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கினேன். இதனை வாசித்துப் பாருங்கள். ஏதாவது தகவற் பிழைகள் இருப்பின் அறியத்தாருங்கள். நான் வாசித்தபோது சரியான கட்டுரையாகவே இக்கட்டுரை தெரிகின்றது. இது செயற்கை நுண்ணறிவை ஆரோக்கியமாக நாம் பயன்படுத்தலாம் என்பதற்கு ஓர் உதாரணம் மட்டுமே. இச்செயற்கை நுண்ணறிவுக்கு நான் வைத்துள்ள பெயர் நுண்ணறிவு எந்திரன்.]
காரல் மார்க்ஸின் 'மூலதனம்' நூலின் மிக முக்கிய கோட்பாடான "உபரி மதிப்பு" (Surplus Value) என்பதை ஒரு எளிய உதாரணம் மூலம் கீழே புரிந்து கொள்ளலாம்.
மணி என்ற ஒரு தொழிலாளி, முதலாளி ஒருவருக்குச் சொந்தமான காலணி (Shoe) செய்யும் தொழிற்சாலையில் வேலை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
.1. உற்பத்திச் செலவு (முதலீடு)
மூலப்பொருட்கள்: தோல், ரப்பர் மற்றும் கருவிகளுக்காக முதலாளி $20 செலவு செய்கிறார்.
கூலி: மணியின் ஒரு நாள் முழு வேலைக்காக (8 மணிநேரம்) முதலாளி $10 கூலி தருவதாக ஒப்புக்கொள்கிறார்.
முதலாளி போட்ட மொத்த முதலீடு = $30.
2. தொழிலாளியின் உழைப்பு
மணி தனது வேலையைத் தொடங்குகிறார். ஆச்சரியமாக, வேலைக்குச் சேர்ந்த முதல் 4 மணிநேரத்திலேயே அவர் அனைத்து மூலப்பொருட்களையும் இணைத்து ஒரு ஜோடி அழகான காலணியைச் செய்து முடித்துவிடுகிறார்.
Thursday, September 24, 2026
கனடாவில் தமிழ் முதியவர்கள்!
கனடாவில் வசிக்கும் முதியவர்கள் பற்றிய விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா நண்பர்களே! அவ்வப்போது முதியவர்கள் மாடியிலிருந்து பாய்ந்து தம்முயிரைப் போக்கும் செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். பிள்ளைகள் முதியவர்களின் ஓய்வூதியங்கள், சமூக உதவிக் கொடுப்பனவுகளைக் கையாடல் செய்வதாக அவ்வப்போது செய்திகளைக் கேள்விப்படுகின்றோம். முதியவர்கள் உழைத்து வாங்கிய வீடுகளிலிருந்து முதியவர்கள் இல்லங்களுக்கு வலிந்து அனுப்பப்படுவதாகம் கேள்விப்பட்டிருக்கின்றோம். முதியவர்கள் பலர் ஓய்வூதியம் பெற்ற நிலையிலும் தொடர்ந்தும் வேலை செய்து கொண்டிருப்பதையும் அறிந்திருக்கின்றோம். முதியவர்களைக் குழந்தைகள் தம் குழந்தைகளைப் பராமரிக்கும் வேலையைச் செய்யுமாறு வறுபுறுத்துவது பற்றியும் அறிந்திருக்கின்றோம்.
தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 'அ.முத்துலிங்கம் இயல் விருது 2025' நிகழ்ச்சியில் எடுத்த படங்கள், முதல் படத்தில் வாழ்நாள் சாதனையாளருக்கான...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...

