Sunday, September 14, 2025
'பதிவுகளி'ல் அன்று - எழுத்தாளர் திலகபாமாவின் (சிவகாசி) நிகழ்வுக் குறிப்புகள்!
இலக்கியம்! பதிவுகள் செப்டம்பர் 2004 இதழ் 57
செப்டம்பர் மாத சந்திப்பு! நவீன இலக்கியத்தின் சமீபத்திய போக்குகள்! சிறப்புரை: கவிஞர் பிரம்மராஜன்! பாரதி இலக்கியச் சங்கம் சிவகாசி
5.09.04 அன்று காலை 10.30 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. திலகபாமாவின் “நவீன இலக்கியத்தின் சமீபத்திய போக்குகள் பற்றிய” ஆரம்ப உரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. அவரது உரையில் “வாழ்வோடுதான் என் எழுத்து என வாழ்ந்து கொண்டிருந்தவள் நான். முதன் முறையாக2000த்தில் தான் எழுத்துலகை நின்று கவனிக்கத் துவங்குகின்றேன். இனிமேலும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்கின்ற சூழலில் தான் எழுத்து பற்றிய என் விமரிசனங்களை வெளியிடத் துவங்குகின்றேன். இந்த 4 வருட அவதானிப்பு நிறைய எனக்குள் கேள்விகள்: எழுப்பியிருக்கின்றது.. மனிதத்துள் நுழைய முடியாது தவிப்பவர்கள்,சமுகப் பொறுப்புணர்வு அற்றிருப்பவர்கள் எல்லாம் இலக்கியம் செய்ய வந்திருப்பதும், செய்து கொண்டிருப்பதும் தாங்கள் செய்து கொண்டிருந்தவற்றை பலரும் பின் பற்றும் படி செய்ய தொடர் பழக்க வழக்கமாக்கி அதை நிலை நிறுத்துவதும் தொடர்ந்து நடந்த படி இருப்பது இலக்கியத்துள் குறிப்பாக கவிதைகளில் ஒரு ஆரோக்கியமற்ற போக்கை உருவாக்கி வைத்திருக்கின்றது.
'பதிவுகளி'ல் அன்று - பண்டிதர் வி.சீ.கந்தையாவின் ”மட்டக்களப்புத் தமிழகம்” பாரிஸ் நகரில் எக்ஸில் வெளியீடாக.... - இன்பவல்லி -
[பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முர்சு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]
பதிவுகள் டிஸம்பர் 2003 இதழ் 48
பதிவுக'ளில் அன்று - பண்டிதர் வி.சீ.கந்தையாவின் ”மட்டக்களப்புத் தமிழகம்” பாரிஸ் நகரில் எக்ஸில் வெளியீடாக.... - இன்பவல்லி -
உடல் உழைப்பாளர்களையும், அடித்தட்டு மக்களையும் அதிகளவில் கொண்ட பாரிஸ் - 18 இல் கடந்த 16-11-2003 அன்று மட்டக்களப்பு தமிழகம் எனும் வரலாற்று நு¡ல் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழர்கள் வணிகரீதியாக மையங்கொண்டுள்ள லாசப்பல் (டுய ஊ¡யிநடடந) எனும் இடத்தில் அமைந்துள்ள தமிழர் வித்தியாலயத்தில் சுமார் மாலை 5மணி அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு இரவு 9 மணிவரை நீடித்தது. ”எக்ஸில்” வெளியீட்டகத்தின் மூன்றாவது வெளியீடாக அமைந்த மட்டக்களப்பு தமிழகம் ஜரோப்பாவில் இரண்டாவது தடவையாக வெளியிடப்பட்டுள்ளது. முதலாவது தடவையாக சுவிஸ் -சூரிச் நகரில் 12.10.2003 வெளியீட்டு வைக்கப்பட்டது. 1962 ம் ஆண்டு கிழக்கிலங்கை தோறும் ஆலயங்களிலும், பண்டைத்தமிழ்ப் புலவர்களிடத்திலும் அடங்கிக்கிடந்த கல்வெட்டுக்கள் தொகுக்கப்பட்டு விளக்கவுரையுடன் முதன்முதலில் ”மட்டக்களப்பு மான்மிகம்” அச்சுருவம் பெற்றது. இதையடுத்து வீ.சி.கந்தையா பண்டிதர் அவர்கள் 1949 இலிருந்து எழுதிவந்த ஆராய்ச் சிக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு முழுமையான ஒரு வரலாற்று நு¡லாக 1964 இல் ”மட்டக்களப்பு தமிழகம்” எனும் நு¡ல் வெளியிடப்பட்டது. தமிழர் குடியேற்றம், நாட்டுக்கூத்துகள், பாடுமீன், புலவர் பரம்பரை, பண்டைய வழிபாட்டுமுறைகள், மந்திரவழக்கு, அரசியல் வரலாறு என்று குறித்த சமூகத்தின் சகலவித அசைவியக்க அம்சங்களையும் ஒன்றுசேர்த்து தொகுக்கப்பட்ட இந்நு¡ல் எதிர்கால ஆய்வுகளுக்கு சிறந்தவொரு ஆதாரமையமாகும்.
நூல்வெளியீட்டுக்கு தலைமையேற்ற ஓவியரும், எழுத்தாளருமான அ.தேவதாசன் அவர்கள் 2500 வருடங்களுக்கு முன்பே அமைக்கப்பட்ட தீகவாபி குகையில் இருந்து மட்டக்களப்பின் புராதன வரலாறு தொடங்குவதை தொட்டுக்காட்டி தனது பேச்சை ஆரம்பித்தார். கிறிஸ்துவுக்கு முன் 545 ஆம் ஆண்டு விஐயன் வந்ததில் இருந்து துட்டகைமுணு ஈறாக நீண்டகால அரசியல் வரலாற்றை இக்குகை கொண்டிருப்பதனையும் பெளத்த, சமண, சைவ, இஸ்லாம், கிறிஸ்தவம் என்று பல்வித மதங்களையும் பின்பற்றிய சிற்றரசர்கள் தீகவாபியில் இருந்து மட்டக்களப்பு பிரதேசத்தை ஆட்சிசெலுத்தியிருப்பது குறித்து சிலாகித்தார்.
Saturday, September 13, 2025
என் அப்பாவுக்குப் பிடித்த நடிகர் ரஞ்சன்!
நடிகர் ரஞ்சனின் நினைவு தினம் செப்டம்பர் 12. என் தந்தையார் காலத்து 'சுப்பர் ஸ்டார்'கள் எம்.கே.டி பாகவதர் & பி.யூ.சின்னப்பா. எம் காலத்து எம்ஜிஆர் & சிவாஜி போல். எம் காலத்து இளம் சுப்பர் ஸ்டார்கள் ரஜனி & கமல் போல் அவர் காலத்து இளம் சுப்பர் ஸ்டார்கள் எம்.கே.ராதா & ரஞ்சன்.
ரஞ்சன் வாள் வீச்சு, குதிரையேற்றம் போன்றவற்றில் வல்லவர் என்றும், M.Lit பட்டதாரியென்றும், விமானம் ஓட்டும் அனுமதிப்பத்திரம் உள்ளவர் என்றும் , பாடும் வல்லமை மிக்கவர் என்றும் அப்பா அடிக்கடி நடிகர் ரஞ்சனைப் புகழ்வதுண்டு. அப்போதெல்லாம் ரஞ்சன், எம்.கே.ராதா & டி.ஆர்.ராஜகுமாரி நடித்த ஜெமினி ஸ்டியோ தயாரிப்பாக , எஸ்.எஸ்.வாசனின் இயக்கத்தில் தமிழ் , ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்து பெரும் வசூலைப்பெற்றுச் சாதனைகள் நிலைநாட்டிய சந்திரலேகா (1948) திரைப்படம் பற்றியும் குறிப்பிடுவார். அதன் காரணமாகவே நான் படம் பார்க்கும் பதின்ம வயதுகளில் மீள் வெளியீடாக வெளிவந்த சந்திரலேகா திரைப்படம் பார்த்தேன். பிரமித்தேன்.
செப்டம்பர் 12 பாடகி ஸ்வர்ணலதாவின் நினைவு தினம்.
என்ன குரல்! ஒரு தடவை கேட்டாலும் மறக்க முடியாத தனித்துவம் மிக்க குரல். மிகவும் சிரமமான நீண்ட வசனங்களை உள்ளடக்கிய பாடல்களையெல்லாம் மிகவும் இலகுவாகப் பாடிவிடுவார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, வங்கமொழி எனப் பன்மொழிகளிலும், 10,000ற்கும் அதிகமான பாடல்களைக் குறுகிய காலத்தில் பாடிப் புகழ் பெற்ற பாடகி.
'கருத்தம்மா' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடல் அவருக்கு இந்திய மத்திய அரசின் சிறந்த பாடகிக்கான தேசிய விருதினைப் பெற்றுத்தந்த பாடல். கவிஞர் வைரமுத்துக்குச் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினையும் பெற்றுத்தந்த பாடல். கூடவே சிறந்த குடும்பச்சித்திரத்துக்கான தேசிய விருதினையும் கருத்தம்மா பெற்றுள்ளது. 'கருத்தம்மா'வின் இசை ஏ.ஆர்.ரகுமான். இயக்கம் - பாரதிராஜா.
Friday, September 12, 2025
நினைவில் நிற்கும் யாழ் இந்து அதிபர் மு.கார்த்திகேசன் மாஸ்டர்!
யாழ் இந்துக் கல்லூரியின் அதிபராக திரு மு.கார்த்திகேசன் மாஸ்டர் சிறிது காலம் இருந்தது நான் யாழ் இந்துக் கல்லூரியில் படிப்பதற்காகச் சென்றிருந்த காலம். சிறுவனான எனக்கு அவருடன் உரையாடும் சந்த்ரப்பம் வாய்த்தது. சில நிமிடங்களே உரையாடியிருந்திருப்பேன். அப்போது அவர் யார் அப்பா என்று விசாரித்தார். கூறியதும் உடனேயே அப்பாவை , அப்பாவின் கல்வித் திறமையை வியந்து நினைவு கூர்ந்தார். து தான் அவருடன் படித்தவர் என்று கூறினார். இச்சில நிமிடங்கள் எனக்கு எப்போது அவரைப்பற்றி நினைத்தாலும் நினைவுக்கு வருவதுண்டு. அப்போது அவர் முகம் அவருக்கேயுரிய முறுவலுடன் காட்சியளித்ததும் நினைவுக்கு வருகின்றது.
நூற்றுக்கணக்கான மாணவர்களில் ஒருவனான என்னுடன் அவருக்குப் பேச வேண்டிய தேவை இல்லை. இருந்தாலும் யாழ் இந்து விறாந்தையில் எதற்காகவோ ஒடிக்கொண்டிருந்த , சிறுவனான என்னை இடை மறித்து உரையாடினார். அது அவரது ஆளுமையின் வெளிப்பாடு என்பதை இன்றுணர முடிகின்றது. அதனால்தான் அந்தச் சில நிமிடங்கள் இன்றும் என்னை அவரை நினைவு கூர வைக்கின்றது. வயது வேறுபாடின்றி மாணவர்களுடன் உரையாடும் அவரது அந்த ஆளுமை அவரது முக்கிய பண்புகளில் ஒன்று என்பதை உணர முடிகின்றது.
அப்போது அவரைப் பற்றிய முழுச் சித்திரத்தையும் நான் அறிந்திருக்கவில்லை. புரிந்துகொள்ளும் வயதுமில்லை. பின்னரே காலப்போக்கில் என் வயதின் வளர்ச்சியுடன் வாசிப்பும் வளர்ச்சியும் அதிகரித்தபோது அவரது மார்க்சியச் சிந்தனைகளையும், அது அவரை இலங்கைத் தமிழ் முற்போக்கு இலக்கிய, அரசியற் சூழலில் வைத்திருந்த இடத்தையும் அறிந்துகொள்ள முடிந்தது. வியக்க வைத்தது. இன்றுவரை வியந்து கொண்டிருக்கின்றேன். இலங்கைத்த்மிழ் இலக்கியத்தின் முற்போக்கு எழுத்தாளர்கள்தம் நனவிடை தோய்தல்கள் பலவற்றின் மூலம் 'கார்த்திகேசன் மாஸ்ட'ரின் ஆளுமையை இன்னும் விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது.
Thursday, September 11, 2025
மக்கள் கவிஞன் பாரதி! போற்றுவோம்!
[* டிஜிட்டல்'ஓவியத் தொழில் நுட்பம் - இரமணிதரன் கந்தையா.]
இன்று, செப்டம்பர் 11, மகாகவி பாரதியார் நினைவு தினம். கவிஞர்களில் என்னை ஈர்த்தவர்களில் முதலிடத்தில் இருப்பவர் பாரதியார்.
குறுகிய அவர் வாழ்வில் அவர் சாதித்தவை பிரமிப்பினையூட்டுபவை. , தேசிய விடுதலையை, வர்ண விடுதலையை, வர்க்க விடுதலையை, மானுட விடுதலையைப் பாடிய கவிஞர் அவர். நாட்டு, உபகண்ட , சர்வதேச அரசியலை நன்கு அறிந்தவர் அவர். அதை அவரது எழுத்துகள் புலப்படுத்தும். அவை கூடவே அவரது பரந்த வாசிப்பையும், சிந்தனையின் ஆழத்தையும் வெளிப்படுத்தும்.
அவரது சொற்கள் எளிமையானவை. தெளிவானவை. அதே சமயம் ஆழமானவை. அத்துடன் தர்க்கச்சிறப்பையும், இருப்பு பற்றிய தேடலையும் கொண்டவை. அத்துடன் அவை தீர்க்க தரிசனம் மிக்கவை. தான் வாழ்ந்த காலத்தை மீறிச் சிந்தித்த , செயற்பட்ட எழுத்தாளர் அவர். அதனால்தான் அவரால் அக்காலகட்டத்தில் தான் வாழ்ந்த சூழலை மீறிப் பெண் விடுதலைக்காகக் குரல் கொடுக்க முடிந்தது. தீண்டாமைக்கெதிராகக் குரல் கொடுத்த முடிந்தது.
கவிதை, புனைகதை, மொழிபெயர்ப்பு, அரசியல் ஆய்வு, வசன கவிதை என அவரது இலக்கியப் பங்களிப்பு பரந்து பட்டது. அவரது நினைவு நாளான இன்று எனக்குப் பிடித்த அவர்தம் கவிதை வரிகளில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கின்றேன். அத்துடன் டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்பவியலாளரான எழுத்தாளர் இரமணிதரன் கந்தையா (Ramanitharan kandiah) அண்மையில் வரைந்த பாரதியாரின் ஓவியத்தையும் நன்றியுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
Wednesday, September 10, 2025
டால்ஸ்டாயின் 'புத்துயிர்ப்பு' எனக்கு மிகவும் பிடித்த அவரது நாவல்! (ஓவியம் - AI)
இவரது படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்த படைப்பாகப் புத்துயிர்ப்பு (Resurrection) நாவலைக் கூறுவேன். அதற்கு முக்கிய காரணம் அது அறிமுகமானபொது எம் நாடிருந்த சூழல். எண்பதுகளின் ஆரம்பம். நாட்டில் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் ஆயுதமயப்படத்தொடங்கியிருந்த காலகட்டம். இளைஞர்கள் மக்கள் பற்றி, தொழிலாளர், விவசாயிகள் பற்றி, மார்க்சியம் பற்றியெல்லாம் சிந்திக்கத்தொடங்கியிருந்த காலம்.
டால்ஸ்டாய் மதவாதியாக இருந்தபோதும், தன் புனைகதைகளின் இறுதியில் மதரீதியிலான தீர்வினை எடுத்துரைத்தபோதும், அவரது கதைகளில் மானுடரின் வாழ்க்கை, வர்க்க வேறுபாடுகள் ஏற்படுத்தும் மானுடர் மீதான பாதிப்புகள், சமூக அநீதி கண்டு கொதிக்கும் மானுடச் சிந்தனைகள் இவையெல்லாம் நிறையவே இருக்கும். அவை என்னை மிகவும் கவர்ந்தவை.
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு உற்ப...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...


