இசை & குரல் - AI SUNO | ஓவியம் - AI
காதலை அறிய வைத்தாய் கண்ணா
காதலை அறிய வைத்தாய் கண்ணா
ஆதலால் நெஞ்சில் நிறைந்தாய் கண்ணா
காதல் பிரதிபலன் எதிர்பார்ப்பது இல்லை.
காதல் சுயநலம் மிகுந்தது அல்ல.
உண்மைக் காதலைப் பற்றிக் கூறினேன்.
உணர்ச்சிக் காதல் பற்றி அல்ல.
காதலை அறிய வைத்தாய் கண்ணா
ஆதலால் நெஞ்சில் நிறைந்தாய் கண்ணா
காதலைப் போதித்த ஆசிரியன் நீயடா..
காதலை உன்னிடம் பயின்ற மாணவி
நானென்று கூறுவதில் பெருமிதமே எனக்கு.
ஏனென்றால் நீ அன்பெனும் பெருங்கடல்.
காதலை அறிய வைத்தாய் கண்ணா
ஆதலால் நெஞ்சில் நிறைந்தாய் கண்ணா
மானுடப் பிறப்பென்பது ஒருமுறை தானோ?
மீண்டும் மீண்டும் தொடருமோ நானறியேன்.
இப்பிறப்பு போதும் எனக்குக் கண்ணா
இதில் உன்வருகை அது[போதும் கண்ணா
காதலை அறிய வைத்தாய் கண்ணா
ஆதலால் நெஞ்சில் நிறைந்தாய் கண்ணா
என்னிடம் எதிர்பார்த்தது எல்லாம் கண்ணா
உன்னுடன் பகிர்வதற்குக் காதலை மட்டுமே,
உன்னிடம் நான் எதிர்பார்த்ததும் அதுதானே.
என்நெஞ்சில் நிறைந்தவனே என்னருமைக் கண்ணா
காதலை அறிய வைத்தாய் கண்ணா
ஆதலால் நெஞ்சில் நிறைந்தாய் கண்ணா
No comments:
Post a Comment