தமிழில் மட்டுமல்ல மொழிகளில் இலக்கணம் மீறிய சொற்கள் பல வழக்கில் உள்ளன. வழக்கில் உள்ளதால் அவற்றை இலக்கணம் உள்வாங்கியுமுள்ளது. முன்றில் என்பது தவறானது. இல்முன் என்பதே சரி. அதற்காக அதைப்பாவிப்பதை யாரும் நிறுத்தவில்லை. சொல்லுக்குச் சொல் இலக்கணப்பிழையைக் கண்டு பிடிக்க முயற்சி செய்வது பயனைத்தராது.
Monday, August 24, 2026
ஶ்ரீ வேணுகோபாலனின் 'நீ நான் நிலா'
எழுத்தாளர் ஶ்ரீ வேணுகோபாலனின் சிறுகதைகள், குறுநாவல்கள் பல அறுபதுகளில் வெளியான தமிழ் வெகுசன இதழ்களில் , அவற்றின் தீபாவளி மலர்களில் வெளிவந்த காலத்தில் நான் என் பால்யப்பருவத்து வாசிப்பை ஆரம்பித்திருந்தேன்.அதனால் அவர் என் அபிமானத்துக்குரிய எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
அவரை நான் விரும்பி வாசிக்கத்தொடங்கியது அவரது படைப்புகள் தினமணிக்கதிரில் வெளியானபோதுதான். தினமணிக்கதிர் அப்போது இலவச இணைப்பாக புனைவை அல்லது அல்புனைவை வெளியிட்டு வந்தது. அதிலொன்றுதான் நடுவழியில் என்னும் ஶ்ரீ வேணுகோபாலனின் நெடுங்கதை. அது முதலில் கல்கியில் வெளியான விபரம் அண்மையில்தான் தெரிந்தது. அதன் பின் என்னைக் கவர்ந்த அவரது படைப்பு தினமணிக்கதிரில் தொடராக வெளியான 'நீ நான் நிலா' தொடர்கதை.
செயற்கை நுண்ணறிவு பற்றிய சமூக, அரசியற் செயற்பாட்டாளர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் கருத்துகள் பற்றி....
சமூக, அரசியற் செயற்பாட்டாளர் அசோக் யோகன் கண்ணமுத்து தன் முகநூற் பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு பற்றித்தெரிவித்த கருத்துகளில் பின்வருமாறும் குறிப்பிட்டிருந்தார்:
"தலைப்பு- கருத்துகளைத் திரட்ட AI-யைப் பயன்படுத்தலாம்..... வரலாறு- அரசியல் கட்டுரையாக இருந்தால், கிடைக்கும் தகவல்களை சரிபார்க்க பயன்படுத்தலாம்."//
இவ்விடயத்தில் என் எதிர்வினை இது :
இவ்விடயங்களில் AI பல தவறான தகவல்களைத் தானே உருவாக்கி உண்மைபோல் தரும். நீங்கள் கண்டு பிடித்தால் தான் தவறு செய்ததை ஒப்புக்கொள்ளும். கண்டு பிடிக்காவிட்டால் அத்தவறுகள் உண்மைகளாக இணையத்தில் தொடரும். இது பாரதூரமான விடயம். AI தரும் எல்லாத் தகவல்களையும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஏனைய சான்றுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் திருத்துவது அவசியம்.
Sunday, August 23, 2026
Friday, August 21, 2026
வ.ந.கிரிதரன் பாடல்: உறவு! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5.
தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு பற்றிய செய்தியாளர் சந்திப்பு! - வல்லிபுரம் சுகுந்தன் (செயலாளர்)< தொல்காப்பிய மன்றம் (கனடா) -
[தொல்காப்பிய மன்றம் (கனடா) செப்டம்பரில் கனடாவில் நடைபெறவுள்ள 'இரண்டாவது தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு 2026 சம்பந்தமாக, செய்தியாளர் சந்திப்பொன்றை ஆகஸ்ட் 24 அன்று நடத்தவுள்ளது. அது பற்றிய தகவலை மன்றத்தின் செயலாளர் வல்லிபுரம் சுகுந்தன் பகிர்ந்திருந்தார். அதனை நண்பர்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.]
இம் மாநாடு, ஆயிரம் பேர் ஒன்றுகூடும் நிகழ்வாகக் கனடாவில் இயங்கிவரும் 90க்கும் மேற்பட்ட தமிழ் மன்றங்கள், ஊர்ச் சங்கங்கள், கல்விக்கூடங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பெருமளவிலான நிதி மூலதனத்துடன் நடாத்தப்படவுள்ளது.
'காவியத்தலைவி ' காலத்தில் கரைந்தார்!
நடிகை செளகார் ஜானகியின் மறைவு பற்றிய தகவலை முகநூல் மூலம் அறிந்தேன். எனக்குப் பிடித்த நடிகைகளில் இவரும் ஒருவர். பாத்திரம் எதுவானாலும் அதனை ஏற்றுத் திறமையாகச் செய்வதில் வல்லவர். நடிகைகளில் துணிச்சலும், தன் திறமை மீதான செருக்கும், ஆங்கிலப் புலமையும் மிக்கவர்.
இவர் வாழ்க்கையே ஓர் எதிர்நீச்சல்தான். இளம் வயதில் கைக்குழந்தையுடன், மண முறிவு ஏற்பட்ட நிலையில், துணிச்சலுடன் வாழ்வை எதிர்நோக்கித் தன்னைத் தமிழ்த்திரையுலகில் நிலை நாட்டியவர். தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்தவர். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டாலும், தமிழ்த்திரையுலகில் மிகுந்த புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.
Subscribe to:
Posts (Atom)
செம்மீன் பற்றி எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தியின் கருத்தும் , என் எதிர்வின்
தகழி சிவசங்கரப் பிள்ளை எனக்குப் பிடித்த 10 நாவல்கள் பற்றியொரு முகநூற் பதிவு இட்டிருந்தேன். அதற்கு எதிர்வினையாற்றியிருந்த நண்பர் Tamil Journa...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...




