இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி சமூக, அரசியல் ஆளுமைகளுடன்
உரையாடுவதிலுள்ள சிக்கல் என்னவென்றால் ஒவ்வொருவரும் தத்தமது அனுபவம், அறிவு
ஆகியவற்றின் அடிப்படையில் பதிலளிப்பர், அத்துடன் தம் நலன்களை மையமாக
வைத்தும் அவர்கள் பதில்கள் இருக்கும். அவரகளை ஆட்டி வைக்கும்
சூத்திரதாரிகளின் நலன்களையும் அவர்கள் பதில்கள பிரதிபலிக்கும். ஆனால்
செயற்கை நுண்ணறிவுடன் உரையாடும்போது இந்தப்பிரச்சனை இல்லை. செயற்கை
நுண்ணறிவின் பதில்கள் உணர்ச்சியின் அடிப்படையில் அமைந்தவை அல்ல. அறிவின்,
கிடைக்கப்பெறும் உண்மைகளின் அடிப்ப்டையில் மட்டுமே இருக்கும். இது மிகவும்
ஆரோக்கியமானதாக அமையும். இத்னால் பொதுப்பிரசை ஒருவரிடத்தில் இலங்கைத்
தமிழர்கள் பிர்ச்சனை பற்றி எழும் கேள்விகள் பல உள்ளன. இவற்றுக்கான செயற்கை
நுண்ணறிவின் பதில்கள் எவையாகவிருக்கும் என்பதை அறிவதன் நோக்கமே அதனுடன்
நடத்திய, நடத்தவிருக்கும் உரையாடல்களின் முக்கிய நோக்கம். செயுற்கை
நுண்ணறிவை நான் எந்திரன் என்று இங்கு குறிப்பிடுவேன். இதனை ஆணாதிக்க
மனப்பான்மை என்று கருத வேண்டாம். நான்: உன்னுடன் இலங்கைப் பிரச்னை பற்றிச் சிறிது உரையாடலாமா?
எந்திரன்: இலங்கை பிரச்சனை பற்றி பேசலாம். உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்? அல்லது குறிப்பிட்ட எந்த தகவலைப் பற்றி பேச வேண்டும்?
நான்: இலங்கை
சுதந்திரமடைந்ததன் பின்பு தமிழர்க்ள் சமஷ்டிக் கோரிக்கையை முன்
வைத்தார்கள். அது பின் தனிநாட்டுக்கோரிக்கையானது. யுத்தம் மூண்டது. யுத்தம்
2009இல் முடிவுக்கு வந்தது. இன்று போரில் மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய
தென்னிலங்கைத் தலைவர்களையெல்லாம் மக்கள் துரத்தி விட்டார்கள். இன்று அங்கு
புதியதொரு தலைமை, உழைக்கும் மக்கள் மத்தியினைப் பிரதிநிதிப்படுத்தும்
ஒருவர் தலைவராகவிருக்கும் சூழல் அமைந்துள்ளது. அது மட்டுமல்ல புதிய சூழல்
ஆட்சியிலிருக்கும் தேசிய மக்கள் சக்தி வடகிழக்கு மற்றும் மலையகப்
பகுதிகளில் எல்லாம் தம் ஆதிக்கத்தை விஸ்தரித்துள்ளது. இந்நிலையில் சமூக,
ஊடகங்கள், புரிந்துணர்வு எல்லாம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது,.
இந்நிலையில் தென்னிலங்கை, வடகிழக்குத் தமிழ் அரசியல்வாதிகள் இனவாதத்தைக்
கையிலெடுத்து ஆட்சியிலிருக்கும் அநுர அரசைக் கலைப்பதற்கு முயற்சி செய்வதாக
நீ உணர்கின்றாயா?
எந்திரன்: இலங்கையின்
சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசியல் வரலாறு, குறிப்பாக தமிழர்களின்
சமஷ்டிக் கோரிக்கை, தனிநாட்டுப் போராட்டங்கள், போர், அதன் முடிவு, அண்மைய
அரசியல் மாற்றங்கள், மற்றும் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி ஆகியவை
குறித்த உங்கள் பார்வை மிகவும் விரிவானது.