இன்று இயற்பியல் அறிஞர் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் பிறந்த தினம் மார்ச் 14. வெளி, நேரம் பற்றிய இவரது கோட்பாடுகள் அவை பற்றி அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து நிலவி வந்த கோட்பாடுகள் அனைத்தையும் தகர்த்தன. வெளி, நேரம் (காலம்) ஆகியவை இதுவரை காலமும் அறியப்பட்டிருந்தது போல் சுயாதீனமானவை அல்ல. அவையும் சார்பானவைதாம் என்பதை வெளிப்படுத்திய இவரது சிறப்புச் சார்பியற் கோட்பாடு.
இது போல் புவியீர்ப்பு பற்றிய இவரது பொதுச் சார்பியற் கோட்பாடு அது ஒரு விசையேயல்ல. வெளிநேரப் பிரபஞ்சத்தில் , பொருளொன்றின் பொருண்மையானது ஏற்படுத்தும் தாக்கத்தினால் ஏற்படும் வடிவ மாற்றமே என்பதை வெளிப்படுத்தியது. உதாரணத்துக்குச் சூரியன் அதன் பொருண்மை காரணமாக அதனைச் சுற்றியுள்ள வெளியை வளைத்து விடுகின்றது. அந்த வளைவே பூமியை அவ்வளைவு வழியே பயணிக்க வைக்கின்றது என்பதை வெளிப்படுத்தியது.
இவரது சார்பியற் கோட்பாடுகள் அறிவியல் வரலாற்றில் வெளி , நேரம் & புவியீர்ப்பு பற்றிய நிலவி வந்த அனைத்துக் கோட்பாடுகளையும் அடியோடு மாற்றி வைத்த புரட்சிகரக் கோட்பாடுகள். அதுவரை தனித்தனியாக அணுகப்பட்டு வந்த காலம், வெளி ஆகியவற்றைக் 'காலவெளி' ஆக்கியவர் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன்.
No comments:
Post a Comment