Monday, May 20, 2019

(பதிவுகள்.காம்) கனடாத் தமிழ் இலக்கியமும் 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையும்! - வ.ந.கிரிதரன் -



கனடாத்தமிழ் இலக்கிய வரலாற்றில் 'புரட்சிப்பாதை' சஞ்சிகைக்குமோரிடமுண்டு.  இதுவொரு கையெழுத்துச் சஞ்சிகை. 'அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்தெறிவோம்' என்னும் தாரக மந்திரத்துடன் வெளியான சஞ்சிகை.  'இப்பத்திரிகை வட  அமெரிக்கா வாழ் தமீழீழ மக்கள் விடுதலைக்கழக ஆதரவாளர்களினால் வெளியிடப்பட்டது' என்னும் குறிப்புடன் வெளியானாலும், இதன் அமைப்பின்படி இதனையொரு சஞ்சிகையாகவே கருதலாம் (செய்திக்கடிதமாகவும் கருதலாம். ஆனால் நாவல், கவிதை, கட்டுரை எனப்பல ஆக்கங்கள் வெளியானதால் சஞ்சிகையென்று கருதுவதே பொருத்தமானதென்பதென் கருத்து.). இதன் கனடாத் தொடர்புகளுக்கான முகவரி:  C.P.842, POST OFFICE - AHUNSTIC, MONTREAL, QUEBEC H3L 3P4 என்றும் குறிபிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் பதினைந்தாம் திகதி வெளியான இச்சஞ்சிகை  15.09.1984 தொடக்கம் 15.06.1985 வரை பத்து இதழ்கள் வெளியாகியுள்ளன. வெளியான இதழ்கள் எவற்றிலும் ஆசிரியர் குழுவினரின் பெயர்கள் இல்லை.

இளைஞர்கள் பலரின் கூட்டு முயற்சி இது. எனக்குத் தெரிந்து சுந்தரி (கோண்டாவில்)  ,ஜெயந்தி (உரும்பிராய்), நவரஞ்சன், குணபாலன் போன்றோருடன் மேலும் சிலர் இணைந்து இச்சஞ்சிகையினை வெளியிட்டார்கள்.

இதுவோர் அரசிலமைப்பு சார்ந்து வெளியான கையெழுத்துச் சஞ்சிகையென்றாலும், கனடாவில் 1984இல் வெளியான தமிழ்ச் சஞ்சிகையென்றவகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இச்சஞ்சிகை கவிதை, கட்டுரை மற்றம் நாவல் & கேலிச்சித்திரம் போன்றவற்றையும் பிரசுரித்ததன் மூலம் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கும் வளம் சேர்த்துள்ளது. கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவலான எனது 'மண்ணின் குரல்' இச்சஞ்சிகையிலேயே தொடராகவும் ஏழு அத்தியாயங்கள்  வரை வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

'புரட்சிப்பாதை'யில் வெளியான ஆக்கங்களின் விபரங்கள் வருமாறு (என்னிடம் இதழ் மூன்றிலிருந்தே  இருப்பதால் அதிலிருந்தே ஆரம்பிக்கின்றேன்) :


புரட்சி 1. விழிப்பு 3 - 15.11.1984
1. முதலிரு பக்கங்களில் 'எமது மக்களே எம்மை புரட்சியாளராக்கினர்' - தோழர் உமாமகேசுவரன் என்னும் தலைப்புடன் அவரது பேட்டியின் ஒரு பகுதி இடம் பெற்றுள்ளது. 'தமிழன் குரல்' பத்திரிகையில் வெளியான பேட்டியின் மீள்பிரசுரம்.
2. பக்கங்கள் 3,4 &5: Enemies of the People'  என்னும் தலைப்பில் ஸ்வீடிஷ் பாராளுமன்றத்தில் திரு.எவெரெட் ஸ்வென்சன் (Everet Svennson) ஆற்றிய உரையின் பகுதியுடன் ஆரம்பமான ஆங்கிலக்கட்டுரை, 'ஸ்பார்க்ஸ்' பகுதி 1 1984 இலிருந்து மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. மகாவலித்திட்டம் பற்றிய, குறிப்பாகக் கொத்மலைத்திட்டம் பற்றிய தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் நடாத்திய ஆய்வினை விபரிக்கும் கட்டுரை. கட்டுரையில் சிங்கள மக்களும் ஒடுக்கப்படுகின்றார்கள். அவர்களை
ஒருபோதும் தமிழர்களின் எதிரிகளாகப் 'தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் கருதியதில்லை' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுரையின் இறுதியில் இலங்கையின் தென்பகுதி மக்களையும் ஜே.ஆரின் அரசினை அடக்குமுறைகளிலிருந்து விடுதலைபெறுவதற்கான போராட்டத்தில் இணையும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3. பக்கம் 6: ஆசிரியர் குழுவின் எண்ணத்தைப்பிரதிபலிக்கும் 'விடுதலைப்பாதையிலே..' தொடர் கட்டுரையின் பகுதி பிரசுரமாகியுள்ளது.
4. பக்கம் 7 அஞ்சலி : தோழர் பரமதேவா.  'மங்கை'யின் ஆசிரியருக்கான வாசகர் கடிதம்.  கவிஞர் பைரனின் 'தைரியத்தின் ஒரே நம்பிக்கை சொந்த நாட்டின் வாள்களில் வாழ்கிறது'  என்னும் கூற்றும் பிரசுரமாகியுள்ளது.
5. பக்கம் 8 இறுதிப்பக்கம்: கவிதை -'மரணத்துள் வாழும் மக்கள்' - கிரிதரன்
கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்னும் தலைப்பில் கேலிச்சித்திரம். வரைந்தவர் பெயர் குறிப்பிடப்படவில்லை.  சித்திரத்தைப்பார்க்கையில் கட்டடக்கலைஞர் பாலேந்திராவின் கேலிச்சித்திரம்போல் தெரிகின்றது.

புரட்சி 1 விழிப்பு 4 - 01-12-84

1. முதற்பக்கச் செய்தி (வீரகேசரி 15.11.1984): இயக்கங்களுக்கிடையே ஒருமைப்பாடு அவசியம். இஸ்ரேலிய  கூலிப்படையினர் இந்தியாவில் கைது என்னும் 'பெட்டிச் செய்தி'. 'தர்மச்சக்கரம்' என்னும் கேலிச்சித்திரம்.
2. கவிதை: தர்மத்தின் சங்கொலி அழைக்கின்றது! - ஆ.சிறிஸ்கந்தராஜா
3. கனெடிய  மக்களுக்கு விடுதலை பற்றிய பிரச்சாரம் - 23.09.1984 மொன்றியலைல் நடந்த மரதன் ஓட்டத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகமும் கலந்து கொண்டது பற்றிய செய்திக்கட்டுரை. அம் மரதனில் 10.000 கனடியர்கள் கலந்துகொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
4. பக்கம் 3-4: நாவல் - மண்ணின் குரல் அத்தியாயம் 1 - கிரிதரன்
5. பக்கம் 6-7: ஆசிரியர் குழுவின் 'விடுதலைப்பாதையிலே..' தொடர்.
6. பக்கம் 7: கவிதை - புல்லின் கதை இது -  கிரிதரன்
7. பக்கம் 7: கவிதை - புரட்சிப் பாதையிலே - செங்கோடன்
8. பக்கம் இறுதிப்பக்கம் - கேலிச்சித்திரம். பெட்டிச் செய்தி - "சர்வதேசத்தின் கவனம் எங்கள் பிரச்சினைக்குத் திரும்ப முயற்சி செய்யுங்கள். அதைத்தான் நாங்கள் விரும்புகின்றோம். அதற்கு நாங்கள் தகுதியானவர்கள்தாம். ஏனென்றால் நாங்கள் ஒடுக்கப்படும் ஒரு தேசத்தினர்" - தோழர் உமாமகேசுவரன். புகைப்படம் - அணுவாயுத உற்பத்தியை எதிர்த்துக் கனடியர்கள் நடாத்திய ஊர்வலத்தில் கலந்துகொண்ட தமிழீழ மக்கள் விடுதலைக்கழக ஆதரவாளர்களை சுலோக அட்டைகளுடன் செல்வதைக்காட்டும் காட்சி.


புரட்சி 1 விழிப்பு 5  15.12.1984
























1. பக்கம் 1 - கிறிஸ்து மீட்பரின் விடுதலைச் செய்தி. பெட்டிச் செய்தி: "இலட்சியங்கள் எப்போதும் மக்களின் தினசரி வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டிருக்க வேண்டும். ஒரு வர்க்கத்தின் சாதாரண பிரச்சினையோடு இணைந்திராத எந்த ஒரு மிக

உயர்ந்த குறிக்கோளும் செப்புக்காசின் மதிப்பைக்கூட பெறுவதில்லை" -லெனின்.
2. பக்கம் 2-3: விடுதலைப் போராட்ட வானில் விடிவெள்ளி _ தோழர் சுந்தரம் பற்றிய அஞ்சலிக் கட்டுரை.
3. பக்கம் 3-4 - விடுதலைப்பாதையிலே.. கட்டுரைத்தொடர். (நன்றி விடுதலைக்குரல் என்றுள்ளது).
4. பக்கம் 4 கவிதை: ஒரு காதலிக்கு - கிரிதரன்
5. பக்கம் 5-6: தொடர் நாவல் மண்ணின் குரல் (அத்தியாயம் 2)  - கிரிதரன்
6. பக்கம் 7 தமிழமுதுக் கேலிச்சித்திரம் மீள்பிரசுரமாகியுள்ளது. படுகொலைசெய்யப்பட்ட இளைஞர்களின் உடல்களைக்காட்டும் புகைப்படம் 'நீங்கள் இன்னும் பார்வையாளரா?' என்னும் கேள்வியுடன் பிரசுரமாகியுள்ளது.


புரட்சி 1 விழிப்பு 5 15.01.1985

























1. பக்கம் 1 செய்திக்கட்டுரை 'ஜெயவர்த்தனாவுக்கு இந்தியப்பிரதமர் கண்டனம். (மீள்பிரசுரம்)
2. பக்கம் 2 கவிதை - முன் ஆடி 1985 - ரவி அமிர்தன். கேலிச்சித்திரம் 'ஒற்றுமையே பலம்'
3. பக்கம் 3- 4: (குட்டிக்கதை) ஒரு துமுக்கியின் சுயசரிதம் - சிவா
4. பக்கம் 4: கவிதை அறிவு கொள்வோம் - ரவி அமிர்தன்
5. பக்கம் 5-7  அரச பயங்கரவாதம் 1984 (அரச படையினரால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் மாதாந்த அடிப்படையில் பிரசுரமாகியுள்ளது.)
6. பக்கம் 8,9 & 10: தொடர் நாவல் மண்ணின் குரல் (அத்தியாயம் 3) - கிரிதரன்
7. பக்கம் 11 தமிழீழ மக்கள் விடுதலைககழகம்  பற்றிய ஆங்கிலப்பத்திரிகைச் செய்திகள் மீள் பிரசுரம்.
4. பக்கம் 12  இறுதிப்பக்கம் - பத்திரிகைச் செய்திகள்  மீள்பிரசுரம்


புரட்சி 1 விழிப்பு 7 15.2.1985
























1. பக்கம் 1 செய்திகள் (மீள்பிரசுரங்கள்): இன்றைய நிலையில் யாழ்ப்பாணம், முன்று இலட்சம் மீனவர்கள் பட்டினிப்போராட்டம்
2. பக்கம் 2: ஆசிரியத்தலையங்கம் - எங்கள் குரல்
3. பக்கம் 3 கட்டுரை: பாரதி கண்ட சமுதாயமும் , தமிழீழமும் - கிரிதரன்
4. பக்கம் 4: அஞ்சலி தோழர் கிருஷ்ணகுமார்
5. பக்கம் 5 -7 தொடர்நாவல் - மண்ணின் குரல் (அத்தியாயம் 4) - கிரிதரன்
6.  பக்கம் 7 - கவிதை - கொலுவினில் வைப்போம் - ரவி அமிர்தன்
7. பக்கம் 7 & 8: கவிதை மண்ணின் மைந்தர்கள் - கிரிதரன்
8. பக்கம் 8: கேலிச்சித்திரம் 'உண்மையில் நடந்த சம்பவம்'
9. இறுதிப்பக்கம் தமிழீழ மக்கள் விடுதலைகழகப்பயிற்சிக் காட்சிகள் மற்றும் ஆர்ப்பாட்டக்காட்சிகள்.


புரட்சி 1 விழிப்பு 8 15- 3/4 -1985

























1. பக்கம் 1 'பத்திரிகைச் செய்தி மீள்பிரசுரம் - அதுலத் முதலியை அலற வைக்கும் தளபதி முகுந்தனின் போர்ப்பிரகடனம்
2. பக்கம் 2 & 4: ஆசிரியத் தலையங்கம் - எங்கள் குரல்
3. பக்கம் 3 & 7: கட்டுரை - விடுதலைப்போரில் பெண்களும், பெண்கள் விடுதலையும் பாரதியும் - கிரிதரன்
4. பக்கம் 5, 6 & 9: தொடர் நாவல் - மண்ணின் குரல் (அத்தியாயம் ஐந்து) -கிரிதரன்
5. பக்கம் 8 - கண்ணீர் சிந்தும் எமது சகோதரர்கள் (பத்திரிகைச் செய்தி மீள்பிரசுரம் - தமிழகத்தில் ஈழத்து அகதிகள் பற்றியது)
6. கவிதை: புதுமைப்பெண் - மைதிலி (நான் இப்புனைபெயரில் எழுதிய கவிதை).


புரட்சி 1 விழிப்பு 9 15.5.,1985



1. பக்கம் 1 & 5: மக்களைப்பாதுகாக்கும் பணியில் தமிழீழ மக்கள்  விடுதலைக்கழகம் (கட்டுரை)
2. பக்கம் 2 - ஆசிரியத்தலையங்கம் - எங்கள் குரல்
3. பக்கம் 3 & 4: 'கட்டுரை - இயக்கங்களும் முரண்பாடுகளும்' ('புதியபாதை'யிலிருந்து மீள்பிரசுரம்).
4. தமிழன் குரல் கேலிச்சித்திரம் மீள்பிரசுரம் - சர்வதேச பயங்கரவாதத்தின் நவீன கதாநாயகன்
5. பக்கம் 5 - கவிதை: கர்ச்சனை - ரவி அமிர்தன்
6. பக்கம் 6, 7 & 8: தொடர் நாவல்- மண்ணின் குரல் (அத்தியாயம் 6) - கிரிதரன்


புரட்சி 1 விழிப்பு 10 15.6.1985




1. பக்கம் 1 - பத்திரிகைச்செய்தி மீள்பிரசுரம் - 'தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தைத் தொடர்ந்து ஏனைய ஈழவிடுதலை அமைப்புகளும் சிங்களர் படுகொலைக்குக் கண்டனம். நான்கு ஈழ விடுதலை அமைப்புகளின் கூட்டறிக்கை.

அனுராதபுரப்படுகொலையைக் கண்டித்து வெளியான அறிக்கை.
2. பக்கம் 2- ஆசிரியர் குரல் - எங்கள் குரல்
3. பக்கம் 3 & 4: தொடர் நாவல் - மண்ணின் குரல் (அத்தியாயம் 7) - கிரிதரன்
4. பக்கம் 5: கவிதை - எழுபதில் ஓர் இளவல் - ரவி அமிர்தன் (உரும்பிராய் சிவகுமார் பற்றிய அஞ்சலிக் கவிதை)
5. பக்கம் 6. கவிதை -அவனொரு மறவனே - கோமகன் (சிவகுமார் பற்றிய அஞ்சலிக்கவிதை)

நன்றி: https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5136:2019-05-20-04-28-05&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54

ngiri2704@rogers.com

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்