Tuesday, December 30, 2025
வ ந கிரிதரன் பாடல் காலவெளி நாம்!
வ ந கிரிதரன் பாடல் காலவெளி நாம்!
இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI
காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.
சொல்லவிந்து ஊர் துஞ்சும்
நள்யாமப் பொழுதுகளில்
உன் நினைவால் வாடுகின்றேன்.
எனையே நான் சாடுகின்றேன்.
முதற் பார்வையில் மயங்கினேன்.
அதற்காகவே இன்று வாழ்கின்றேன்.
எதற்காக இந்தச் சந்திப்பு? கண்ணா,
எதற்காக இந்தச் சிந்திப்பு?
காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.
பொழுதெல்லாம் உன் நினைப்பு.
எழுமே நெஞ்சினில் உன் வனப்பு.
வாழ்வதெல்லாம் உனக்காகத் தானே.
வீழ்வதும் உன்னுடன் தான்.
விரிவானில் தொலைதூரம் நீந்திடுவோம்.
எரிசுடர் வெளியெல்லாம் பூந்திடுவோம்.
நட்சத்திரத் தோழருடன் ஆடிடுவோம்.
நிலவுப் பெண்ணுடன் பாடிடுவோம்.
காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.
காலம் நீயென்றால் , வெளி நானன்றோ.
வெளி நீயென்றால், காலம் நானன்றோ.
காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.
Monday, December 29, 2025
அஞ்சலி: ஓவியர் ரமணி ஆற்றல் மிக்க ஓவியக் கலைஞர்! சிற்பியும் கூட! - வ.ந.கிரிதரன் -
![]() |
| ஓவியர் ரமணி (வி.சிவசுப்பிரமணியம்) |
ஓவியர் ரமணி மறைந்த செய்தியினைத் தாங்கி முகநூல் வெளியானது. ஆழ்ந்த இரங்கல்.
பல தசாப்தங்களாக இலங்கையில் வெளியான நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகளில் அதிகமாக ஓவியம் வரைந்தவர் இவராக இருக்கக்கூடும். அவ்வப்போது இவரது ஓவியங்கள் தென்பட்டுக்கொண்டேயிருக்கும், எழுத்தாளர் டானியலின் 'பஞ்சமர்' நாவலின் முதற் பதிப்புக்கு அட்டைப்படம் வரைந்தவர் இவரே. செங்கை ஆழியானின் 'போரே நீ போய்விடு' நாவலுக்கு அட்டைப்படமும், ஓவியங்களும் வரைந்தவர். பூபாலசிங்கம் வெளியீடாக வெளிவந்த அந்நாவலில் இவர் வரைந்த ஓவியங்கள் பலவற்றைக் காணலாம்.
Saturday, December 27, 2025
மறக்க முடியாத யாழ் வின்சர் திரையரங்கு! (என் முகநூற் பதிவு)
இத்திரையரங்கின் இன்னுமொரு முக்கியமான அம்சம் - முதல் வகுப்பிலிருந்து கலரி வரை தரை சாய்ந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. முதல் வகுப்பின் ஆரம்பத்தில் சிறிது உயரத்தில் பல்கணி அமைநதிருந்தது. பொதுவாகத் திரையரங்குகளில் பல்கணிக்கு மேல்தான் புரஜக்டர் அறை அமைந்திருக்கும். ஆனால் புது வின்சரில் பல்கணிக்கும், முதல் வகுப்புக்குமிடையில் புரஜக்டர் அறை அமைந்திருந்தது. யாழ் திரையரங்குகளில் உயர்ந்த, பரந்த, விசாலமான திரையரங்கு வின்சர்தான். அதுவே அதற்கொரு தனித்துவத்தைக் கொடுத்தது.
புகலிட இலக்கியத்தில் அதிகார அரசியலும் விளிம்புநிலை இருத்தலியலும்: வ.ந.கிரிதரனின் 'மான் ஹோல்' மற்றும் 'அமெரிக்கா' படைப்புகளை முன்வைத்து ஒரு பன்முக பகுப்பாய்வு! (2) - ஈழக்கவி -

பகுதி நான்கு:
'அமெரிக்கா' குறுநாவல்
வ.ந.கிரிதரனின்
'அமெரிக்கா' குறுநாவல் ஈழத்து புகலிட இலக்கியப் பரப்பில் ஒரு
மிகமுக்கியமான மைல்கல். இது வெறும் ஒரு தனிமனிதனின் பயணக்கதை மட்டுமல்ல;
80-களில் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த ஒரு தலைமுறையின் அரசியல், உளவியல்
மற்றும் சமூகப் போராட்டங்களின் ஆவணம்.
இந்தக் குறுநாவலை நவீன ஆய்வணுகு முறையில் பின்வரும் நிலைகளில் பகுப்பாய்வு செய்யலாம்:
1. நனவோடை உத்தி (Stream of Consciousness)
இக்குறுநாவலின்
மிகச்சிறந்த அம்சம் அதன் கதை சொல்லும் முறை. கதாநாயகன் இளங்கோ அமெரிக்க
விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்தச் சிறு காலப்பகுதியில்,
அவனது நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன.
கடந்த காலமும்
நிகழ்காலமும்: யாழ்ப்பாணத்து வீதிகளும், கொழும்பு சிறைச்சாலையும், அமெரிக்க
விமான நிலையத்தின் தனிமை அறையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து
வருகின்றன.
புகலிட இலக்கியத்தில் அதிகார அரசியலும் விளிம்புநிலை இருத்தலியலும்: வ.ந.கிரிதரனின் 'மான் ஹோல்' மற்றும் 'அமெரிக்கா' படைப்புகளை முன்வைத்து ஒரு பன்முகப் பகுப்பாய்வு!(1) - ஈழக்கவி -

ஆய்வுச் சுருக்கம் (Abstract)
இக்கட்டுரை,
ஈழத்துப் புகலிட எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் படைப்புளில் (மான் ஹோல்,
அமெரிக்கா) வெளிப்படும் அதிகார மையங்களுக்கும் விளிம்புநிலை
மனிதர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை பன்முகக் கோணங்களில் ஆராய்கிறது.
'மான் ஹோல்' சிறுகதையில் வரும் பூர்வகுடிச் சாமி மற்றும் 'அமெரிக்கா'
குறுநாவலில் வரும் அகதி (இளங்கோ) ஆகிய இரு கதாபாத்திரங்களின் ஊடாக, நவீன
அரசுகள் அடையாளங்களை எப்படிச் சிதைக்கின்றன என்பதையும், உலகமயமாக்கல்
சூழலில் 'அந்நியமாதல்' (Alienation) எவ்வாறு நிகழ்கிறது என்பதையும்
இக்கட்டுரை விவாதிக்கிறது.
பகுதி ஒன்று
ஈழத்து புகலிட இலக்கியம் (Eelam Diaspora Literature)
ஈழத்து
புகலிட இலக்கியம் (Eelam Diaspora Literature) என்பது உலக இலக்கியப்
பரப்பில் ஒரு தனித்துவமான மற்றும் காத்திரமான கிளை. இது வெறும் இடப்பெயர்வை
மட்டும் பேசாமல், போர், இழப்பு, இருத்தலியல் போராட்டம் மற்றும் புதிய
நிலப்பரப்பில் அடையாளத்தைத் தேடுதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. இதன்
தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த விரிவான பார்வையை பின்வரும் நிலைகளில்
காணலாம்:
1. தோற்றம்: வரலாற்றுப் பின்னணி (1970 - 1983)
ஈழத்து
புகலிட இலக்கியத்தின் விதைகள் 1970-களின் இறுதியில் தூவப்பட்டாலும், 1983
கறுப்பு ஜுலை வன்முறையே இதன் பெரும் வெடிப்பிற்கு காரணமாக அமைந்தது.
அரசியல் ஒடுக்குமுறை: இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்கள் மற்றும்
திட்டமிட்ட ஒடுக்குமுறைகளால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஐரோப்பா, கனடா
மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்தனர்.
ஆரம்பகாலப் படைப்புகள்: தொடக்கத்தில் இவை பெரும்பாலும் தாயகம் நோக்கிய
ஏக்கத்தையும், பிரிவாற்றாமையையும் வெளிப்படுத்தும் கவிதைகளாகவே இருந்தன.
"தொலைந்து போனவர்கள்", "அகதிகள்" என்ற விம்பங்களே அதிகம் பதிவாகின.
Thursday, December 25, 2025
வ.ந.கிரிதரன் பாடல்: நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா!
இசை & குரல்: AI SUNO | ஓவியம் - AI
நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா. என்
நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா.
அதிகாலை நேரம் கண்ணம்மா
ஆடி , அசைந்து வருவாய் கண்ணம்மா.
மெல்லிருளில் தண் நிலவாக
மெதுவாக நடந்து வருவாய் கண்ணம்மா.
மார்புற புத்தகம் தாங்கி
மண் நோக்கி நடந்து வருவாய் கண்ணம்மா.
மண்பார்த்த போதுமுன் முகத்தில்
முறுவல் ஓடிமறையும் கண்ணம்மா.
கவிதை: கற்பனைப் பெண்ணே! - வ.ந.கிரிதரன்
இசை & குரல்: AI SUNO | இக்கவிதை 5/3/1983 அன்று என் குறிப்பேட்டில் எழுதப்பட்ட கவிதை. -
கற்பனைப் பெண்ணே! எங்கேயடீ போயொளிந்து கொண்டாய்?
பாலஸ்தீனத்து மணல்மேடுகளிற்குள்ளா?
அங்கு நிச்சயம் போயிருக்க முடியாது.
அங்குனக்கென்ன வேலை.
கற்பனையில் கனவு கண்டிட அவர்களிற்கெங்கே நேரம்?
தர்மத்திற்கான புனிதப் போரொன்றினையங்கு நீ
கண்டிடலாம்.
சத்தியத்தின் ஆவேசத்தில் வீசிடுங் காற்றின்
வெம்மையினை அங்கு நீ ஸ்பரிசித்திடலாம்.
வ.ந.கிரிதரனின் பாடல்: வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு!
வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5 டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி சதுரங்கம் என்பதொரு விளையாட்டு. அதுபோல் வாழ்வ...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...

