Wednesday, November 26, 2025
'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்லதொரு வழிகாட்டி
'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்லதொரு வழிகாட்டி
கனடாவில் வெற்றிகரமான பயணத்தை கனவு காணும் சர்வதேச மாணவரா நீங்கள், சரியான கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது முதல் உங்கள் தொழில் வாழ்க்கையைத் தொடங்குவது வரை பயனுள்ள வழிகாட்டியாகத் திகழ்கிறது 'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'.
20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள , அனுபவமிக்க கனடிய குடிவரவு ஆலோசகர்(RCIC) ஒருவரால் எழுதப்பட்ட இந்த நடைமுறை வழிகாட்டி, கனடாவிற்கான உங்கள் பாதையின் ஒவ்வொரு முக்கிய படிநிலையிலும் உங்களுக்கு வழிகாட்டுகிறது. மாணவர் அனுமதி முதல் நிரந்தர வதிவிட விருப்பங்கள் வரை முழு விசா மற்றும் குடிவரவு செயல்முறை குறித்த படிப்படியான வழிகாட்டுதல் எனப் பல விடயங்களை உள்ளடக்கிய நூல்.
வீடு கண்டுபிடிப்பது , நிதியைப் நிர்வகிப்பது, தொழில் வாழ்க்கையைத் தொடங்குதல், பட்டப்படிப்புக்குப் பிறகு கனடாவில் இன்டர்ன்ஷிப்களைப் பெறுதல், வேலைகளைக் கண்டுபிடிப்பது மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்குவது குறித்த நிபுணர் ஆலோசனை எனப் பயனுள்ள குறிப்புகளால் நிறைந்துள்ள நூலிது. கனடாவுக்குக் குடிபுக விரும்பும் எவருக்கும் பயன் மிக்க தகவல்களை, அறிவுரைகளக் கொண்ட நூல்.
இந்நூலை வாங்குவதற்கான இணைப்பு - https://amzn.to/4pBxaFn
[Digital painting technology, Google Nano Banana, Assistance: VNG] | * Disclosure: As an Amazon Associate, I earn from qualifying purchases
Tuesday, November 25, 2025
இவர் யார் தெரியுமா?
இவர் யார் தெரியுமா? இவர்தான் இலங்கையின் பெண்கள் மற்றும் குழ்ந்தைகள் நலத்துறை அமைச்சர். இவர் தமிழ்ப்பெண். சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாத்தறைத் தேர்தல் தொகுதியில் 148,379 வாக்குகள் பெற்று கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நின்று பாராளுமன்ற உறுப்பினர் ஆனவர். எதற்கெடுத்தாலும் ஜேவிபி முன்பு இனவாதக் கட்சி. எப்படி மாறுவார்கள் என்று தேர்தல் காலங்களில் பிரச்சாரம் செய்பவர்கள் அப்போது இப்பெண்மணியையும் நினைத்துக்கொள்ளுங்கள்.
சிங்கள மக்கள் பெரும்பான்மையாக் வாழும், தெற்கு மாகாணத்திலுள்ள மாத்தறைப் பகுதியிலிருந்து, அதுவும் மகிந்த ராஜபக்சாவின் கோட்டையிலிருந்து தமிழ்பெண் ஒருவரைச் சிங்கள மக்கள் தம் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள் என்றால், அவரைப் பெண்கள் , குழந்தைகள் நலத்துறை அமைச்சராக தேசிய மக்கள் சக்தி ஆக்கியிருக்கின்றதென்றால், ஜேவிபி மட்டும் மாறவில்லை., சிங்கள மக்களும் மாறியிருக்கின்றார்கள். ஆனால் தோற்ற இனவாத அரசியல்வாதிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு இனவாதத்தைத் தூண்டி, மீண்டும் ஆட்சிக்கட்டிலேறத் துடிக்கின்றார்கள். இந்நிலை மீண்டும் வந்தால் நாட்டு மக்கள் அனைவருக்கும் எதிர்காலம் நன்றாகவிருக்கப்போவதில்லை.
சறுக்கலிலிருந்து தப்ப ஒரு வழி!
குளிர் காலம் தொடங்கி விட்டது. வெப்பநிலை பூச்சியம் சென்டி கிரேட்டுக்குக் கீழே குறையும் தருணங்களில் , தரையில் இருக்கும் 'ஸ்நோ'வுக்குக் கீழ் தரை 'ஐஸ்'ஸாக உறைந்து கிடக்கும். இத்தருணங்களில் சறுக்கி விழுந்து விடும் சாத்தியங்கள் அதிகம்.
இலங்கையில் இனவாதம் பற்றிய சிந்தனைகளும், செயற்கை நுண்ணறிவுடன் அது பற்றிய உரையாடலும்!
இலங்கை ஜனாதிபது அநுர குமார திசாநாயக்க அரசு இனவாதத்துக்கெதிராக் குரல் கொடுத்து வருகின்றது. பதவி பறிபோன சிங்கள அரசியல்வாதிகள் எப்படியாவது இழந்ததை மீளப்பெறுவதற்காக இனவாதத்தைக் கையிலெடுக்கின்றார்கள். அநுர அரசின் செல்வாக்கினால் பாதிப்புக்குள்ளாகிய தமிழ் அரசியல்வாதிகளும், ஜேவியின் கடந்த கால வரலாற்றைக் கூறி, இவர்களும் இனவாதிகள், நம்ப முடியாது என்று செயற்பட்டு வருகின்றார்கள். இவ்விரண்டு குழுவினரும் இப்படித்தான் செயற்படுவார்கள்.
உண்மையில் இவர்களைப் பொருட்படுத்தாமல் அநுர அரசு இனவாதத்துக்கு எதிராக உறுதியாக செயற்பட்டால், அதன் பலன்கள் வெளித்தெரிகையில் தம் முயற்சியில் தோல்வியுற்ற எதிர்கட்சி அரசியல்வாதிகளும் தம் பாதையை மாற்றும் சந்தர்ப்பம் உண்டு.
அடுத்தது உண்மையில் இனவாதம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்றால், அரசு இனவாதப் பெளத்த பிக்குகளையும் சிங்கள மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்ட வேண்டும். மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இவ்விதப் பிக்குகளை இலங்கையின் சட்டம் கையாளும் நிலையை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இதனைச் செய்வது இனவாதத்தை ஒழிப்பதற்கான உறுதியான படியாக அமையும். அவ்விதம் செய்யாவிட்டால் பெளத்த பிக்குகள் சிலரின் இனவாதத்துக்கு அரசு அடி பணிந்தால் ஒரு போதுமே இனவாதத்தை அரசால் நாட்டிலிலிருந்து ஒழிக்க முடியாது போய்விடும்.
ஒவ்வொரு தடவை இனவெறி பிடித்த பிக்குகள் செயற்படும் தருணங்களில் எல்லாம் சட்டம் தன் கடமையைச் செய்யும் நிலை ஏற்பட வேண்டும். அத்தகைய சந்தர்ப்பங்களில் அரசு தென்னிலங்கை மக்களுக்கு அவர்கள் இனவாதிகள் என்பதை எடுத்துரைக்க வேண்டும்.மக்கள் புரிந்து கொள்வார்கள். அரசுக்கு ஆதரிப்பார்கள். இவ்விதம் செய்யாமல் அரசும் இனவாதப் பிக்குகளின் தந்திரத்துக்கு அடிபணிந்தால் ,இறுதியில் அதன் அரசியல் எதிர்காலமும் அபாயத்துக்கு உள்ளாகி விடும்.
Monday, November 24, 2025
புகழ்பெற்ற நர்த்தகி குமாரி கமலாவும் மறைந்தார். ஆழ்ந்த இரங்கல்.
பாவை விளக்'கில் குமாரி கமலா: 'நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ?':
நான் முதன் முதலாக குமாரி கமலாவை அறிந்துகொண்டது என் அப்பா, அம்மா மூலமே. இருவருக்கும் குமாரி கமலாவின் மீது மிகுந்த விருப்பமுண்டு. எப்பொழுதும் அவரின் நடனத்திறமையினைச் சிலாகித்து உரையாடுவார்கள். அவர் பிரபல கேலிச்சித்திரக்காரரான ஆர்.கே.லக்சுமணனை முதலில் திருமணம் செய்த விடயத்தையும், ஆர்.கே.எல் அவர்கள் அப்பாவுக்குப் பிடித்த பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான ஆர்.கே.நாராயணனின் சகோதரர் என்னும் விடயத்தையும் அப்பா மூலமே முதன் முதலில் அறிந்தேன். அப்பாவிடம் ஆர்.கே.என்னின் ஆங்கில நாவல்களின் சேகரிப்பிருந்தது. கூடவே ஆர்.கே.என்னை மேற்குலகுக்கு அறிமுகப்படுத்திய எழுத்தாளர் கிறகாம் கிறீனின் நாவற் சேகரிப்புமிருந்தது.
'நாம் இருவர்' திரைப்படத்தில் குமாரி கமலா பாரதியாரின் இந்திய சுதந்திர வேட்கைப்'பாடல்களுக்குச் சிறப்பாக ஆடியதையும் அவர்கள் நினைவு கூர்ந்திருக்கின்றார்கள். அவற்றிலொன்றான 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே' என்னும் பாடலையும் அம்மா பாடிக்காண்பித்திருக்கின்றார்.
நான் பார்த்த குமாரி கமலாவின் முதற் திரைப்படம் 'பாவை விளக்கு'. றீகலில் பழைய தமிழ்ப் படமாக எழுபதுகளில் வெளியானபோது , இரவு இரண்டாம் காட்சியாகப் பார்த்திருக்கின்றேன். பார்ப்பதற்கு முன்னரே அகிலனின் 'பாவை விளக்கு'நாவலை வாசித்திருந்ததால் நீண்ட நேரமாக ஓடிய அப்படத்தை விருப்புடன் பார்த்து இரசித்தேன். நாவலில் வரும் செங்கமலம் பாத்திரமாகத் திரையில் வருவார் குமாரி கமலா. அவருக்கு மிகவும் பொருத்தமான பாத்திரம்.
'பாவை விளக்கு' திரைப்படத்தில் வரும் 'நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ'என்னுமிப் பாடல் எனக்குப் பிடித்த பாடல்களிலொன்று. மிகவும் பிடித்த குமாரி கமலாவின் திரைப்பட ஆடற்காட்சியும் இதுதான். கவிஞர் அ.மருதகாசியின் வரிகளுக்கு இசையமைத்திருப்பவர் கே.வி.மகாதேவன்.
https://www.youtube.com/watch?v=gxTM8X0OprM
குமாரி கமலா பற்றிய சிறப்பான விவரணக் காணொளித்தொகுப்பு 'Fragrant Petals: Kamala's Natyam' (நறுமணப் பூவிதழ்கள்: கமலாவின் நாட்டியம்).
ஜேர்ஸி கொஸின்ஸ்கியின் 'நிறமூட்டப்பெற்ற பறவை' (The Painted Bird) அல்லது 'வண்ணம் பூசிய பறவை'.
ஜேர்ஸி கொஸின்ஸ்கியைத் தமிழ் இலக்கிய உலகுக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்திய எனது கட்டுரை சுபமங்களா இதழில் வெளியான Being There கட்டுரை. அது அவரது புகழ்பெற்ற நாவல். அளவில் சிறியதானாலும் காரம் மிக்க நாவல். திரைப்படமாகவும் வெளியானது. விம்ப ஆராதனை மிக்க தற்காலச்சமுதாயத்தை விமர்சிக்கும் நாவல்.
'படுபட்சி' நாவல் பற்றிய எழுத்தாளர் இளங்கோவின் முக்கிய விமர்சனக் குறிப்புகளும், அவரது இறுதியான புரிதலும் பற்றி...
எழுத்தாளர் இளங்கோ (டிசெதமிழன்) படுபட்சி நாவல் பற்றி முன் வைக்கும் முக்கியமான விமர்சனக் குறிப்புகள் இவை,. இவை அவரது முகநூற் பக்கத்தில் வெளியான பதிவிலிருந்து பெறப்பட்டவை.
புத்தாக்கம் செய்வோம்! பாதிப்புகளைக் குறைப்போம்! இணைந்து வாழ்வோம்!
காலத்துக்குக் காலம் புதுப் புதுத் தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும் தருணங்களில் சமூக, ஊடகங்களில் புதிய சூழலியற் போராளிகள் உருவாகிவிடுகின்றனர...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...


.png)
