Saturday, October 5, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - விரிவெளியும், விடைதேடும் நெஞ்சும்

இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

விரிவெளியும், விடைதேடும் நெஞ்சும்

விரிந்திருக்கும் பெரு வெளியில் இருக்கின்றோம்
புரிந்திட முயற்சி செய்கின்றோம் தெரிந்திட.

ஒளியாண்டுத் தொலைவுகள் பிரமிக்க வைக்கும்.
துளியென எம்இருப்பு இருப்பதும் எதனால்?
தொலைவுகள் பிரிக்கும் பெரு வெளியில்
அலையும் உயிரினம் இதுவரை அறியோம்.

விரிந்திருக்கும் பெரு வெளியில் இருக்கின்றோம்
புரிந்திட முயற்சி செய்கின்றோம் தெரிந்திட.

நெடுந்தொலைவு வெல்வது சாத்தியமா இல்லையா?
நம்வாழ்வில் வெற்றி  கிட்டுமா அறியோம்.
உயிர்கள் வேறு அற்ற அண்டமா?
உண்மையை அறிதல் இலகு அல்ல.

விரிந்திருக்கும் பெரு வெளியில் இருக்கின்றோம்
புரிந்திட முயற்சி செய்கின்றோம் தெரிந்திட.

விடை காணத் தடை பெருந்தொலைவு.
வேகத்தின் அதிகரிப்பு காலத்தை மீறல்
அடைவதே ஒரேவழி ஆனால் அதனை
அடைவது எப்படி அதுதான் கேள்வி.

விரிந்திருக்கும் பெரு வெளியில் இருக்கின்றோம்
புரிந்திட முயற்சி செய்கின்றோம் தெரிந்திட.

No comments:

ஆகஸ்ட் 2026இல் பதிவுகள் இணைய இதழுக்கு வருகை தந்தவர்கள்!

ஆகஸ்ட் மாதம் பதிவுகள் இணைய இதழுக்கு வருகை தந்தவர்கள், அவர்கள் பார்த்த பக்கங்கள் பற்றிய விபரங்கள் இவை! வருகை தந்தவர்கள் (Unique Visitors) - 5...