Saturday, October 12, 2024

தென்கொரிய எழுத்தாளர் ஹான் கங்குக்கு இலக்கியத்துக்கான நோபல் விருது !


எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மேனாட்டு நூல்கள் பலவற்றை வாசித்து அவை பற்றீய எண்ணப்பதிவுகளை அடிக்கடி எழுதுபவர். அவை பல தொகுப்புகளாக  வெளிவந்துள்ளன. ஒரு தடவை அவர் புக்கர் விருது பெற்ற நாவலொன்றைப் பற்றிச் சிறு குறிப்பொன்று 'உணவை மறுத்தவள்' என்னும் தலைப்பில்  எழுதியிருந்தார். அவர் அந்த நாவலை வாசித்ததற்கு முக்கிய காரணம் அதற்கு புக்கர் விருது கிடைத்ததுதான் என்பதை அப்பதிவை வாசிக்கும் எவரும் புரிந்துகொள்வர். அவரை அந்த நாவல் கவரவில்லையென்பதை அப்பதிவின் இறுதி வரிகள் வெளிப்படுத்தின. அவ்வரிகள் வருமாறு;


'எளிமையான  இந்த நாவலுக்கு மேன் புக்கர் விருது கிடைத்திருப்பது குருட்டு அதிர்ஷ்டம் என்றே  கருதத்தோன்றுகிறது.'


அந்த நாவலை எழுதியவருக்கு 2024ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் விருது கிடைத்துள்ளது. அவருக்கு இந்த விருது கிடைக்க அந்த நாவலும் ஒரு காரணம். அவருக்கு நோபல் விருது கிடைக்க முக்கிய காரணங்கள் இந்நாவலிலுள்ள அவரது கவித்துவமான நடையும், வரலாற்றுத் துயரங்களை எதிர்கொண்ட தன்மையும், நொருங்கக்கூடிய மானுட வாழ்க்கையினை வெளிப்படுத்திய போக்கும் என்று கூறப்படுகின்றது.

அந்த நாவலை எழுதியவர் ஹன் காங் (Han Kang) நாவலின் தலைப்பு ; மரக்கறி உண்பவர் (The Vegetarian) நாவலாசிரியை தென் கொரியாவைச் சேர்ந்தவர். ஹன் காங் நாவலாசிரியர் மட்டுமல்லர் கவிஞரும் கூட.,நாவலின் கவித்துவ மொழி நடைக்கு அதுவுமொரு காரணமாக நிச்சயமிருக்கும்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு எளிமையான நடை மிக்க நாவலாகத் தென்பட்ட அந்த நாவல் தான் அதன் கவித்துவ மொழிக்காக புக்கர் விருதினை வென்றிருக்கின்றது. தற்போது நோபல் விருது கிடைக்கவும் காரணமாக அமைந்திருக்கின்றது.

 


 

 


No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்