புதுமைப்பித்தனின் 'பொன்னகரம்' அளவில் சிறிய , ஆனால் மிகவும் கடுமையாகச் சமூகத்தைச் சாடும் விவரணச் சித்திரம். அதில் அம்மாளு என்னும் வறிய பெண், நோயால் வாடியிருக்கும் தன் கணவனுக்காகத் தன்னை விற்கின்றாள்.இச்சிறுகதையின் தாக்கத்தால் எழுத்தாலாளர் ஜெகசிற்பியன் 'இது பொன்னகரம் அல்ல' என்னுமொரு சிறுகதையைக் கல்கி இதழில் அறுபதுகளில் எழுதியிருக்கின்றார். இதில் நோய்வாய்ப்பட்டிருக்கும் தன் மனைவிக்கு மருந்துகள் வாங்குவதற்காக அலையும் கணவனொருவனைத் தன் உடலிச்சைக்காகப் பணம் கொடுத்து ஆணகளை நாடிநிற்கும் ஒரு செல்வந்தப் பெண்ணின் வேட்கையைத் தீர்க்கும் பொருட்டு ஒருவன் அழைத்துச் செல்கின்றான். அதன் மூலம் அக்கணவனும் பணம் பெற்றுத் தன் மனைவியின் உயிரைக்காப்பாற்றலாம். தனக்கும் சிறு 'கொமிஷன்' கிடைக்குமென்பது அழைத்துச் செல்பவனின் திட்டம்.
- ஜெகசிற்பியன் -
ஆனால் அக்கணவனோ கடையில் உணமையை அறிந்து தன் ஆத்மாவை இவ்விதச் செயலுக்காக விற்க முடியாது அக்கணவனின் நிலைப்பாடு: மனித உயிர்வேறு. அது மனிதனுக்குச் சொ ந்தமில்லாதது. அவனுக்குச் சொந்தமானது அவனது ஆத்மா மட்டுமே. சொந்தமில்லாத உயிருக்காகச் சொந்தமான ஆத்மாவை விற்க முடியாது.
இவ்விதம் ஆத்மாவையும், உயிரையும் போட்டுக் குழப்பி, அழைத்துச் சென்றவனையும் குழப்பி, வாசகர்களையும் குழப்பி அக்கணவன் ஆத்மாவை விற்காத திருப்தியுடன் வீடு திரும்புகின்றான்.அங்கு அவனால் அவனது ஆத்மாவை காப்பாற்ற முடிந்தது. அவனது மனைவியின் உயிரைக்காப்பாற்ற முடியவில்லை. இவ்விதம் முடிகின்றது ஜெகசிற்பியனின் 'இது பொன்னகரம் அல்ல' சிறுகதை.
புதுமைப்பித்தனின் யதார்த்தத்தை எடுத்துக்காட்டினால், ஜெகசிற்பியனின் கதையோ அவரது இலட்சியக் கண்ணோட்டத்தைக் குழப்பகரமான சிந்தனையோட்டத்துடன் விபரிக்கின்றது.
- புதுமைப்பித்தன் -
கதை வெளியான கல்கி இதழை வாசிக்க - https://archive.org/details/kalki1967-04-16/page/n93/mode/2up?view=theater
No comments:
Post a Comment