Wednesday, October 30, 2024

மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தொகுப்புகள்: 'Modern Tamil Poetry - A Miniature canavas ' (1 & 2)


கலைஞன் பதிப்பகம் அண்மையில் நேர்த்தியான வடிவமைப்பில், இரண்டு தொகுப்புகளாகத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை 'Modern Tamil Poetry - A Miniature canavas ' என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது. 
 
முதலாவது தொகுப்பில் 153 கவிஞர்களின் கவிதைகளும், இரண்டாவது தொகுப்பில் 161 கவிஞர்களின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. முதல், தொகுப்புக் கவிதைகளை எஸ்.என்.ஶ்ரீவஸ்தாவும், இரண்டாவது தொகுப்புக் கவிதைகளை எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்துள்ளார்கள்.
இரண்டாவது தொகுப்பில் எனது கவிதையொன்றின் மொழிபெயர்ப்பும் இடம் பெற்றுள்ளது. ஒட்டகங்கள் என்னும் எனது கவிதை In Comparision.. என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. 
 

நூலின் இறுதியில் அனைத்துக் கவிஞர்களைப் பற்றியும் அறிமுகக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
 
இன்று தபால் மூலம் என்னை இரு தொகுதிகளும் வந்தடைந்தன. கலைஞன் பதிப்பகத்தாரின் கவிஞர்களுக்கான கடிதமும் கூடவே வந்தது. தொகுதிகளை அனுப்ப உதவிய லதா ராமகிருஷ்ணனுக்கும், கலைஞன் பதிப்பகத்துக்கும் நன்றி.

No comments:

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்லதொரு வழிகாட்டி

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்ல...

பிரபலமான பதிவுகள்