Saturday, November 15, 2025

லீ வான் கிளிவ் - 'கெட்டவனில் சிறந்த கெட்டவன்'


'கெட்டவனில் சிறந்த கெட்டவன்' (Best of the Bad) என்பது புகழ்பெற்ற ஹொலிவூட் நடிகர் லீ வான் கிளிவ்வின் ((Lee Van Cleef) கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ள வசனம். 'The Good, The Bad and The ugly' திரைப்படத்தில் ''The Bad' ஆக நடித்திருப்பார். மிகச்சிறந்த வில்லனாக அதன் மூலம் உருவெடுத்தார். பின்னர் பல 'வெஸ்டேர்ன்' திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கின்றார்.
 
இவரை எனக்கு அறிமுகப்படுத்திய திரையரங்குகள் யாழ் மனோஹரா & றீகல் ஆகியவையே.
 

 
([டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]

'ஜேம்ஸ் பாண்ட்' ஷோன் கானரி!


எத்தனையோ நடிகர்கள் 'ஜேம்ஸ் பாண்ட்' வேடத்தில் நடித்திருந்தாலும், அப்பாத்திரத்துக்கு உயிரூட்டிய நடிகர் , என்னைப் பொறுத்தவரையில், ஷோன் கானரிதான். இவரைத்தவிர வேறெவரையும் என்னால் அப்பாத்திரத்தில் நினைத்துப் பார்க்கவே முடியாது. இவரை எம் பதின்ம வயதுகளில் சீன கானரி என்றுதான் உச்சரிப்போம்.
 
இவரது பெயரைச் அப்பருவத்தில் சரியாக உச்சரித்த ஒருவன் 'குட்டி' (என் மாமா மகன்களில் ஒருவன்). சில வருடங்களுக்கு முன்பு கனடாவில் மறைந்து விட்டான். அப்போது எனக்கும் இவனுக்குமிடையில் சரியான உச்சரிப்பு யாருடையது என்று பெரிய சண்டையே எழுவதுண்டு. இறுதி வெற்றி அவனுக்குத்தான். நண்பரும் ,எழுத்தாளருமான இந்து லிங்கேஸுடனான என் நட்புக்குக் காரணம் இவனே. இவனது நெருங்கிய நண்பர்களில் லிங்கேஸும் ஒருவர்.
 
'ஜேம்ஸ் பாண்ட்' ஷோன் கானரியை நினைக்கும் தருணங்களிலெல்லாம் அவனது நினைப்பும் தலை காட்டும். 
 
இவரை எனக்கு அறிமுகப்படுத்திய திரையரங்குகள்: யாழ் றீகல், யார் ராஜா (இங்குதான் முதல் Bond படமான Dr No திரைப்படத்தை அதன் மறு வெளியீடொன்றில் பார்த்தேன்), வவுனியா ஶ்ரீ முருகன் (இங்குதான் You Only Live Twice' பார்த்தேன்)>
 
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]

Thursday, November 13, 2025

எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'இயற்கையைப் பேணுவோம்' பாடல்!


இசை &  குரல் - Suno AI   ஓவியம் - chatGPT AI

https://www.youtube.com/watch?v=--s_We6LiGg

இந்தியத் திரை வானின் 'வானம்பாடி' பி.சுசீலாவுக்கு வயது 90!


இன்று பாடகி பி.சுசீலா அவர்களின் தொண்ணூறாவது பிறந்தநாள். அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

எம் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்தவர்கள் தமிழ்த்திரையுலகின் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்கள் & இயக்குநர்கள்.

இவர்கள் அனைவரும் எம் வாழ்வின் இன்ப துன்பங்களில் துணையாக எம் வாழ்நாள் முழுவதும் வருபவர்கள். இனிய தருணங்களில் உற்சாகம் , இன்பம் தருபவர்கள் இவர்கள். துயர் நிறைந்த தருணங்களில் ஆறுதல் தருபவர்கள் இவர்கள்.

இவர்களை நான் எப்போதும் போற்றுவேன். இலக்கிய கர்த்தாக்கள் எவ்விதம் எம் வாழ்வுக்கு முக்கியமோ அவ்விதமே இக்கலைஞர்களும்.

இன்னும் நீண்ட காலம் நிறைவான வாழ்வுடன் அம்மையாரின் வாழ்வு தொடரட்டும். வாழ்த்துகள்.

இத்தருணத்தில் எனக்குப் பிடித்த இவரது பாடல்களிலொன்று இந்தப்பாடல். மெல்லிசை மன்னர்களின் இசையில், கவிஞர் வாலியின் எழுத்தில், ஜெயலலிதா, எம்ஜிஆர், துணை நடிகர்களின் நடிப்பில் ஒலிக்கும் பாடல். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படப்பாடல்.

https://www.youtube.com/watch?v=HTvrtkkYaDg

[Digiat Art (Google Nano Banana) help: VNG ]
See less

கவிஞர் தாமரையின் பாடல்களும், வட மொழிச் சொல்லும் பற்றி...


[டிஜிட்டல் ஓவியத்  தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]


கவிஞர் தாமரையைப் பற்றிக் குறிப்பிடுகையில் வேற்று மொழியல்லாத தமிழ்ச் சொற்களை மட்டும் கவிதை எழுதுபவர் என்று கூறப்பட்டிருந்ததை அண்மையில் இணையத்தில் வாசித்தேன். இது உண்மையா? 'வாரணம் ஆயிரம்' படத்தில் வரும் அவரது புகழ்பெற்ற பாடல் 'நெஞ்சுக்குள் பூத்திடும் மாம்ழை' முழு வரிகளைக் கீழே தந்துள்ளேன். இதில் வரும் ஓம், ஷாந்தி, ஜீவன் இவையெல்லாம் வட் சொற்கள்.  என்னைபொறுத்தவரையில் நான் தனித்தமிழ் வெறியன்னலன். மொழியும் பரிணாம வளர்ச்சியில் பிறமொழிச் சொற்களை உள்வாங்கி வளமடைகின்றது என்று நம்புபவன்.  இந்நிலையில் தாமரை தமிழ்ச் சொற்களை, வட சொற்களைக் கலந்து பாடல்கல்  எழுதுவதை ஏற்பதில் எனக்குத் தயக்கமேதுமில்லை.  என் அபிமானக் கவிஞர் மகாகவி பாரதியார் தாராளமாகவே வடமொழிச் சொற்களைப் பாவித்திருக்கின்றார். 

பாடலைக் கேட்டு மகிழ் - https://www.youtube.com/watch?v=630HSN45fKk

காலத்தால் அழியாத கானம்: 'புதிய வானம்! புதிய பூமி'



'அன்பே வா' திரைப்படத்தில், கவிஞர் வாலியின் வரிகள் , டி,எம்.எஸ் குரலில் , மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையில், எம்ஜிஆரின் நடிப்பில் காலத்தால் அழியாத கானமாக நிலைத்து நின்று விட்டது.
 
இவ்விதமான எம்ஜிஆரின் கருத்தாழம் மிக்க, வாழ்க்கைக்கு வழி காட்டும் , புத்துணர்ச்சி ஊட்டும் பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத பாடல்களாகத் தமிழ் இலக்கியத்தில் நிலைத்து நிற்கப்போகின்றன.
 
எந்த ஒரு நடிகரும் செய்யாத வேலையினை எம்ஜிஆர் செய்திருக்கின்றார். அவரது படங்கள் ஒவ்வொன்றிலும் இத்தகைய கருத்து மிக்க, இனிய, புத்துணர்ச்சி தரும் பாடலொன்று இருக்கும். வாழ்க்கைக்கு வழி காட்டும் , பயனுள்ள, ஆரோக்கியமான கருத்துகளைக் கூறும் பாடல்கள் இவை. எம்ஜிஆரின் சமுதாயப் பிரக்ஞையை வெளிப்படுத்துபவை இவ்வகைப் பாடல்கள்.

Wednesday, November 12, 2025

புகலிடச்சிறுகதை: ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன்' - வ.ந.கிரிதரன் -


['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG] 
  
தற்செயலாகத் தொராண்டோவிலுள்ள நூலகக் கிளையொன்றில் தான் அவனைச் சந்தித்திருந்தேன். அவன் ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த பாதுகாவல் அதிகாரி. அடிக்கடி நூலகத்தில் கண்காணிப்புடன் வலம் வந்து கொண்டிருந்தான். எனது மூத்த மகள் நூலகத்தின் சிறுவர் பிரிவில் நடைபெற்றுக் கொண்டிருந்த கதை கேட்கும் நேரத்தில் பங்கு கொள்வதற்காக வந்திருந்தாள். அதன் பொருட்டு நூலகத்திற்கு நானும் வந்திருந்தேன். குறைந்தது ஒரு மணித்தியாலமாவது செல்லக் கூடிய நிகழ்ச்சி. அந்த நேர இடைவெளியைப் பயனுள்ளதாகக் கழிப்பதற்காக நு¡லொன்றை எடுத்து அங்கு ஒதுக்குப் புறமாகவிருந்த நாற்காலியொன்றில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு முறை என் அருகாக அவன் தன் கடமையினை செய்வதற்காக நடை பயின்றபொழுது எனக்குச் சிறிது கொட்டாவி வந்தது. அவனுக்கும் பெரியதொரு கொட்டாவி வந்தது. விட்டான்.

" என்ன தூக்கக் கலக்கமா " என்றேன்.

" இல்லை மனிதா! சரியான களைப்பு. வேலைப் பளு" என்று கூறிச் சென்றான்.

சிறிது நேரத்தில் மீண்டுமொருமுறை அவன் வந்த பொழுது அவனுக்கும் எனக்குமிடையில் சிறிது நெருக்கம் ஏற்பட்டிருந்தது.

புத்தாக்கம் செய்வோம்! பாதிப்புகளைக் குறைப்போம்! இணைந்து வாழ்வோம்!

  காலத்துக்குக் காலம் புதுப் புதுத்  தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும் தருணங்களில் சமூக, ஊடகங்களில் புதிய சூழலியற் போராளிகள் உருவாகிவிடுகின்றனர...