| அமில்கார் கப்ரால் ( Amilcar Cabral) |
நேற்று 'நந்தலாலா' ஜோதிகுமார் அலைபேசியில் அழைத்து அண்மையில் எழுதிய எம்போராட்டத்தின் தோல்விக்கான காரணங்கள் பற்றிய நந்திவர்மப்பல்லவனின் கட்டுரை பற்றிக் குறிப்பிட்டு அமைப்புகள் மக்கள் மத்தியிலிருந்து அந்நியப்பட்டுப்போனமை முக்கிய காரணங்களிலொன்று. அது பற்றியும் அதிகம் கவனம் செலுத்த வேண்டுமென்றார். இது பற்றி எம்மவர் யாரும் இதுவரையில் போதிய கவனம் செலுத்தவில்லையென்றார். அது மிகவும் முக்கியமான கூற்று. நம் மத்தியில் யாராவது இவ்விடயம் பற்றி, அதாவது போராட்டத்தில் மக்களின் அந்நியப்படுத்தல் பற்றி, அல்லது மக்களிடமிருந்து அமைப்புகளின் அந்நியப்படுத்தல் பற்றி அதிகமாக எழுதியதாக அல்லது கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை.
மக்களுக்காகவே எமது போராட்டம் என்று சூளுரைத்து ஆயுதம் தூக்கிய அமைப்புகள் அனைத்துமே , பின்னர் அவற்றின் செயற்பாடுகள் காரணமாக மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போயின. மக்களைப் போராட்டத்த்திலிருந்து அந்நியப்படுத்தும் வகையிலேயே செயற்பட்டன. ஏன்?