Thursday, March 21, 2024

உமாசந்திரனின் 'முழுநிலா'


என் பால்யப் பருவத்தில் விகடனில் தொடராக வெளியான நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்று உமாசந்திரனின் 'முழு நிலா'. அதில் வரும் உப்பிலி, நளினா பாத்திரங்களை நான் இன்னும் மறக்கவில்லை. அப்பாவுக்கும் மிகவும் பிடித்த நாவல் அது . கோபுலுவின் ஓவியங்களுடன் தொடராக வெளியான நாவலை அக்காலகட்டத்தில் மிகவும் விரும்பி வாசித்தோம். 
நீண்ட நாட்களாக இணையத்தில் தேடிக்கொண்டிருக்கின்றேன். இன்னும் முழுமையாக அகப்படவில்லை. ஆனால் அண்மையில் அதன் ஓரிரு பக்கங்கள் கிடைத்தன. மனம் அக்காலக்கப்பலில் ஏறி அப்பருவத்துக்கே சென்றுவிட்டது. 
 
உமாசந்திரனின் முள்ளும் மலரும் மிகவும் புகழ்பெற்ற நாவல். திரைப்படமாக ரஜனி நடிப்பில், மகேந்திரன் இயக்கத்தில் வெளியானது.
யாரிடமாவது நாவலிருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.
 

 

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்