Monday, April 20, 2026
அழியாத கோலம்: ராணிமுத்துப் பிரசுரமாக லக்ஷ்மியின் 'காஞ்சனையின் கனவு'!
அண்மையில் veryrare book முகநூற் பக்கத்தில் ராணிமுத்து பிரசுரத்தின் ஆரம்பக் காலகட்டத்தில் வெளியான எழுத்தாளர் லக்ஷ்மியின் 'காஞ்சனையின் கனவு' நாவலின் பக்கங்களைப் பகிர்ந்திருந்தார்.
என் நினைவு குருவி உடனடியாகவே அக்காலகட்டத்துக்கே பறந்து சென்று விட்டது. எவ்விதப் பொறுப்புகளுமற்று , பெற்றோரின் அரவணைப்பில் இன்பமாக வாழ்ந்த பால்யப்பருவத்து நினைவுகள் எப்பொழுதும் மகிழ்ச்சி மிக்கவை.
லக்ஷ்மி அம்மா, அப்பாவின் காலத்து எழுத்தாளர். மருத்துவர் . திரிபுரசுந்தரி என்பது அவர்தம் இயற்பெயர். அப்போது எழுத்திலிருந்து சிறிது ஒதுங்கி, தென்னாபிரிக்காவில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
கலாநிதி சிரினிமல் லக்துசிங்க (Dr. Sirinimal Lakdusinghe) மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -
என்னுடைய 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ' ஆய்வு நூல் எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்தவின் சிங்கள மொழிபெயர்ப்பில் ,. ஆகச பதிப்பக வெளியீடாக வெளியானது. அந்நூலுக்கு அணிந்துரை எழுதியவர் தொல்லியல் அறிஞரும், தேசிய அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குநருமான கலாநிதி சிரினிமல் லக்துசிங்க (Dr. Sirinimal Lakdusinghe) அவர்கள். என்னை அவருக்குத் தெரியாது. இருந்தாலும் என் நூலை வாசித்து அதற்கோர் அணிந்துரை எழுதியவர் அவர்.
Saturday, April 18, 2026
வ.ந.கிரிதரனின் பாடல்: இயற்கையைப் பேணுவோம். வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
வ.ந.கிரிதரனின் பாடல்: இயற்கையைப் பேணுவோம்.
வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.
விரிந்து கிடக்கிறது இயற்கை எங்கும்.
விரியும் அழகில் என்னை மறக்கின்றேன்.
விரிவான் என்னை எப்பொழுதும் மயக்கும்.
வியக்க வைக்கும் பசுமைமிகு வயல்கள்.
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.
என்னை மறப்பதில் புத்துணர்வு ஊறுமே.
தன்னை மறப்பதில் பெருகுவதும் இன்பமே.
இருப்பைக் களிப்புடன் தொடர வைக்கும்
இயற்கையை எப்பொழுதும் விரும்புவேன் நான்.
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.
Friday, April 17, 2026
வ.ந.கிரிதரனின் பாடல்: இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
வ.ந.கிரிதரனின் பாடல்: இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
என்று சொன்னான் மகாகவி பாரதி
நன்றாய் நாளைக் கழித்திட வேண்டி.
என்றும் இருப்பில் இன்பம் நாடி.
நன்று சொன்னான் என்று சொல்வேன்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
Thursday, April 16, 2026
வ.ந.கிரிதரனின் பாடல்: இரவு வானின் இரசிகன் நான்! வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5!
வ.ந.கிரிதரனின் பாடல்: இரவு வானின் இரசிகன் நான்!
வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி
இரவு வானை இரசிப்பதில் எனக்கு
இன்பமே என்றும் பேர் இன்பமே
விரிந்திருக்கும் இரவு வானின் சுடர்கள்
வியப்பைத் தரும். சிந்திக்க வைக்கும்.
புரியாத இருப்பு பற்றி எண்ணுவேன்.
விரியும் சிந்தனையில் மூழ்கிக் கிடப்பேன்.
இரவு வானை இரசிப்பதில் எனக்கு
இன்பமே என்றும் பேர் இன்பமே
தெரியும் தொலைவுகள் பிரமிக்க வைக்கும்.
எரி நட்சத்திரங்கள் கிளர்ச்சி தரும்.
தொலைவுகளில் எத்தனை எத்தனை உலகங்களோ?
மலைப்பைத் தரும் சிந்தனைகள் தொடரும்.
இரவு வானை இரசிப்பதில் எனக்கு
இன்பமே என்றும் பேர் இன்பமே
வ.ந.கிரிதரனின் பாடல் :வரலாறு! வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5!
வ.ந.கிரிதரனின் பாடல் :வரலாறு
வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி
வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு உற்பத்திச் சக்திகளின் வரலாறு.
உழைக்கும் தொழிலாளர் வரலாறே வரலாறு.
உலகின் வரலாறு இவர்தம் வரலாறே.
உழைப்பவர் வேர்வையும் , உழைப்பும் இங்கு
உண்மையான வரலாற்றை எழுதி வைக்கும்.
வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு உற்பத்திச் சக்திகளின் வரலாறு.
உண்மை வரலாற்றை அறிவது நம் கடமை.
மண்ணின் வரலாறு உழைப்பவரின் வரலாறே.
மன்னரின் வரலாறு வரலாறு அல்ல.
உணர்வோம். உள்ளத்தில் அவரைப் போற்றுவோம்.
வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு உற்பத்திச் சக்திகளின் வரலாறு.
Wednesday, April 15, 2026
பாடகரும் , தொழில் நுட்ப வளர்ச்சியும்!
தமிழ்த்திரைப்படங்களின் ஆரம்பக் காலகட்டத்தில் பாடும் திறமை மிக்கவர்களே கதாநாயகர்களாக, கதாநாயகிகளாக நடிக்க முடியும் நிலை இருந்தது. அதனை மாற்றியது பின்னணிக் குரல் கொடுத்துப் பாடும் 'டப்பிங்' தொழில் நுட்பம். இன்று செயற்கைத் தொழில் நுட்பத்தின் வருகையுடன் இந்நிலையும் மாறுதலடைந்து வருகின்றது. இன்று செயற்கை நுண்ணறிவால் இசையமைத்துப் பாடவும் முடிகின்றது. ஒருவரின் குரலில் பாடும் திறமையும் அதற்குள்ளது.
நடிகர்களின் குரல்களிலேயே பாடும் நிலையினை இலகுவாக்கி விட்டது செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம். மேலும் சிலரின் குரல் நன்றாகவிருக்கும். ஆனால் பாடும் திறமை இருக்காது. சிலருக்குப் பாடும் திறமை இருக்கும், ஆனால் அவர்கள்தம் குரல் சிறப்பாக இருக்காது. இந்நிலையில் சிறந்த குரல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பாவித்துப் பாடல்களைப் பாட வைக்கும் நிலை உருவாகியுள்ளது.
Subscribe to:
Comments (Atom)
கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு! (தகவல்: ஓராயம்)
கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மே 24...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...