Thursday, October 17, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: அன்பின் வலிமை!


இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

அன்பின் வலிமை!

மனtதொன்றி நினைத்தால் நினைத்தது நடக்கும்.
மனதொன்றி நினைப்போம் வாழ்வில் வெல்வோம்.

அன்பே! எண்ணங்களின் வலிமையை அறிந்தேன்
அன்பின் வலிமையினை உணர்ந்தேன் உன்மூலம்.
தொலைவில் இருந்தாய். நினைவில் வந்தாய்.
மலைக்க வைத்தாய். மனதொன்றி நினைத்தாய்.

மனதொன்றி நினைத்தால் நினைத்தது நடக்கும்.
மனதொன்றி நினைப்போம் வாழ்வில் வெல்வோம்.

மனதொன்றி நினைத்தேன். நினைக்க வைத்தேன்.
மனதொன்றி   நினைத்தாய். நினைக்க வைத்தாய்.
மனதொன்றி நினைத்தால் நினைத்தது நடக்கும்
என்பதை  உணரச் சாட்சி வேறுண்டா?

மனதொன்றி நினைத்தால் நினைத்தது நடக்கும்.
மனதொன்றி நினைப்போம் வாழ்வில் வெல்வோம்.

மனத்தில் நினைத்துப் படுக்கையில் சாய்ந்தால்
கனவுகள் நனவுகள் ஆகுமென்று சொன்னார்
அக அறிவியல் அறிஞர்கள் பலரும்.
அவ்விதமே கனவுகள் காண்போம். வெல்வோம்

மனதொன்றி நினைத்தால் நினைத்தது நடக்கும்.
மனதொன்றி நினைப்போம் வாழ்வில் வெல்வோம்.

அன்பே. அன்பு மனதொன்ற வைக்கும்.
அதனால் அதன் வலிமை அதிகம்.
இயல்பாக மனத்தை ஒன்ற வைக்கும்.
இதுவே இருப்பின் அடிப்படை உணர்ந்தேன்.

மனதொன்றி நினைத்தால் நினைத்தது நடக்கும்.
மனதொன்றி நினைப்போம் வாழ்வில் வெல்வோம்.

அன்பு செய்வோம். ஆனந்தம் அடைவோம்.
இன்புற்று வாழ்ந்திட அன்பு செய்வோம்.
அகிலத்தில் உள்ள அனைத்தின் மீதும்
அன்பு வைப்போம். அக மகிழ்வோம்.

மனதொன்றி நினைத்தால் நினைத்தது நடக்கும்.
மனதொன்றி நினைப்போம் வாழ்வில் வெல்வோம்.

No comments:

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்லதொரு வழிகாட்டி

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்ல...

பிரபலமான பதிவுகள்