இசை & குரல் : AI SUNO | ஓவியம் - AI
சிந்திப்பீர் மானுடரே!
சிந்திப்பது மனிதரின் தனிச்சிறப்பு.
சிந்திப்பதால் ஞானம் பெருகும்.
கேட்பவற்றை அப்படியே நம்பாதே.
காண்பவற்றையும் அப்படியே நம்பாதே.
கேட்பவை, காண்பவை அனைத்தையுமே
கவனத்தில் எடுத்தே சிந்திப்பாய்.
சிந்திப்பது மனிதரின் தனிச்சிறப்பு.
சிந்திப்பதால் ஞானம் பெருகும்.
மந்தையாக மாறிக் கிடக்காதே.
மனத்தில் இருத்தி சிந்திப்பாய்.
விந்தைமிகு இருப்பின் அர்த்தம்
விளங்கிக் கொள்ளச் சிந்திப்பாய்.
சிந்திப்பது மனிதரின் தனிச்சிறப்பு.
சிந்திப்பதால் ஞானம் பெருகும்.
செயற்பாடு என்றுரைக்கும் அறிவியல்.
நியூரோன்களின் நாட்டியமே பிரபஞ்சம்
நினைவுகளின் விளையாட்டா பிரபஞ்சமும்.
சிந்திப்பது மனிதரின் தனிச்சிறப்பு.
சிந்திப்பதால் ஞானம் பெருகும்.
No comments:
Post a Comment