Sunday, October 6, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - மண்ணின் குழந்தைகள் நாம்!


 இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

மண்ணின் குழந்தைகள் நாம் உணர்வோம்.
விண்ணின் குழந்தைகள் நாம் புரிவோம்.

வெறுமைக்குள் விரையும் வாயுக் குமிழி.
வாயுக் குமிழிக்குள் மட்டுமே பரபரப்பு.
விரிந்திருக்கும் வெறுமை விரவிக் கிடக்கும்
புரியாத காலவெளிக்குள் தனித்துக் கிடக்கின்றோம்.

மண்ணின் குழந்தைகள் நாம் உணர்வோம்.
விண்ணின் குழந்தைகள் நாம் புரிவோம்.

பிரபஞ்சத்தின் தனிமையில் மூழ்கிக் கிடக்கின்றோம்.
போரும் ,பெருமையும் தேவை தானா?
சின்னக் குமிழிக்குள் என்ன கர்வம்?
சிதறி வெடிக்கின்றோம் தாய் மண்ணை.

மண்ணின் குழந்தைகள் நாம் உணர்வோம்.
விண்ணின் குழந்தைகள் நாம் புரிவோம்.

மண்ணை மட்டுமா பிரித்தோம் நாம்.
எண்ணத்தைப் பிரித்தோம். இம் மண்ணின்
குழந்தைகள் நாம் என்பதை மறந்தோம்.
குரோதம் மிகுந்து விரோதம் வளர்க்கின்றோம்.

மண்ணின் குழந்தைகள் நாம் உணர்வோம்.
விண்ணின் குழந்தைகள் நாம் புரிவோம்.

மண்ணின் குழந்தைகள் நாம் உணர்வோம்.
விண்ணில் ஒருதுளி நம்மண் அறிவோம்.
எண்ணத்தை விரிவு செய்து வாழ்வோம்.
கண்ணெதிரில் பிறக்கும் அன்புலகம் அறிவுலகம்.

மண்ணின் குழந்தைகள் நாம் உணர்வோம்.
விண்ணின் குழந்தைகள் நாம் புரிவோம்.
மண்ணில் பிரிவினை வேண்டாம் அறிவோம்.
எண்ணத்தை விரிவு செய்தே  இருப்போம்.




















No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்