இலங்கையின் நவீனத் தமிழ்க்கவிதையின் முன்னோடிகளில் ஒருவராக நான் நிச்சயம் கவீந்திரனைக் (அ.ந.கந்தசாமி) குறிப்பிடுவேன். மகாகவி பாரதியாரை தவிர்த்து விட்டு நவீனத் தமிழ்க் கவிதையைப் பற்றிப் பேச முடியாது. அதுபோல் இலங்கையின் நவீனத் தமிழ்க்கவிதையைப் பற்றி அதன் முன்னோடிகளைப் பற்றிப் பேசும் எவரும் அ.ந.கந்தசாமியைத்தவிர்க்க முடியாது என்பது என் கருத்து.
அ.ந.கந்தசாமியின்
கவிதைப் பங்களிப்பை அறிய நிச்சயம் வாசிக்க வேண்டிய கவிதைத்தொகுப்பு
எதிர்காலச்சித்தன் பாடல். தற்போது நூலகம் தளத்தில் வாசிக்கலாம். அதற்கான
இணைய இணைப்பு - https://noolaham.net/project/1207/120622/120622.pdf
இந்நூல் தற்போது கிண்டில் - அமேசன் மின்னூலாகவும் கிடைக்கின்றது - https://www.amazon.com/dp/B0DJSK811V