Tuesday, March 13, 2018

காலத்தால் அழியாத கானங்கள் 1 - வ.ந.கிரிதரன்: -

1.  நாரே நாரே நாரே! நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே
இன்று இந்தியத்திரையுலகில் கொடி கட்டிப்பறக்கும் பாடகிகளில் எனக்கு மிகவும் பிடித்த பாடகியாக ஸ்ரேயா கோஷலைக் கூறுவேன். அவரது பிறந்த தினம் மார்ச் 12. மார்ச் 12, 1984 பிறந்த ஸ்ரேயா கோஷல் மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்தவர். 'சரிகமப' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றி சிறந்த பாடகியாகப் புகழ்பெற்று, திரைப்படத் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலியால் இனங்காணப்பட்டு (Sanjay Leela Bhansali ) , அவரது தேவதாஸ் இந்தித் திரைப்படத்தில் (2002) பாடகியாக அறிமுகப்படுத்தப்பட்டு, அப்படத்தின் மூலமே இந்திய மத்திய அரசின் மற்றும் ஃபிலிம்ஃபெயர் சஞ்சிகையின் சிறந்த பாடகிக்கான விருதினைப்பெற்றவர். குறுகிய காலத்தில் நான்கு தடவைகள் இந்திய மத்திய அரசின் தேசிய விருதினையும், ஆறு தடவைகள் ஃபிலிம்ஃபெயரின் விருதினையும் சிறந்த பாடகிக்காகப் பெற்றவர். இவை தவிர தமிழக அரசின் மாநில விருதினை இரு தடவைகளு, மூன்று தடவைகள் கேரள மாநில அரசின் விருதினையும் , மேலும் பல விருதுகளையும் பெற்றவர். இங்கிலாந்திலுள்ள Madame Tussauds அருங்காட்சியத்தில் மெழுகினால் சிலையாக வடிக்கப்பட்ட முதலாவது இந்தியப் பாடகர் என்ற பெருமையினையும் பெற்றவர். இவரது பாடல்கள் எல்லாமே கேட்பதற்கு இனிமையானவை. திரைப்படங்கள் மட்டுமல்லாது, சொந்தமாகவும் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் இசை ஆல்பங்கள் தயாரித்தும் வெளீயிட்டுள்ளார்.

இவர் பாடகர் உதய் மஜும்தாருடன் பாடிய மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான 'குரு' படத்தில் பாடிய 'நன்னாரே' பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. இப்பாடலின் சிறப்புகளாக ஸ்ரேயா கோஷலின் குரல், ஏ.ஆர்.ரகுமானின் இசை, கவிஞர் வைரமுத்துவின் வரிகள் , இயற்கையெழிலின் அழகிய காட்சிகளை வெளிப்படுத்தும் ஒளிப்பதிவு மற்றும் ஐஸ்வர்யா ராஜி`ன் நடிப்பு, நடன அசைவுகள் ஆகியவற்றைக் கூறுவேன்.

 பாடலில் பிடித்த வரிகள்:

"விடை கொடு வீடே
வாசல் தாண்டுகிறேன் - உந்தன்
திண்ணைக்கு நன்றி சொன்னேன்
கதவுகள் திறக்கும் வழி - என்
கனவுகள் பறக்கட்டுமே
போகின்ற வழி முழுக்க - அன்பு
பூக்களே மலரட்டுமே"

"வெண் மேகம்...
வெண் மேகம் முட்ட - ஹேய்
பொன் மின்னல் வெட்ட வெட்ட
பூவானம் பொத்துக் கொண்டதோ
வயல் வழி ஆடும்
வண்ணத் தும்பிகளே - உங்கள்
வால்களில் வசித்திருந்தேன்
சடுகுடு பாடும்
பிள்ளை நண்டுகளே - மணல்
வலைகளில் நான் இருந்தேன்
மலையின் தாய் மடியில் சிறு ஊற்றாய் நான் கிடந்தேன்
காதல் பெருக்கெடுத்து இங்கே நதியாய் இறங்குகின்றேன்
ஒரு காதல் குரல் பெண்ணை மயக்கியதே
ஒரு காதல் குரல் பெண்ணை மயக்கியதே
காட்டுப் புறா இந்த மண்ணை விட்டு விண்ணை முட்டும்"

மேற்கு வங்கம் இந்தியச் சினிமா உலகுக்குப்பல வகைகளிலும் பெருமை சேர்த்த மாநிலம். இயக்குநர் சத்யஜித் ராயை வழங்கிய மாநிலம். நடிகை ஜெயா பாதுரியை வழங்கிய மாநிலம். இலக்கியத்துக்குப் எழுத்தாளர்கள் பலரை வழங்கிய மாநிலம். அம்மாநிலம் இந்தியக் கலையுலகுக்கு வழங்கிய இன்னுமொரு கொடை: ஸ்ரேயா கோஷல். இவர் உண்மையிலேயே இந்தியாவின் புதல்வி. பாடகி ஸ்ரேயா கோஷலின் பிறந்ததினப் பாடலாக இப்பாடலைக் கேட்போமா?



பாடல் வரிகள் முழுமையாக..:

நன்னநாரே நாரே நாரே நாரே
நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே

வெண் மேகம் முட்ட முட்ட
பொன் மின்னல் வெட்ட வெட்ட
பூவானம் பொத்துக் கொண்டதோ
பன்னீரை மூட்டை கட்டி
பெண் மேலே கொட்டச் சொல்லி
விண் இன்று ஆணை இட்டதோ
மேகத்தின் தாரைகளில் பாய்ந்தாடப் போகின்றேன்
ஆகாயச் சில்லுகளை அடிமடியில் சேமிப்பேன்
மேகத்தின் தாரைகளில் பாய்ந்தாடப் போகின்றேன்
ஆகாயச் சில்லுகளை அடிமடியில் சேமிப்பேன்
ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில்
மனசெல்லாம் ஜில்

நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே

வெண் மேகம்...
வெண் மேகம் முட்ட - ஹேய்
பொன் மின்னல் வெட்ட வெட்ட
பூவானம் பொத்துக் கொண்டதோ

வயல் வழி ஆடும்
வண்ணத் தும்பிகளே - உங்கள்
வால்களில் வசித்திருந்தேன்
சடுகுடு பாடும்
பிள்ளை நண்டுகளே - மணல்
வலைகளில் நான் இருந்தேன்
மலையின் தாய் மடியில் சிறு ஊற்றாய் நான் கிடந்தேன்
காதல் பெருக்கெடுத்து இங்கே நதியாய் இறங்குகின்றேன்
ஒரு காதல் குரல் பெண்ணை மயக்கியதே
ஒரு காதல் குரல் பெண்ணை மயக்கியதே
காட்டுப் புறா இந்த மண்ணை விட்டு விண்ணை முட்டும்

நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே

விடை கொடு சாமி
விட்டுப் போகின்றேன் - உந்தன்
நட்புக்கு வணக்கம் சொன்னேன்
விடை கொடு வீடே
வாசல் தாண்டுகிறேன் - உந்தன்
திண்ணைக்கு நன்றி சொன்னேன்
கதவுகள் திறக்கும் வழி - என்
கனவுகள் பறக்கட்டுமே
போகின்ற வழி முழுக்க - அன்பு
பூக்களே மலரட்டுமே
இந்தச் செல்லக் கிளி மழை மேகத் துளி
இந்தச் செல்லக் கிளி மழை மேகம் விட்டுத் துள்ளும் துளி

நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே
நன்னாரே நாரே நாரே நாரே நாரே நாரே நாரே நாரே
நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே


2. காலத்தால் அழியாத கானங்கள்: "ஒரு பொய்யாவது சொல் கண்ணே…உன் காதலன் நான் தான் என்று…"

சுற்றிவர மானுடர் வாழும் உலகோ பல்வகை அனர்த்தங்களால் நிறைந்து கிடக்கின்றது. இந்நிலையில் சிறிது இசையில் நாம் எம்மை மறப்போமா?

எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் பிரசாந்த். நடிப்புத்திறமையும், நடிகர் ஒருவருக்குரிய கம்பீரமும் மிக்க பிரசாந்த் ஏன் தமிழ்த்திரையுலகில் நின்று பிடிக்கவில்லையென்று நினைத்துப் பார்ப்பதுண்டு. இப்பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் இப்பாடலைக் கேட்கும் சமயங்களில் இப்பாடல் வரிகளை இரசித்துக் கேட்பதுண்டு. கவிஞர் வைரமுத்துவின் கவித்துவம் மிக்க வரிகளுக்காகவும், அனுபவ பூர்வமான வரிகளுக்காகவும் , பாடகர்களின் குரலினிமைக்காகவும் , ஏ.ஆர்.ஆரின் இசைக்காகவும் இப்பாடல் எனக்குப் பிடித்துப்போன பாடல்களிலொன்றாகி விட்டது.

"இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ கண்மணியின் குழல்
செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ
ஓ விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள்
கொண்டு கைரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத் தங்கம்
தங்கம் பூசித் தோள் செய்தானோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ"

என்னும் கவிஞர் வைரமுத்துவின் வரிகள் கவித்துவ வைரங்கள் என்பேன். இப்பாடலில் பிடித்துள்ள அடுத்த வரிகள்:

"ஒரு பொய்யாவது சொல் கண்ணே…உன் காதலன் நான் தான் என்று…
அந்த சொல்லில்…அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்…அந்த சொல்லில் உயிர்
வாழ்வேன்"

காதல் வயப்பட்ட ஆண் உள்ளம் அக்காதல் நிறைவேறாதவிடத்து , அக்காதல் ஒரு தலைக்காதலாக இருந்து விடின் வேண்டுவது இதைத்தான். நீ கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, நான் தான் உன் காதலன் என்று ஒருமுறையாவது சொல். அதுவே பொய்யாயிருந்தால் கூடப் போதும் ஆனால் அதை நீ சொல். அதுவே போதுமென்று நினைக்கும். இதனைப் பலர்
அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பார்கள்.:-) ஏனெனில் பெரும்பான்மையான முதற் காதல் அனுபவங்கள் வெற்றியடையவதில்லை. கவிஞர் வைரமுத்துவுக்கும் இவ்விதமான அனுபவம் கிடைத்திருக்கும் போலும். ஏனெனில் இவ்விதமான வரிகள் அனுபவ பூர்வமானவை.


ஒரு பொய்யாவது சொல் கண்ணே…உன் காதலன் நான் தான் என்று…
அந்த சொல்லில்…அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்…அந்த சொல்லில் உயிர்
வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்

பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இதைத்
தாங்குமா என் நெஞ்சம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்

பெண்மையும் மென்மையும் பக்கம் பக்கம்தான் ரொம்பப் பக்கம்பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும் வேறுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால்
ரெண்டும் வேறுதான்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்

இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ கண்மணியின் குழல்
செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ
ஓ விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள்
கொண்டு கைரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத் தங்கம்
தங்கம் பூசித் தோள் செய்தானோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்

நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே அருகில் காட்டியது
நீதானே
மலரின் முகவரிகள் சொன்னது நீதானே
ஓ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும் காவிரி ஊற்றைத்
கண்ணில் கையில் தந்தவள் நீதானே
ஆனால் பெண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
காதல் கண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்

அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் நான் உயிர் வாழ்வேன்
உயிர் வாழ்வேன் அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில்
அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில்
சொல்லில் அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன்

3. காலத்தால் அழியாத கானங்கள்: "இது ஒரு பொன்மாலை பொழுது..."

எனக்குப் பிடித்த எஸ்.பி.பி / இளையராஜா / வைரமுத்து கூட்டணியிலுருவான மிகச்சிறந்த பாடலாக இதனையே கருதலாமென்று தோன்றுகின்றது. காரணம் பாடலிலுள்ள கவித்துவம், தத்துவம், மற்றும் இயற்கை பற்றிய படிமங்கள் ஆகியவையே. அந்தி வானம் சிவந்து கிடக்கின்றது. இன்னும் சிறிது நேரத்தில் இரவு கவியப்போகின்றது. கவிஞரின் கற்பனையோ சிறகடிக்கின்றது. எப்படி? அந்தி வானத்தின் சிவப்பானது நாணும் வானப்பெண்ணின் வதனத்தில் படியும் சிவப்பாம். இரவு என்னும் கரிய ஆடையை இன்னும் சிறிது நேரத்தில் அணியப்போகும் வானப்பெண்ணின் நாணச்சிவப்பு. கவிஞரின் கவித்துவத்தில் மனம் சிறகடிக்கத்தொடங்குகின்றது.

"இது ஒரு பொன்மாலை பொழுது...
வானமகள், நாணுகிறாள்...
வேறு உடை, பூணுகிறாள்..."

கவிஞரின் கற்பனையோ மேலும் மேலும் சிறகடிக்கத்தொடங்குகின்றது. இரவினை கரிய ஆடையாக, வான மகள் அணியப்போகின்ற ஆடையாகப் பார்த்த கவிஞர் அதனை இரவு வாசலாகக் காண்கின்றார். ராத்திரி வாசல் அற்புதமான படிமம். பல்வகை வர்ணங்கள் மலிந்த வானத்தைக் கொண்ட பொன்மாலைப்பொழுது. அவ்வர்ணங்களை இராத்திரி வாசலில் இடப்படும் கோலங்களாகக் கவிஞர் காண்கின்றார். வானத்தை வானமகளாகப் பார்த்த கவிஞரின் கற்பனை இன்னுமொரு கோணத்துக்குத் திரும்புகின்றது. வரப்போகும் இரவுடன் இணைக்கும் பாலமாக அதனைக் காண்கின்றார். வானப்பாலம். இன்னுமொரு கவித்துவம் மிக்க படிமம். பொதுவாகக் கோலமிடுவது காலைப்பொழுதுகளில். ஆக இரவினைக் கவிஞர் காலைப்பொழுதாகவும் கவிஞர் காண்கின்றார். நேரடியாகக் கூறாவிட்டாலும், அவ்விதமே கருத வேண்டும். அக்காலைப் பொழுதுக்குச் செல்வதற்குப் பாலமாக அந்தி வான் விளங்குகின்றது. இரவுக்காலை என்பது அற்புதமான படிமம். இதனைக் கவிஞர் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் எம்மை ஊகிக்க வைத்து விடுகின்றார். இரவுக்காலையை, இரவுப்பூபாளத்தை வரவேற்றுப் பட்சிகள் தாளமிடுகின்றன; பூமரங்கள் சாமரங்களாகி வீசுகின்றன. என்னே கற்பனை! கவிப்பேரரசுவின் கவித்துவத்துக்கு எடுத்துக்காட்டான வரிகள்.

அடுத்து வரும் வரிகளே இப்பாடலில் எனக்கு மிகவும் , மிகவும் பிடித்த வரிகள். அவை:

"வானம் எனக்கொரு போதி மரம்...
நாளும் எனக்கது சேதி தரும்...
ஒரு நாள் உலகம் நீதி பெறும்...
திருநாள் நிகழும் தேதி வரும்...
கேள்விகளால், வேள்விகளை... நான் செய்தேன்..."

விரிந்திருக்கும் வானம், குறிப்பாகச் சுடர்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானம் போதிப்பவை பல. பிரபஞ்சத்தின் ஒளிவருடக் காலவெளி நாட்டியத்தை எமக்குப் புரிய வைக்கின்றன. இதன் மூலம் மானுட இருப்பைப்பற்றிப் போதிக்கும், ஞானத்தைத் தரும் போதி மரங்களாகி, அப்போதி மரங்களின் கீழ் ஞானம் பெறும் நவீன புத்தர்களாக மானுடரெம்மை ஆக்கி விடுகின்றன. இந்த ஞானத்தை மட்டும் மானுடராகிய நாம் அனைவரும் அடைந்து விட்டால் பிறகு இப்புவியில்தான் பிரிவுகள் ஏது? மோதல்கள் ஏது? இரத்தக்களரிகள், யுத்தங்கள்தாம் ஏது? உலகம் நீதி பெறும் அந்நாள் , அத்திருநாள் நிகழும் தேதி நிச்சயம் வரும் அதற்கு வானம் போதிமரமாகிப் போதிக்கும் ஞானம் எமக்கு நிச்சயம் உதவும். இவ்விதமாகப் பல கேள்விகள் கவிஞரின் கற்பனையில் தோன்றுகின்றன. அக்கேள்விகளால் அவர் வேள்விகள் செய்கின்றார். அவ்வேள்விகளால் எம் சிந்தையிலும் இன்பம் மட்டுமல்ல ஞானமும் சுடர்கின்றது.

முழுமையான பாடல் வரிகள்:

இது ஒரு பொன்மாலை பொழுது...
வானமகள், நாணுகிறாள்...
வேறு உடை, பூணுகிறாள்...
இது ஒரு பொன்மாலை பொழுது...

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்...
ராத்திரி வாசலில் கோலமிடும்... (2)
வானம் இரவுக்கு பாலமிடும்...
பாடும் பறவைகள் தாளமிடும்...
பூமரங்கள், சாமரங்கள்... வீசாதோ...

வானம் எனக்கொரு போதி மரம்...
நாளும் எனக்கது சேதி தரும்... (2)
ஒரு நாள் உலகம் நீதி பெறும்...
திருநாள் நிகழும் தேதி வரும்...
கேள்விகளால், வேள்விகளை... நான் செய்தேன்...

ngiri2704@rogers.com

No comments:

வ.ந.கிரிதரன் - நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!

எழுத்தாளர் மாலன் , இந்திய சாகித்திய அமைப்புக்காகத் தொகுத்த  'புவி எங்கும் தமிழ்க் கவிதை'த் தொகுப்பில் இடம் பெற்றுள்ள  எனது கவிதையான ...

பிரபலமான பதிவுகள்