- இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=BSXPVJWeLhE
வ.ந.கிரிதரன் பாடல்; எண்ணம் நிறைவேறும் -
எங்கோ பிறந்தாய். அன்பே! எங்கோ வளர்ந்தாய்.
இங்கு வந்தாய். என் மனம் கவர்ந்தாய்.
நேற்று வரை உன்னை அறியேன் அன்பே.
இன்றோ என்னில் பாதி.
உண்மை உறவு கலைவதில்லை.
உண்மை உறவு குலைவதில்லை.
உண்மை என்னை நம்பு. அன்பே!.
உண்மை என்னை நம்பு.
அன்பே.
அந்த நம்பிக்கையில் வாழ்கின்றேன்.
இந்தப் பிறப்பில் நீயே என் துணை.
எந்தப் பிறப்பிலும் நீயே துணை எனவே
சொந்தம் தொடரவே மனம் விரும்புகிறேன்.
Saturday, August 17, 2024
வ.ந.கிரிதரன் பாடல்; எண்ணம் நிறைவேறும் -
Friday, August 16, 2024
வ.ந.கிரிதரன் பாடல்: என் பிரியம் மிகு யாழ் மண்ணே!
- இசை & குரல்: AI SUNO | ஓவியம் - AI
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=L4gHGEj649U
யாழ் மண். பிரியம் மிகு
யாழ் மண்ணே.
உணர்வுடன் கலந்த யாழ் மண்ணே.
உள்ளத்தில் நிலைத்திருக்கும் யாழ் மண்ணே.
எப்படி மறப்பேன் உன்னை
எப்படி மறப்பேன். உன்னை
நான் பிறந்த மண் நீ.
நான் தவழ்ந்த மண்.
நான் உருண்டு , புரண்ட மண் நீ.
நான் எழுந்த மண் நீ.
நான் இளமைக்கனவு கண்ட மண் நீ.
என் இனிய யாழ் மண்ணே!
எப்படி மறப்பேன் உன்னை
எப்படி மறப்பேன். உன்னை
சிறுகதை: ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை! - வ.ந.கிரிதரன்
ஓவியம் - chatGPT AI
[இச்சிறுகதை ஸ்நேகா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட ‘அமெரிக்கா’ தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. எஸ்.போ மற்றும் இந்திரா பார்த்தசாரதியால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட ‘பனையும் பனியும்’ சிறுகதைத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது. இச்சிறுகதை தாயகம் (கனடா) பத்திரிகையில் முதலில் வெளியானது. பின்னர் பதிவுகள், திண்ணை இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளது. எனக்குப் பிடித்த எனது சிறுகதைகளில் ஒன்று. பத்திரிகைகள் பலவற்றில் மீள் பிரசுமான கதை. சிறுகதை.காம் தளத்திலும் இடம் பெற்றுள்ள எனது கதைகளில் ஒன்று. ]
ஞாயிற்றுக் கிழமையாதலால் ‘றோட்டி’னில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன நெரிச்சலுமில்லை. பொன்னையாவின் ‘கொண்டா அக்கோர்ட்’ ‘சென்ற்கிளயர்’ மேற்கில் ஆறுதலாக ஊர்ந்துகொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது விடுமுறை நாட்களில் காரோடுவதென்றால் பொன்னையாவிற்கு மிகவும் பிடித்தமானதொன்று. எந்தவித ‘டென்ஷ’னுமின்றிப் பின்னால் ‘ஹோர்ன்’ அடிப்பார்களேயென்ற கவலையேதுமின்றி ஆறுதலாக நகரை ரசித்துச் செல்லலாமல்லவா? இருந்தாலும் அண்மைக்காலமாகவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் ‘ஹோர்ன்’ அடிக்கத்தான் தொடங்கி விட்டார்கள். நகரம் பெருக்கத் தொடங்கி விட்டது. ‘நகரம் பெருக்கப் பெருக்க சனங்களும் பொறுமையை இழக்கத் தொடங்கிட்டாங்கள் போலை’ இவ்விதம் இத்தகைய சமயங்களில் பொன்னையா தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். ‘நகரம் வளருகின்ற வேகத்திற்குச் சமனாக சனங்களின்ற வாழ்க்கைத்தரமும் உயரவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினைதான்’ என்றும் சில வேளைகளில் ஒருவித தீவிர பாவத்துடணும் அவன் சிந்தித்துக் கொள்வான்.
‘ஓல்ட்வெஸ்டன்’ றோட்டைக் கடந்து ‘கீல் இண்டர்செக்ஷ’னையும் கடந்து கார் விரைந்தது. இடப்புறத்தில் ‘கனடாபக்கர்ஸி’ன் ‘ஸ்லோட்டர்’ ஹவுஸ்’ பெரியதொரு இடத்தைப் பிடித்துப் ப்டர்ந்திருந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் மாடுகளைத் துண்டு போடும் பெரியதொரு கசாப்புக்கூடம்.
வ.ந.கிரிதரன் பாடல்: எண்ணிம நூலகம் 'நூலகம்'
இசை & குரல்: AI SUNO | ஓவியம் - AI
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=mOxmNszsNuc
வ.ந.கிரிதரனின் பாடல்கள் அனைதையும் கேட்க - https://www.youtube.com/@girinav1
நூல்கள் இன்பமூட்டும் இலக்கியப் படைப்புகள் மட்டுமல்ல. ஒரு காலகட்ட வரலாற்றை, பண்பாட்டை, மானுடச் சமூக வாழ்வை எடுத்துரைக்கும் வரலாற்று ஆவணங்களும் கூட. இன்று எண்ணிமப் பிரதிகளாக எழுத்துப் பிரதிகள் காலத்தின் சிதைவுகளுக்குள் சிதைந்து போகாது நிலைத்து நிற்கும் தொழில் நுட்பம் இருக்கின்றது .எண்ணிம நூலகமான 'நூலகம்' எழுத்துப் பிரதிகளை அவை நூல்களாக இருக்கட்டும், பத்திரிகைகளாக இருக்கட்டும், பல்வேறு மலர்களாக இருக்கட்டும் சேகரிக்கும் அரிய பணியினைச் செய்து வருகின்றது.
என் பால்யப் பதின்ம வயதுப் படைப்புகள் பலவற்றை நூலகத்தின் சேகரிப்பிலிருந்து என்னால் மீண்டும் பெற முடிந்தது. நூலகத்தின் சேவையைப் பாராட்டுவோம். அதற்கு ஆதரவு நல்குவோம். நூற் பிரதிகளை வழங்குவோம், நிதியினையும் அள்ளிக் கொடுப்போம். நூலகம் தளத்தின் இணையத்தள முகவரி: https://noolaham.org
வ.ந.கிரிதரன் பாடல்: எண்ணிம நூலகம் 'நூலகம்'
'நூலகம்' எண்ணிம நூலகம்.
நூலகம் வரலாற்றுப் பெட்டகம்.
நூலகம் பிரதிகளைச் சேகரிக்கும்
நல்லதொரு திட்டம் என்போம்.
நல்ல திட்டத்தை ஆதரிப்போம்.
எல்லோருக்கும் எடுத்து உரைப்போம்.
Thursday, August 15, 2024
வ.ந.கிரிதரன் பாடல்: காலவெளிச்சித்தனின் மடலொன்று!
- இசை & குரல்: AI SUNO | ஓவியம் - AI
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=nodfJ78NfbM
வ.ந.கிரிதரன் பாடல்: காலவெளிச்சித்தனின் மடலொன்று!
ஒளிக்கூம்புக்குள்
விரிந்து ,
சுருங்கி,
மீண்டும் விரிந்து
கிடக்குமென் அண்டம்.
அடியே! அண்டத்தில்
நீ இங்கெங்கு சென்றிடினும்
உன்னால் ஒருபோதுமே என்னிடமிருந்து
மறைந்துவிடவே முடியாதடி.
ஏனென்று கேட்கின்றாயா?
நீயே அறிந்துகொள்
நீயே புரிந்துகொள்
என்று நானுனக்குக்கூறிடப் போவதில்லை.
உன் சிந்திக்குமறிவுக்கும் வேலை
வைக்கப்போவதில்லை.
நானே கூறுகின்றேன் விளக்கம் கண்ணம்மா!
உன்னால் புரிந்துகொண்டிட முடிந்தால்
புரிந்துகொள்.
ஏனென்றால்
இப்பிரபஞ்சத்துடனான என் உறவு
ஏன் உன் உறவும் கூடத்தான்
ஒருபோதுமே பிரிக்கப்பட முடியாதடீ.
வ.ந.கிரிதரன் பாடல்: பாரதியின் பாட்டென்றால்.....
- இசை & குரல்: AI SUNO
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=chsuvIcnPdM
வ.ந.கிரிதரன் பாடல்: பாரதியின் பாட்டென்றால்.....
பாரதியின் பாட்டென்றால் எனக்கு
பாரில் அதைவிட வேறொன்றுமில்லை.
எனக்கு.
வேறொன்றுமில்லை.
சிந்தனைத் தெளிவில், எளிமைமிகு சொல்லில்
சிந்திக்க வைக்கும் அவன் பாடல்கள் என்னைச்
சிந்திக்க வைக்கும் அவன் பாடல்கள்.
பாரதியின் பாட்டென்றால் எனக்கு
பாரில் அதைவிட வேறொன்றுமில்லை.
எனக்கு.
வேறொன்றுமில்லை.
ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள். - வ.ந.கிரிதரன் -
இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=nfc1A2E8IdM
ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள்.
வாழ்வில் பால்யப் பருவத்து நினைவுகளே.
என் பால்ய காலத்து நண்பனை
நான் நேற்று சந்தித்தேன்.
நீண்ட நாட்களின் பின்பு
ஆண்டுகள் பல கடந்த பின்பு
நேற்றுத்தான் சந்தித்தேன் அவனை.
பதின்ம வயதுகளில் அவனுடன் கழித்த நினைவுகள்
படம் விரித்தன நெஞ்சில்.
யாழ் நகரத்தின் தெருக்களில் அவனுடன்
வாழ்வைக் கழித்த பொழுதுகள் தெரிந்தன.
ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள். - வ.ந.கிரிதரன் -
ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள்.
வாழ்வில் பால்யப் பருவத்து நினைவுகளே.
ஒரு தடவை கீரிமலை சென்றோம்.
ஒல்லித்தேங்காய் இல்லாவிட்டால் கேணியில்
நீந்த முடியாத நிலையில் நான்.
நீந்துவதில் பேராற்றல் அற்ற நிலையில் நான்.
அவனும் இன்னுமொரு நண்பனும் நீந்தினார்கள்,
அவர்கள் நீந்துவதை வேடிக்கை பார்த்து நின்றேன்.
தமிழகமும் , ஊழலும்!
தமிழக வெற்றிக்கழகம் தமிழ் நாட்டில் ஊழலை ஒழித்து விட்டதாகக் கதைக்கின்றார்களே, அது உண்மையா? ஆராய்ந்து பார்த்தால் ஓரளவு உண்மை உண்டு.ஓரளவு பொய்...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
