Friday, October 4, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - அன்பே வாழ்வின் அடிப்படை!



இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

அன்பு என்பது வாழ்க்கையின் அடிப்படை.
அன்புடன் வாழுவோம். இன்பம் அடைவோம்.

உயிர்கள் இருப்பது அன்பின் வலிமையால்.
உணர்ந்து கொண்டால் இன்பமே இருப்பில்.
உணராது போனால் விளைவதே மோதல்.
உலகில் தினமும் பார்க்கின்றோம் இதனைத்தான்.

அன்பு என்பது வாழ்க்கையின் அடிப்படை.
அன்புடன் வாழுவோம். இன்பம் அடைவோம்.உழைத்து, உண்டு , உறங்கி அன்பில்
திளைத்தால் அதுபோல் இன்பம் உண்டோ/
உணராது இருக்கின்றோம் ஏனோ புரியவில்லை.
உணர்ந்து வாழ்வோம் உலகை வெல்வோம்.

அன்பு என்பது வாழ்க்கையின் அடிப்படை.
அன்புடன் வாழுவோம். இன்பம் அடைவோம்.

கணியன் பூங்குன்றன் அன்று சொன்னான்
யாதும் ஊரே. யாவரும் கேளிர்.
ஆயிரம் ஆண்டுகள்  கடந்து போயின.
ஆயினும் இன்னும் உணராது வாழ்கின்றோம்.

அன்பு என்பது வாழ்க்கையின் அடிப்படை.
அன்புடன் வாழுவோம். இன்பம் அடைவோம்.

அன்பு கொண்டே அகிலத்தில் வாழுவோம்.
அன்பே வாழ்வின் அச்சாணி உணருவோம்.
அன்புக் குளத்தில் மூழ்கி எழுவோம்.
அன்புக் கடலில் பயணம் செய்வோம்.

அன்பு என்பது வாழ்க்கையின் அடிப்படை.
அன்புடன் வாழுவோம். இன்பம் அடைவோம்.




No comments:

கவிதை: நடிப்புச் சுதேசிகளும், ஆனை பார்த்த அந்தகர்களும்! - வ.ந.கிரிதரன் -

* ஓவியம் - AI இலக்கியம், அரசியல், விமர்சனம்.. ஆட்டம் சகிக்க முடியவில்லை. விளக்கமற்ற விமர்சனம் இவர்களுக்குத் 'தண்ணீர் பட்ட பாடு'. விள...

பிரபலமான பதிவுகள்