Wednesday, October 30, 2024

எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' (நாவல்)


எழுத்தாளர் அ.ந.கந்தசாமி எழுதித் தினகரன் பத்திரிகையில் தொடராக வெளியான நாவல் 'மனக்கண்'. வெளிவந்தபோது வாசகர்கள் மத்தியில் அமோக ஆதரவைப்பெற்ற நாவல். அவர் சங்கீதப் பிசாசு என்னுமொரு சிறுவர் நாவலையும் சிரித்திரன் சஞ்சிகையின் ஆரம்ப காலத்தில் எழுதியிருக்கின்றார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. பிரெஞ்சு எழுத்தாளர் எமிலி ஷோலாவின் 'நானா' நாவலையும் மொழிபெயர்த்து அவர் சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது அதில் தொடராக வெளியிட்டார்.
 
'மனக்கண்' நாவல் இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவையில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் தனது இறுதிக்காலத்தில் இன்னுமொரு நாவலையும் எழுதியிருக்கின்றார். அது மலையக மக்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட 'கழனி வெள்ளம்' என்னும் நாவல். அது அவரது மறைவையடுத்து எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது. செ.கவின் உடமைகளுடன் கறுப்பு ஜூலை 83 இனக்கலவரத்தில் அது எரிந்து போனது தரதிருஷ்ட்டமானது.
தற்போது 'மனக்கண்' நாவல் கிண்டில் - அமேசன் மின்னூலாக, பதிவுகள்.காம் வெளியீடாகக் கிடைக்கின்றது - - https://www.amazon.com/dp/B0DJWBDT2M
 
நாவலை நூலகம் தளத்தில் பிடிஃப் வடிவில் வாசிக்கலாம். அதற்கான இணைப்பு
 
நூலை வாசிப்பவர்கள் தட்டச்சுப் பிழைகளை அவதானித்தால் அறியத்தாருங்கள். எதிர்காலப் பதிப்புகளில் அவை நீக்கப்பட்டு வெளிவருவதற்கு உதவியாகவிருக்கும்.

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்