Monday, March 16, 2026
பாரதியாரின் 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!' இசை & குரல்: SUNO AI ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
பாரதியாரின் 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!' பாடலை செயற்கை நுண்ணறிவு மூலம் இசையமைத்துப் பாட வைத்திருக்கின்றேன்.
பாரதியாரின் 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!'
இசை & குரல்: SUNO AI ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
ஆக்கியவர்; வ.ந.கிரிதரன்
நின்னைச் சரணடைந்தேன்,
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்
(முகநூற் பதிவு) ஜெர்மன் சமூகவியலாளரும் தத்துவஞானியுமான ஜூர்கன் ஹேபர்மாஸ் (Jürgen Habermas) முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவர்!
அண்மையில் மறைந்த ஜெர்மன் சமூகவியலாளரும் தத்துவஞானியுமான ஜூர்கன் ஹேபர்மாஸ் முக்கியமான நவகாலச் சிந்தனையாளர்களில் ஒருவர். இவரைப் பற்றி எழுத்தாளர் ப.வி.ஶ்ரீரங்கன் தனது முகநூற் பக்கத்தில் சுருக்கமான குறிப்பொன்றினை எழுதியிருக்கின்றார். அது பதிவுகள் இணைய இதழிலும் மீள் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. "தகவல்தொடர்புச் செயல்பாட்டுக் கோட்பாடு(Theorie des kommunikativen Hand)” அவரது முதன்மையான பங்களிப்பாகக் கருதப்படுகின்றது. இவரை ஶ்ரீரங்கன் முதலாளிய அமைப்பை ஆரோக்கியமாக்க முனைந்த வைத்தியராகக் கருதுவார்.
முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரான இவரைப்பற்றி நாம் அறிந்துகொள்வதன் அவசியம் கருதி ஶ்ரீரங்கனின் முகநூற் பதிவினைக் கீழே தந்திருக்கின்றேன்.
Friday, March 13, 2026
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை முன்வைத்து 'கூகுள் நோட்புக் எல்எம்'மின் திறனாய்வு!
'கூகுள் நோட்புக் எல்எம்' (Google notebookLM) மூலம் மிகவும் பயனுள்ள கூகுள் நிறுவனத்தின் மென்பொருள்.
Wednesday, March 11, 2026
நினைவில் நிற்கும் கானம் : "என்ன என்ன வார்த்தைகளோ? சின்ன விழிப்பார்வையிலே. சொல்லி சொல்லி முடித்துவிட்டேன். சொன்ன கதை புரியவில்லை."
'வெண்ணிற ஆடை' ஜெயலலிதாவின் முதலாவது திரைப்படம் என்பதை நம்பவே முடியவில்லை. படம் முழுவதுமே ஜெயலலிதாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் ஜெயலலிதாவுக்குத் திரைப்படம் முழுவதும் தன் நடிப்புத்திறமையினை, நடனத்திறமையினை நன்கு வெளிப்படுத்தச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. படத்தில் அவரது நடிப்பாற்றலைக் கண்டு எனக்குப் பிரமிப்பே ஏற்பட்டது.
காலத்தால் அழியாத கானம்: "நீ என்பது என்ன? நான் என்பதென்ன?"
'வெண்னிற ஆடை' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'என்ன என்ன வார்த்தைகளோ' பாடற் காணொளியை முன்பு பகிர்ந்திருந்தேன். அதற்குக் கருத்துத் தெரிவித்திருந்த முகநூல் நண்பர் அருள்குமார் எஸ்பி (Arul Kumar SP) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: " வெண்ணிற ஆடை படத்தில் வரும் முதல் பாடல் தான் ஜெயலலிதா அவர்கள் திரையில் முதன்முதலில் தோன்றி நடித்த காட்சி. கேட்கும் எவரையும் கலங்கடிக்கச் செய்யும் அந்த பாடலின் முதல் அடி : " நான் என்பதென்ன . நீ என்பதென்ன.. ஒரு நினைவு என்பதென்ன ...? நிலையில்லாத உலக மேடையில் நாமும் வந்ததென்ன ...? - மன சிதைவு என்றால் என்ன என்பதை எளிமையாகச் சொன்ன வரிகள் !! நன்றி தோழர் ."
அவர் கூறியது உண்மைதான் . இதுதான் அந்தப் பாடல் . அவர் சுட்டிக்காட்டியதால் மீண்டும் பார்த்தேன்.
Monday, March 2, 2026
வ.ந.கிரிதரனின் முகநூல் உரைகள்! (1)
கலை, இலக்கியக்கோட்பாடுகள் பற்றிய என் எண்ணங்களை அவ்வப்போது காணொளிகளாகத் தருவதற்கு முடிவு செய்திருக்கின்றேன். அவ்வகையில் முகநூலில் பகிர்ந்துள்ள காணொளிகள் இவை. இவை பற்றிய உங்கள் கருத்துகள் எவையாயினும் அறியத் தாருங்கள். இவை பற்றிய ஆரோக்கியமான தர்க்கங்களுக்கு அவை வழி வகுக்கும். காணொளிகள் என் 'ஐபோன்' மூலம் எடுக்கப்பட்டவை.
நவீனம், நவீனத்துவம் பற்றி... https://www.facebook.com/reel/1254157106063345
Thursday, February 26, 2026
அஞ்சலி: பொதுவுடமைக் கட்சியின் தலைவர் இரா. நல்லகண்ணு மறைந்தார்!
இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் முன்னாள் தலைவரும், கட்சியின் முன்னாள் செயலாளருமான இரா. நல்லகண்ணு அவர்கள் பெப்ருவரி 25, 2026 அன்று, தனது நூறாவது வயதில் மறைந்தார். தனது பதினெட்டாவது வயதிலிரிந்து கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டவர். இந்தியாவில் ஆங்கிலேயருக்கெதிராகப் போராடிய சுதந்திர வீரர். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டபோது நெல்லை சதி வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுச் சிறை வாசம் அனுபவித்தவர். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீங்கியபோது விடுதலை செய்யப்பட்டார். விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராகவும் பணியாற்றியவர்.
பல விடயங்களில் இவர் உதாரண மனிதராக விளங்கினார். இவரது எண்பதாவது பிறந்ததினத்தின் போது கட்சி இவருக்கு ஒரு கோடி ரூபா நிதி வசூலித்துக் கொடுத்தது. அதனை இவர் கட்சிக்கே கொடுத்து விட்டார். தமிழக அரசு அம்பேத்கார் விருதாக ஒரு இலட்சம் ரூபா வழங்கியபோது அதில் பாதியைக் கட்சிக்கும், மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் வழங்கினார். மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் ஜீவா விருது, தமிழக அரசின் அம்பேத்கார் விருது உட்படப் பல விருதுகளையும் பெற்றிருக்கின்றார்.
கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு! (தகவல்: ஓராயம்)
கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மே 24...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...


